இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?
ஏன் சார் ஏன்….
இத்த தான்…

திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..

நன்றி : http://priyatamil.wordpress.com/page/2/

ஏழைகளின் ஆசான்... ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'-க்கு டைம் இதழ் சிறப்பிடம்

பீகாரின் பாட்னாவில் உள்ள ஏழை மாணவர்களுக்கான இலவச ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு பயிற்சி மையமான 'சூப்பர் 30'-க்கு சிறப்பிடம் தந்து கெளரவித்திருக்கிறது, பிரபல 'டைம்' இதழ்.

டைம் இதழின் அண்மையப் பதிப்பில் வெளியாகியுள்ள 'லிஸ்த் ஆஃப் பெஸ்ட் ஆஃப் ஆசியா 2010' (Best of Asia 2010) பட்டியலின் பெஸ்ட் ஃபார் தி மைண்ட் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, 38 வயது கணித வல்லுனரான ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'

அதென்ன 'சூப்பர் 30'?

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.

பீகாரின் பாட்னாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி தனது 'ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமெடிக்ஸ்' மூலம் செயல்படுத்தி வருபவர் ஆனந்த் குமார்.

இந்த ஏழு ஆண்டுகளில், சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்ற 210 மாணவர்களில் 183 பேர் ஐ.ஐ.டி. மையங்களில் சேர்ந்துள்ளனர். துவக்க ஆண்டில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலை படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டில் 30 மாணவர்களுமே தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி விகிதம் என்ற சாதனை நிகழ்ந்தது.

ஆனந்த் குமாரின் பயிற்சி மையத்தில் படித்து ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்தவர்கள், தொழில்நுட்ப வல்லுவனர்களாக வலம் வருபவர்கள் அனைவருமே துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுநர், நிலமற்ற விவசாயத் தொழிலாளி என பொருளாதாரத்தில் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோரின் திறமைமிகு பிள்ளைகள்!

இளம் கணித வல்லுனரான ஆனந்த் குமார், கெம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பினார். ஆனால், அவருக்கு உரிய ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாகவே தாயகத்தில் வறுமையால் முன்னேற முடியாத மாணவர்களுக்கு தனது உழைப்பை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த மையத்தில் சேர்வதற்கே மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கென தனியாக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் திறமையான மாணவர்களை தேர்வு செய்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவர்கள் நாளொன்றுக்கு 16 மணி மணி நேரம் படிப்பதற்கு நேரத்தை செலவிட வேண்டும் என்பதுதான் ஒரே முக்கிய நிர்பந்தம். தேர்வு முடியும் வரை அவர்களுக்கு பயிற்சி, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசம்!

தற்போது தனது கல்விப் பணி முயற்சிக்கு டைம் இதழ் மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆனந்த் குமார், "இது மிகப் பெரிய கெளரவம். ஏழை மாணவர்களுக்கு மென்மேலும் உறுதுணைபுரிந்திட இந்த சர்வதேச அங்கீகாரம் மிகுந்த தூண்டுகோலாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

ஆனந்த் குமாரின் உயரிய முயற்சிகளை இந்திய அரசும் கண்டுணர்ந்துள்ளது. ஐ.ஐ.டி.யில் சேர விழையும் ஏழை மாணவர்களுக்கு உதவும் 'சூப்பர் 30' திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட தமிழ்நாடு, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, இம்மூன்று மாநில அரசுகளும் விடுத்த அழைப்பை ஏற்று உரிய வழிகாட்டுதல்களை நேரிலேயா வந்து வழங்கியிருக்கிறார், ஆனந்த் குமார்.
கடந்த பிப்ரவரியில் ஆனந்த் குமாரை அழைத்துச் சந்தித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். அப்போது, அவரது கல்விப் பணியைப் பாராட்டிய பிரதமரிடம், கூட்டு நுழைவுத் தேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரைக்க தவறவில்லை.

உரிய அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைக் கொண்டு, சூப்பர் 30 திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார், ஆனந்த் குமார். மிகக் குறைந்த கட்டணத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதன் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டு இந்த இலவச பயிற்சி மையத்துக்கான நிதி ஆதாரத்தை வருகிறார்கள்.

"மாணவர்களுக்கு ஆடிப்படைக் கல்வியைக் கூட அளிப்பதற்கு போராடும் நாட்டில், மனித ஆற்றலால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்க 'சூப்பர் 30' - ஒரு சிறந்த எடுத்துக்காட்டு," என்ற டைம் இதழின் புகழாரத்துக்கு சாலப் பொருத்தமான ஆனந்த் குமாரே நிஜ கல்வித் தந்தை!

ஆனந்த் குமாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்... http://www.super30.org/

நன்றி : Vikatan

யார் நாத்திகன் - இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவனா?

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கடவுள் இல்லைனு சொல்ற நம்ம பகுத்தறிவாதிகள் இந்து மதத்தை மட்டுமே இழிவாக பேசுகிறார்களே தவிர மற்ற மதங்களாகிய கிறித்துவ மதத்தையோ இஸ்லாம் மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையுமே குறித்து வாயே திறப்பதில்லை.

ராமரையும் மற்ற இந்து கடவுள்களையும் கிண்டலடிக்கும் கருணாநீதி கூட ரம்ஜான் சமயத்தில் அவர்கள் இடத்திற்கு சென்று கூழ் குடித்து நபிகள் நபிகளின் பெருமைகளை பேசி மகிழ்கிறார். கிறித்துவ பாதிரியார்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சென்று அவர்கள் செய்யும் சேவையை புகழ்ந்து பேசுகிறார்.இதேப்போல இவர் என்றாவது இந்து கோவிலுக்கு வந்து கும்பாபிஷேகத்தையோ இல்லை கொடியேற்றத்தையோ துவங்கி வைத்திருக்கிறாரா?

மூடநம்பிக்கையை எதிர்கிறேன் என்றால் அதுதான் எல்லா மதத்திலும் இருக்கிறதே.

சரி இந்த அரசியல்வாதிகள் சிறுபான்மையர் வாக்கிற்காகதான் இப்படி பேசுகிறார்கள் என்றால், அரசியலில் அல்லாத பகுத்தறிவாதிகள்(???) கூட இதெப்போல் தான் பேசுகிறார்கள். உதா: சத்தியராஜ். கடவுள் இல்லைனு சொல்ற இவர் இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் இழிவாக பேசியதில்லை. சரி இவர்கள் அனைவரும் மக்களின் அறியாமையை போக்க பாடு படுகிறேனு மேடையில் வாய் கிழிய பேசுகிறார்களே, அவர்கள் வீட்டிற்கு போய் பார்த்தால் அவர் மனைவி, பிள்ளைகள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே.

முதல்ல உங்க வீட்டை திருத்திங்கள் அப்புறமா மக்களை திருத்தலாம்னு சொன்னா, நான் அவங்க சுதந்திரத்தில் தலையிடுவதில்லைனு ஒரு சப்பைகட்டு. உங்க பொண்டாட்டு புள்ளைகள் சாமி கும்பிட்டு புஜை பண்ணுனா அது அவங்க நம்பிக்கை, அதையே மக்கள் பண்ணுனா அது மூடநம்பிக்கை. இது என்னங்க நியாயம்?

Ok Coming back to the point... மற்ற மதத்தை பற்றி வாயே திறக்காமல் இந்து மதத்தை மட்டுமே கிண்டல் அடிப்பதற்க்கு காரணம் என்ன?

பயம்.

இந்து மதத்தை தவிற வேறு எந்த மதத்தை கிண்டல் செய்தாலும் அவர்கள் மறுநாள் நிம்மதியாக நடமாட முடியாது. ஏனெனில் அவர்களுக்கு அவர்கள் மதம் மீது அவ்வளவு பற்று, அதை யாரேனும் இழிவாக பேசினால் ஒன்று கூடி எதிர்பார்கள். ஆனால் இதை இந்து மதத்தில் நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி யாராவது ஒன்று கூட எதிர்தால் அவர்கள் மதவாதிகள், பரதேசிகள் என முத்திரை விழும்.

எவன் ஒருவன் உலகில் எந்த கடவுளும் இல்லை, எல்லாம் மதங்களும் பொய், அவையெல்லாமே மூடநம்பிக்கை என்று சொல்கிறார்களோ அவர்கள் மட்டுமே நாத்திகன் என்று கூற அருகதை உள்ளது. மற்றவர்கள் எல்லாருமே தொடை நடுங்கிகளே.

நன்றி : http://bleachingpowder.blogspot.com/2008/07/blog-post_30.html