சரத்பாபு.

இ. சரத்பாபு என்ற 27 வயது இளைஞர் தென் சென்னையில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
இவரை பற்றி ஒரு சிறு குறிப்பு:
சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் பிறந்து, மிகவும் வறிய சூழலில் வளர்ந்து கடின உழைப்பால் பிட்ஸ் பிலானி பல்கலையில் பொறியியல் மற்றும் ஆமதாபாத் ஐஐஎம்- மையத்தில் நிர்வாகவியல் பட்டம் வென்றவர் சரத் பாபு.

இவரது தாய் அங்கன்வாடியில் பணியாற்றி, அத்துடன் இட்லி கடை நடத்தி இவரைப் படிக்க வைத்துள்ளார். புக் பைண்டிங் செய்து அதன் மூலம் கிடைத்த வருவாயில் மேல் நிலைப் படிப்புகளையும் பின்னர் கல்வி உதவித்தொகை மூலம் உயர் கல்வியையும் தொடர்ந்தவர்.

போலாரிஸ் ) நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியபிறகு பின்னர் பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக வேலையை உதறித் தள்ளி சொந்தமாகத் தொழில் தொடங்கியவர்.ரூ. 2,000 முதலீட்டில் இவர் தொடங்கிய ஃபுட்கிங் கேட்டரர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இன்று 200 பேர் பணியாற்றுகின்றனர்.

கல்லூருகளில் தனது வெற்றி ரகசியங்களை மாணவர்களுடன் பகிர்ந்து வரும் இவர் 20 லட்சம் இளைஞர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கத் திட்டமிட்டுள்ளார். மடிப்பாக்கத்தில் இன்னமும் குடிசை வீட்டில் வசித்தாலும், இவரது நிறுவன வருவாய் சில கோடிகளைத் தொட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்துதான் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை பற்றி இந்த வார ஜூவியில் வந்த கட்டுரை

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று சினிமாவில் வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... நிஜ வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள். படித்தவர்களும் பண்புள்ளவர்களும்கூட இந்த சாக்கடைக்கு பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என காலெடுத்து வைத்திருக்கிறார் 29 வயதே ஆன சரத்பாபு.

பிரியாணி, குவார்ட்டர் பாட்டில் என முகம் மாறிப் போயிருக்கும் இன்றைய அரசியலில், அறிவையும் உழைப்பையும் கேடயமாகக்கொண்டு தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சரத்பாபு.
நிர்வாக இயல் படிப்புக்கு பெயர் பெற்ற அகமதாபாத் ஐ.ஐ.எம்-மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற சரத்பாபு, புகழ் பெற்ற 'பிட்ஸ்-பிலானியில்' இன்ஜினீயரிங் பட்டமும் வாங்கியவர். ஐ.ஐ.எம்-மிலும், பிட்ஸ்-பிலானியிலும் படித்த அத்தனை பேரிடம் இல்லாத ஒரு கூடுதல் 'தகுதி' சரத்பாபுவுக்கு உண்டு. ஆம். சரத்பாபு மடிப்பாக்கத்தில் ஒரு குடிசையில் பிறந்தவர்! அவருடைய அம்மா மடிப்பாக்கத்தில் தெருவோரம் சிறு இட்லி கடை நடத்தியவர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் இத்தனை பட்டங்களையும் பெற்றார் சரத்பாபு. பட்டங்கள் மட்டுமா?
இந்திய அளவில் இளைஞர்களின் போற்றுதலுக்குரிய அடையாளம் என்ற புகழ்ச்சி மிக்க 'யூத் ஐகான்' விருதும் பெற்றவர் சரத்பாபு. ஐ.ஐ.எம்-மில் படித்தவர்களெல்லாம் பல லட்சம் மாத சம்பளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் செட்டில் ஆவது வழக்கமாக இருக்க... சரத்பாபு எடுத்தது மாறுபட்ட முடிவு. பொதுவாக ரிப்பன் வெட்டும் எந்த நிகழ்ச்சிக்கும் போகாத இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சரத்பாபு முதல் முதலாக காலேஜ் ஒன்றில் கேன்டீன் துவங்கியபோது அதன் துவக்க விழாவுக்கு வந்து இவரை உற்சாகப்படுத்தினார்.
இத்தனை தகுதிகள் இருந்தாலும், இதோ சாந்தமாக தென்சென்னை தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் சரத். பிரசாரம் முடித்த ஒரு மாலைப் பொழுதில், அவருடைய ராயப்பேட்டை அலுவலகத்தில் அவரை சந்தித்தோம்.

ஒரு டிபிக்கல் அரசியல் கட்சி அலுவலகம் போல் இல்லாமல், ஒரு காலேஜ் காம்பஸ் மாதிரி இருந்தது அலுவலகம். கம்ப்யூட்டரில் வாக்காளர் பெயர் பட்டியலை பார்த்து விவாதித்தபடி, தென்சென்னை வரைபடத்தை டேபிளில் விரித்து வைத்து, நண்பர்களுடன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலைகளுக்கிடையே நம்மிடம் பேசினார் சரத்பாபு."என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.

ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.
பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..? அதனாலதான் தென்சென்னை வேட்பாளரா போட்டி போடறேன். நான் போட்டி போடறேன்னு கேள்விப்பட்டதுமே, எனக்கு அறிமுகம் இல்லாதவங்ககூட என்னோட சேர்ந்து எனக்காக வாக்கு சேகரிக்கிறாங்க. அரசியல்னாலே ஒதுங்கிப் போறவங்களை, குறிப்பா இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து அதை சேவை செய்கிற தளமா மாத்தணும். அதுதான் என்னோட ஒரே திட்டம்!" என நெஞ்சை நிமிர்த்துகிறார் சரத்பாபு.

என்ன சொல்ல..?

ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா! உறுதி கொண்ட நெஞ்சினாய் வா... வா... வா!

எங்கே பிராமணன்?

நான் பிராமணன் அல்ல. நான் பிராமணன் என்று கூறியிருக்க முடியாது, மாட்டேன் - இது தன்னிலை விளக்கம் நீங்களும் பிராமணனாக இருக்க முடியாது. - இது உஙகள் நிலை நான் விளக்ககுவது.ஏன், இன்றைய காலத்தில் யாருமே இருக்கமுடியாது. - இது பொதுவான பிறனிலையை நான் விளக்குவது.

பிராமணன் பொய் சொல்லக்கூடாது. இன்றைய உலகில், பிராமணன் என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி க்ளெய்ம் செய்யும் அந்த வினாடியே அதற்கு தகுதியற்றவர் என்று ஊர்ஜிதப்படுத்திவிடுகிறார்கள். ஏன்? இது வேண்டுமென்று செய்வதல்ல. பாவம், கோட்பாடுகளை சரிவர புரிந்துக் கொள்ளாததனால் தான்.
”சிம்ப்ள் லாங்குவேஜ்ஜில்” - ஆங்?( huh? என்பதின் தமிழாக்கம்) -சொல்லுகிறேன். புனிதமான நாலு வாழ்க்கை வழிமுறைகள் மனுஸ்மிருதியில் சொல்லி வைக்கப்பட்டது. ஹயரார்க்கி படி இது,

பிராமண வழி
வேத சாஸ்திரங்களை கற்க்கவும், கற்றதனால் அடைந்த ஞானத்தை புகட்டி நாடு நல்வழியில் செல்ல உதவி செய்வதும், பொய் சொல்லாமலிருப்பதும், யாசகம் செய்தே தன் பசி ஆறிக் கொள்வதும் (சாதரணக் காரியமில்லை சாமி)

ஷத்திரிய வழி
நாட்டை செவ்வனே ஆள்வதும், தன் பிரஜைகளை பசியில்லாமல் வைத்துக்கொள்ள பாடுபடுவதும், பகைவர்களிடமிருந்து அவசியம் நேர்ந்தால் போரிட்டு நாட்டை பாதுகாப்பதும் (இது முதல் வழியை காட்டிலும் கடினம் போல் தோன்றுகிறது)

வைசிய வழி
நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் வாணிபத்தில் ஈடுபட்டு பொருளீட்டுவதும், அரசாஙத்திற்க்கு வரி வருவாய் பெருக்குவதும் (ஒர் அளவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது)

சூத்திர வழி
முதல் மூன்று பிரிவிற்க்கும் வேண்டிய சில பனிகள் செய்வதும், பிற சில பனிகளும் - night soil உட்பட (இது எல்லாவற்றையும் விட கடினம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது என்ன பிரமாதம் என்று தோன்றும். யோசித்துப்பார்த்தால், நாம் மற்ற மூன்றும் செய்ய ஒத்துக்கொண்டாலும், இந்த வேலை செய்ய பயங்கர strike செய்வோம்)
என்று அழைக்கப்படும். (இது போக பஞ்சமர் என்று ஒன்று உண்டு. அது இங்கு தேவை இல்லை.)

இது புனிதமாக போற்றப்பட்டு மிகவும் நெருக்கமாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. எது கடினம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த hierarchyஐ ஏற்றுக் கொண்டு இங்கு விவாதிப்போம்.

பிறப்பால் ஒருவர் இந்த நான்கில் எவற்றிலும் வகைபடுத்தப்படமாட்டார். அவரவர் கடைபிடிக்கும் வழிமுறைப் படியே வகைப்படுத்தப்படுவார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி தாவலாம். கீழ் league இலிருந்து மேல் leagueற்க்கு போகலாம். ஷத்ரிய விஸ்வாமித்ரர் பிராமண ரிஷி ஆக முடிந்தது இதனால் தான்.மேல் leagueஇலிருந்தும் கீழ் leagueற்க்கு ஜம்ப் பண்ணலாம்.

இந்த விதிமுறைகளை இன்று ஏற்று கொள்ளும் பட்ச்சத்தில் எல்லோருமே வைசிய வழியைத் தான் பின் பற்றுகிறோம். கோவிலில் அர்ச்சகர் சம்பளம் வாங்கிக் கொண்டே பூஜை செய்கிறார். President, PM, MP, CM, MLA சம்பளம் வாங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். சூத்திரர் என்று இன்று வகைப்படுத்தப்படுபவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். எல்லோரும் தங்கள் serviceஐ விற்பனை செய்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்ன? எல்லோரும் வியாபாரிகளே. அல்லது எல்லோரும் வைசியர்களே. (ஆனாலும் நாம் ஒழுக்கமான வைசியர்கள் இல்லை என்பதுஎன் அபிப்ராயம். அதாவது, அந்த வழிமுறையைக்கூட விதிகளுக்குட்பட்டு செய்யவில்லை )

இது அல்லாமல் ”நான் பிராமணன்” என சொல்பவர்கள் அந்த வார்த்தையின் புனிதத்தை கெடுக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றும். வேண்டுமானால், ஐயர் என்றோ ஐயங்கார் என்றோ சொல்லிக் கொள்ளலாம். அது வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தையே தவிர இந்த புனித அமைப்புகளை refer செய்யும் வார்தைகளல்ல. (நண்பன் RV தன்னை ஐயர் என்று சொல்லும் பொழுது இவன் மட்டும் தான் இந்த வார்தைகளை சரியாக பி்ரயோகப்படுத்துவதாக எனக்குப் படும்.)
சூத்திரர் என சொல்லிகொள்பவர்களும் அதன் புனிதத்தை கெடுக்கிறார்கள். அவர்களும் வியாபாரிகளே.

இன்று வர்ணங்களை நேசிப்பவர்கள் வேண்டுமானால் தங்களை இப்படி சொல்லிகொள்ளலாம் - வைசிய நாடார், வைசிய ஐயர், வைசிய ஐயங்கார், வைசிய பிள்ளை, வைசிய xyz என்று.

ஓட்டு போடாம வூட்லயே இருந்துடலாமா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் சுமார் நூற்றுக்கு 35, 40 பேர் இப்படித்தான் செய்கிறார்கள். ஓட்டு போடாம வூட்டுலயே இருந்துவிடுகிறார்கள். இதில் நோயாளிகள், பெரும்பணக்காரர்கள் முதலியவர்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட, நிச்சயம் 20,30 பேர் ஓட்டுச் சாவடிக்குப் போய் ஓட்டு போட முடியக் கூடியவர்கள்தான்.

இவர்கள் ஓட்டுப் போட செல்லாததினால், அரசியல் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது. பல தொகுதிகளில் நூற்றுக்கு 60 பேர் வாக்களிக்கிறார்கள். போட்டியிடும் மூன்று பெரிய வேட்பாளர்கள் இந்த 60 ஓட்டை பிரித்துக் கொள்ளும்போது 25 முதல் 30 ஓட்டு வாங்கியவர்தான் அதிக ஓட்டு பெற்று ஜெயித்தவர் ஆகிறார். அதாவது தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 25 முதல் 30 சதவிகிதம் மட்டும் வாங்கி அவர்கள் எல்லாருக்கும் பிரதிநிதியாகிவிடுகிறார்.

ஓட்டு போடவே போகாதவர்கள் எண்ணிக்கையை விடக் குறைவான ஓட்டு வாங்குகிறவர் ஜெயித்தவராவது என்பது எவ்வளவு அபத்தமானது ! ஆனால்

அதுதான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது.
ஓட்டு போடச் செல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம், ‘எந்தக் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை’ என்பதுதான். அதை ஓட்டுச் சாவடியிலேயே சென்று பதிவு செய்ய சட்டமே அனுமதித்திருக்கும் வழிதான் 49 ஓ. இது இருப்பது தெரியாமல் பல பேர் ஓட்டு போடப் போகாமல் இருந்திருக்கலாம். அவர்களில் சிலருடைய ஓட்டையெல்லாம் கள்ள ஓட்டு போடுவதில் தேர்ந்த சில கட்சிகள் தங்களுக்குப் போட்டுக் கொன்டும் இருக்கலாம்.

இந்தச் சூழ்நிலையில்தான் 49 ஓ வை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஓட்டை இன்னொருத்தர் போடாமல் தடுப்பதற்கும் , உங்களுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்பதை , சும்மா டீக்கடையிலும் ஆபீஸ் கேண்ட்டீனிலும் சொல்லி வீணாக்காமல், சம்பதப்பட்ட கட்சிகளுக்கே உறைக்கிற மாதிரி சொல்லவும் சிறந்த வழி 49 ஓ தான்.

இதைப் பற்றி பலரிடமும் சொல்லும்போது உடனே மூன்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றையும் சில பேர் ஏதோ நானும் அ.கி. வேங்கடசுப்பிரமணியனும்தான் தேர்தல் ஆணையர்கள் பதவிகளில் இருப்பது போல நினைத்துக் கொண்டு வேறு கேட்கிறார்கள்.

முதல் கேள்வி: எத்தனை பேர் 49 ஓ போட்டாங்கன்னு அறிவிப்பீங்களா மாட்டீங்களா ?

அடுத்த கேள்வி: ரகசியமா ஓட்டிங் மெஷின்லயே போடற மாதிரி ஒரு பட்டன் வெச்சிட்டா இன்னும் நிறைய்ய பேர் போடுவாங்க இல்ல ? ஏன் அதுக்கு ஏற்பாடு பண்ன மாட்டேங்கறீங்க ?

மூன்றாவது கேள்வி: வாக்காளர்கள்ல நூத்துக்கு 50 பேருக்கு மேல 49 ஓ போட்டுட்டா, தேர்தல் கேன்சல் ஆயிடுமா? யாரும் ஜெயிக்கலன்னு அறிவிச்சுடுவாங்களா?

கடைசி கேள்விக்கு முதலில் பதில் :

இப்போதுள்ள விதிகளின்படி 49 ஓவுக்கு போட்ட ஓட்டுகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க மாட்டார்கள். செல்லாத வாக்குகள் போலவே

அவற்றை விட்டுவிட்டு மீதி ஓட்டுகள் மட்டும்தான் ஜெயித்தவரைக் கண்டுபிடிக்க எண்ணப்படும்.

அப்படியானால் 49 ஓ போட்டு என்ன பயன் ? ஏன் போடச் சொல்கிறோம் ?

பயன் 1: உங்கள் ஓட்டை இன்னொருவர் போட்டு விடாமல் தடுப்பதாகும்.

பயன் 2: எல்லா வேட்பாளர்கள்/கட்சிகள் மீதும் மக்களின் அதிருப்தி கடுமையாக இருந்து, ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெற்றதை விட அதிக ஓட்டை 49 ஓ பெற்றுவிட்டால், அரசியல் நெருக்கடியை நாம் ஏற்படுத்த முடியும். 49 ஓ பெற்ற ஓட்டுகள் முதல் எண்ணிக்கையில் இருக்கும்போது, அடுத்த இடத்தில் இருந்து ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான். எனவே அவரை ஜெயித்ததாக அறிவிக்க முடியாது என்று நாம்நீதி மன்றத்த்தில் தேர்தல் வழக்கு தொடுக்கலாம். இதன் விளைவாக தேதல் நடைமுறைகளில் அடுத்த கட்ட சீர்திருத்தங்கள் செய்வதற்கு வழி பிறக்கும் என்பது பயன்.

பயன் 3: பல தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் 49 ப்ப் பதிவானால், அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம் பயன் வரத் தொடங்கும். நல்ல வேட்பாளர்களைப் போட்டால் ஒழிய இனி தேறமுடியாது என்ற அச்சத்தில் வேட்பாளர்களின் தரம் உயர வழி கிடைக்கும்.

49 ஓ இபோதைய அரசியலிலோ தேர்தல் நடைமுறையிலோ இருக்கும் எல்லா சிர்கேடுகளுக்குமான ஒற்றை லேகியம் அல்ல. ஆனால் சீர்கேடுகளை எதிர்க்கவும் ஒவ்வொன்றாகக் க¬ளையவும் மக்களின் அதிருப்தியை சட்டப்பூர்வமாக பதிவு செய்து போராடுவதற்கான ஓர் ஆயுதம். அதை துருப் பிடிக்க செய்தால் வேறு ஆயுதம் இப்போதைக்கு இல்லை.

இனி கேள்வி 2ஐப் பார்க்கலாம்:

ஓட்டு மெஷினிலேயே ரகசியமாக 49 ஓ போடும் விதத்தில்பட்டன் வைப்பதுதான் முறை. நியாயம்.ஏனென்றால் நம் ஓட்டு ரகசியமானது என்ற உறுதியை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் வராமல் இருப்பதற்கு அரசுகளே காரணம். மெஷினில் 49 ஓவுக்கு ஒரு பட்டனைச் ஏர்க்க வேன்டுமென்று சென்னையிலும் தில்லியிலும் பொது நல வழக்குகள் போடப்பட்டுள்ளன. உச்ச நீதி மன்றத்தி முன்பு வழக்கு பதிவாகி சுமார் ஆறு வருடமாகிரது. தேர்தல் அனையம் 49 ஒ பட்டனை சேர்ப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை தான் தயார் என்றேஉ நீதிமன்றத்தில் உடனே சொல்லிவிட்டது. ஆனால் அரசின் கருத்தை நீதி மன்றம் கேட்டபோது பி.ஜே.பி அரசும் சரி, காங்கிரஸ் அரசும் சரி பதில் சொல்லாமல் காலம் கடத்தின. ஒருவழியாக இந்த ஜனவரியில் அரசு பதிலை தாக்கல் செய்தது. அது தான் 49 ஓவை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தது. இப்போது முடிவு சொல்ல வேன்டியது உச்ச நீதி மன்றம் தான், இந்தத் தேர்தலுக்குள் சொல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த தேர்தலில் 49 ஓ ரகசிய பட்டனக வந்துவிடும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. முதல் கேள்விக்கான பதில் எத்தனை பே 49 ஓவை பதிவு செய்தார்கள் என்ற விவரத்தை அறிவிக்க வேன்டியது தேர்தல் ஆணையம்தான். இது எளிமையானது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததுமே, ஒவ்வொரு சாவடியிலும் இருக்கும் அதிகாரியின் வசம் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து இதை சொல்லி விட முடியும். தேர்தல் ஆச்ணையம் தன் அதிகாரிகளுக்கு உத்தாவிட்டால் போதும். விவரங்களைத்திரட்டி, அன்றிரவு மொத்தம் வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு என்று தெரிவிப்பது போல இதையும் தெரிவித்துவிடலாம்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு அஞ்சல் அட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ம்ஜொத்த செலவு வெறும் ஒரு ரூபாய்தான். மிக மலிவான விலையில் கிடைக்கும் மக்கள் ஆயுதம் இது.

முதல் அட்டையில் கீழ் வரும் ஆங்கில வாசகத்தை எழுதி கையெழுத்திட்டு உங்கள் பெயர் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்புங்கள்:we request you to expedite judgement on the case pending for several years now, seeking installation of a button for 49 oin voting machines to ensure secrecy of voting, our fundamental right.
இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Justice of India, Supree court of India, New Delhi 110001.

இரண்டாவது அட்டையில் எழுத வேண்டிய வாசகம்:Please arrange for announcing the total number of voters registered for 49 o in every constituencyat the end of the poll, as it is the right of every citizen to know this information.இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Election commissioner, Election commission of Inbdia, Nirvachan sadan Ashoka road, New Delhi 110 001.

அடுத்த வாரத்துக்குள் உங்கள் அஞ்சலட்டைகள் ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் தலைமை நீதிபதிக்கும் தலைமை தேர்தல் ஆனையருக்கு சென்று குவியட்டும். மக்கள் கருத்து என்ன என்பதைச் சொல்வது ஒரு சில விமர்சகர்கள், அரசியல்வாதிகள் வேலை மட்டும் அல்ல. மக்களே நேரில் சொல்வதற்காக இருக்கும் வழிமுறைகளில் சிலதான் 49 ஓ, அஞ்சலட்டை முதலிய ஆயுதங்கள். எடுத்து வீசுங்கள்.அப்போதுதான் மாற்றம் வரும்.


நன்றி : http://www.gnani.net/

ரஜினி

1995 டிசம்பர் 12. ரஜினியின் 46வது பிறந்தநாளை எந்தவொரு ரசிகனாலும் மறந்துவிட முடியாது. துர்தர்ஷனில் ரஜினி அளித்த பேட்டியை இரண்டு நாளும் கண்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக வந்து குவிந்த கேள்விகளிலிருந்து 46 கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பதிலோடு ஒளிபரப்பானது. கேள்விகளும் பதில்களும் இங்கே...

1. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில வார்த்தைகள் - டாக்டர் பாரதிமோகன், தஞ்சை
என்னை வந்து ஸ்டைல் கிங்குன்னு சொல்றாங்க. நான் ஸ்டைல் கிங்குன்னா சிவாஜி ஸார் ஸ்டைல் சக்ரவர்த்தி. நடிப்பிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

2. பிரதம மந்திரி நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து ? கங்காதரன், வேலுர்
இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திலிருந்து நேரு குடும்பத்தைத் தவிர யாருமே பிரைம் மினிஸ்டராக ஐந்து வருடத்தை கம்ப்ளீட் செய்தது கிடையாது. ஒரு மைனாரிட்டி அரசை வைச்சுக்கிட்டு பெரியவர் நரசிம்மராவ் அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணியிருக்கார் என்றால் அது மிகப்பெரிய விஷயம். அதில்லாம பொருளாதார ரீதியாக உலக அளவில் நம்ம இநதியா பேசப்படுகிற அளவுக்கு கொண்ர்ந்து இருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை.

3. உலகில் எப்பவும் இன்பமாக இருப்பவர் யார்? பாண்டியன், திண்டுக்கல்.
மூன்று பேர். ஞானி, குழந்தை. பைத்தியக்காரன். ஞாநி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதது. பைத்தியக்காரன், எதுவும் அறியாத, எதுவும் தெரியாத ரெண்டுங்கெட்டான்.

4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புவனேஸ்வரி, மதுராந்தகம்.
நான் திட்டமெல்லாம் வைக்கமாட்டேன். என்னோட இமேஜ், என்னோட பணம், என்னோட அந்தஸ்து அது இது எல்லாம் என்னுடைய பிள்ளைங்களை பாதிக்கக்கூடாது. அவங்கங்க சொந்தக் கால்களில் நிற்கிற மாதிரி செய்யணும். என்னோட ஐடியாவை அவங்க மேலே திணிக்கக்கூடாது. அதான் பார்த்திட்டிருக்கேன்.

5. உங்களுடைய பலம் எது? பலகீனம் எது? மண்ணாடி கோபி, எர்ணாவூர்
என்னுடைய பலம்...... உண்மை. பலகீனம் கோபம்,

6. அம்மா, தெய்வம் இதில் யாருக்கு முக்கியத்துவம் தருவீர்கள்? திவாரி, சென்னை
கண்டிப்பாக அம்மாவிற்குத்தான்.

7. காந்தியடிகள் பற்றி உங்களது கருத்து? உலகரத்தினம், தேவிப்பட்டினம்
உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி.

8. அடுத்த பிறவியில் எங்கு, யாராக பிறக்க விரும்புகிறீர்கள்? சூர்யாதேவி, குன்னுர்
இந்தப்பிறவிதான் கடைசிப்பிறவியாக இருக்கணும்னு நினைக்கிறேன். சத்தியமா.... ஐய்யயோ.. அடுத்த பிறவியே வேண்டாம்!

9. என்.டி.ஆர் மனைவி லட்சுமிபார்வதியை நீங்கள் விமர்சனம் செய்தது பற்றி ? கோகிலா, விஜயவாடா
பாருங்க... நான் அங்க் சொன்னது.. ஒரு பேராசை கொண்ட பெண்ணால நாட்டையும் வீட்டையும் எப்படிக் கெடுக்க முடியும்.. அப்படித்தான் சொன்னேன். அங்க பேராசைய விட்டுட்டாங்க... ஒரு 'பெண்ணால' என்கிற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டாங்க. துஷ்டசக்தின்னு சொல்றது பேராசை, பழியுணர்ச்சி, சுயநல்ம். இதெல்லாம் துஷ்டசக்திகள்தான். சிலபேர் இத வெச்சுக்கிட்டு நான் பெண்களை மதிக்கலை, நான் பெண்களுக்கு எதிரானவன்னு செர்ல்லிக்கிட்டு இருக்காங்க. நான் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு மரியாததை வெச்சுருக்கேன் என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

10. ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுக. ரஜினி பாபு, கடலுர்
அது ஒப்பிடவே முடியாதுங்க. அது ஒப்பிடவும் கூடாது. ஏன்னா இரண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்எதிர் துருவம்.

11. எளிமை, பணிவு, அடக்கம் யாரிடமிருந்து இந்த தாரக மந்திரத்தை கற்றுக்கொண்டீர்கள்? குலாம் முகமது, நாகை.
சிவாஜி ராவ்கிட்டேயிருந்து.

12. பொது நிகழ்ச்சிகளில் தாடியுடனும் மீசையில்லாமலும் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. உங்களது இமேஜ் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? லெனின், நெல்லை
இல்லைங்க... வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் என்னை நேசிக்கிறது என்னுடைய உள்ளத்தை என்று எனக்கு நல்லாத் தெரியும்.

13. பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இவர்களை பற்றி ஒவ்வொரு வரி கூறுங்கள். (தாமஸ், திருவனந்தபுரம்)
தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழுங்கிய ரெபெல் பொயட் பாரதியார்
பெரியார், தன்னை நாத்திகன் என்று அழைத்துக்கொண்ட மிகப்பெரிய ஆன்மீகவாதி
உண்மையான படிக்காத மேதை காமராஜர்
மாபெரும் தலைவர் அண்ணா
எம்.ஜி.ஆர் நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்தவர்.

14. ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? (வீ. நாராயணி, திருத்துறைப்பூண்டி)
(சிறிது யோசனைக்குப் பின்னர்) அவங்களுடைய தன்னம்பிக்கை.

15. அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது, ஆண்டியாய் உலகத்தை சுற்றுவது. இதில் எது அதிக இன்பம்? (சரவணன், திருச்சி)
ஒண்ணுதான் பார்த்திருக்கேன். இன்னொன்னு பார்க்கலை. ஒரு வேளை அதையும் பார்த்தால் அதுக்கப்புறம் எதில இன்பம்னு சொல்றேன்.

16. மனிதன் எப்போது மகானாகிறான்? (பி. சாந்தா, மதுரை)
தன்னைத் தான் உணரும்போது.

17. உங்களின் உடலை எடை போடாமல் எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்ள முடிகிறது? ( கஜேந்திரன், பொள்ளாச்சி)
கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் உறக்கம். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. கொஞ்சம் தியானம். எல்லாத்துக்கு மேல் ஒவ்வொருத்தருடைய உடல் அமைப்பு.

18. எப்போதாவது கண்ணாடியில் சிவாஜிராவை பார்த்ததுண்டா? (ஆன்ந்த், கடலுர்)
சிவாஜி ராவை பார்க்காத நாளே கிடையாது.

19. சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? (செல்வம், திண்டிவனம்)
வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

20. அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? (வேதவல்லி, திருவல்லிக்கேணி)
அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அவங்கவங்க செய்த பாவ, புண்ணியம் அவங்கவங்களைத்தான் போய்ச்சேரும்.

21. அடிக்கடி மேல்நாடு போறீங்களே தலைவா... மேல்நாட்டு மக்களோடு இந்திய மக்களை ஒப்பிட முடியுமா? (பாலகிருஷ்ணன், சிங்கப்பூர்)
செண்டிமெண்ட், அட்டாச்மெண்ட். இந்த சொந்தம் பந்தமெல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அதனால அவங்க கஷ்டப்படுறாங்க. இந்த செண்டிமெண்ட் அட்டாச்மெண்டெல்லாம் இங்கே ரொம்ப ஜாஸ்தி. அதனால நாம கஷ்டப்படறோம்.

22. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி (ராம் மணி, ராஜபாளையம்)
காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடக்கிற மாதிரி.

23. உங்கள் கருத்தை என்றைக்காவது யாருக்காகவாது மாற்றியதுண்டா? (சி. தெ. ரஜினி அருள், மணக்காடு)
இல்லவே இல்லை.

24. முதன்முதல் உங்களுக்கு அறிவுரை சொன்னது யார்? (கே. தேவி, பூநகரம்)
எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முதன்முதலா அறிவுரை சொல்றது தாய்தான்.

25. நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு எதை நாடி செல்கிறீர்கள்? (என். சுப்ரமணியன், கல்கத்தா)
என்னை நான் நாடிச் செல்கிறேன்.

26. ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்? (ஆர். கவுஸ், நாகூர்)
பாருங்க... வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். ஆளுக்கு 400 ரூபாய் என்றார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ட். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை.

27. தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே.. அதை கட்டுப்படுத்துவது எப்படி? (ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை)
இந்தக்கேள்வியை நிறையப் பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை டிரை பண்றாங்க. அது கட்டுப்படுத்த முடியாது. அதற்கப்புறம் கட்டுப்படுத்த முடியாமல் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்துடுது. அது தேவையேயில்லை. அதைப்பற்றி கவலைப்படாதீங்க. காலையில் எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அங்கு உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் நீங்க பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டும். எது பின்னால போகட்டும். யாரு பின்னால போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க.அப்புறம் எழுந்திடுங்க. அதை கண்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அப்படியே வந்து மனசு உங்க கண்ட்ரோல்ல வரும். அப்ப வந்து உங்க இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பற்றி கான்ஸண்ட்ரேட் பண்ண முடியும். இது எப்படின்னு சொன்னா, ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதான் புதுசா போட முடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அது வந்து இயற்கை. அதைப்பற்றி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க.

28. ஒரு பத்திரிக்கையிலும் டிவியிலும் உங்களைப் பற்றி ஒரு நடிகர் கடுமையாக விமர்சித்து உள்ளாரே.. அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க... ரத்தம் கொதிக்குது தலைவா! (லக்மான் கஜினி, திருச்சி)
கண்ணா... இது ஜனநாயக நாடு. அவுங்கவுங் கருத்தைச் சொல்ல எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்கு. பைதபை நான் விமர்சனங்களை வரவேற்கிறேன்.

29. பாம்பு என்றால் படையும் நடுங்கும். நீங்க எப்படி பாம்பு கூட நடிக்கிறீங்க? (மூர்த்தி, சமயபுரம்)
உண்மையில பாம்புன்னா எனக்கு ரொம்ப பயங்க. என்ன பண்றது படத்தில பார்த்தீங்கன்னா பாம்பை கையில பிடிச்சிக்கிறது, உடம்பு மேல போட்டுக்கிறது. இந்த மாதிரியே வருது. நான் கூட வாங்குற பணத்தை நினைச்சுக்கிட்டு செஞ்சுடறது.

30. உங்களுடைய ரசிகர்களில் நிறைய குழந்தைகளும் இருக்காங்க். அவங்களுக்கு நீங்க என்ன சொல்றீங்க? (சரோஜா, அரக்கோணம்)
குழந்தைங்க தப்பா நினைச்சுக்கப் போறாங்க. டி.வி பார்க்கிறதை கொஞ்சம் கம்பி பண்ணிக்கோங்க. நிறைய விளையாடுங்க. அப்பத்தான் உடம்பு நல்லா இருக்கும். மனசும் நல்லா இருக்கும்.

31. ஆரம்பகால ரஜினி முன்கோபக்காரர், இப்போதைய ரஜினி? (ரஜினி முருகன், திருச்செந்துர்)
ஒரே ரஜினி, அதே ரஜினிதான்.

32. சமீபத்தில் நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை கூறுங்கள் (ஜி. வாசுதேவன், கோவை)
பாட்ஷா வெற்றி விழா பங்க்ஷனுங்க. வாழ்க்கையில மறக்கவே முடியாத நிகழ்ச்சிங்க.

33. உன் பிறந்தநாளன்று மிகவும் பவர் உள்ள வெடிகுண்டு வைத்து உன்னை கொல்லப் போகிறேன். சின்னப்பயலான உன்னைக் கொல்ல எனக்கே மனசு கஷ்டமாக இருந்தாலும் உன் தொல்லை தாங்கமுடியவில்லை. (மொட்டைக்கடிதம்)
உங்க மனசாட்சியை கேட்டுப்பாருங்க. நீங்க கும்பிடற ஆண்டவனை கேட்டுப்பாருங்க. ரெண்டுபேருமே சரின்னு சொன்னா கோ அஹெட். என்னிக்கோ ஒரு நாளைக்குப் போக வேண்டியதுதானே. கொஞ்சம் சீக்கிரமா போயிடலாம்.

34. பல அரசியல் கட்சியை சேர்ந்தவங்க உங்களுக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்களே, அது பற்றி உங்கள் கருத்து ? (ரஜினி கார்த்திக், திருவாரூர்)
உண்மைதான். இப்ப நடக்கிற அரசியல் எனக்குத் தெரியாது. இவங்க நடத்துற அரசியல் எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச அரசியல் எல்லாம், அரசியல் என்பது பொதுநலம். சுயநலவாதிங்க பொதுநலத்திற்கு வரக்கூடாது. சுயநினைப்பு உள்ளவங்கள பொதுநலத்திற்கு இழுக்கக்கூடாது. ஏழையை ஏழையா இருக்கவிடக்கூடாது. சிலர் வாழ பலரை தாழ விடக்கூடாது.

35. வெடிகுண்டு தமிழ்நாட்டுல வெடிக்கிறது மட்டும்தான் உங்க காதுல கேட்குதா? பிற மாநிலங்கள்ல வெடிக்கிறது உங்க காதுல கேட்கலையா? அதுக்கு குரல் கொடுக்காத நீங்க இதுக்கு மட்டும் குரல் கொடுக்க என்ன காரணம்? (தமிழ் மணி, கரூர்)
முதல்ல நம்ம வீட்டை சுத்தப்படுத்துவோம். அதுக்கப்புறம் வேற வீட்டை பார்ப்போம்.

36. உங்களுக்கும் பிரதமருககும் நடந்த சந்திப்பு பற்றி (ரமணி, அண்ணாநகர்)
அதுபற்றி இப்ப எதுவும் சொல்ல விரும்பலை. That's not a coutesy one. It has some significance. நேரம் வரும்போது நானே சொல்றேன்.

37. தலைவா, நீங்க ஏதோ அரசியல் கட்சில சேர்ற மாதிரி பேச்சு அடிபடுதே.. இது எல்லாம் என்ன தலைவரே? ( சதாசிவம், டால்மியாபுரம்)
கண்ணா, நான் எந்தக் கட்சியிலேயும் சேரலை. சேரவும் மாட்டேன். கவலையே படாதீங்க. அப்படியே வந்தா தனிக்கட்சிதான்.

38. இலங்கையில் நடக்கும் சம்பவம் பற்றி ( வீரபத்திரன், பட்டுக்கேர்ட்டை)
இதுக்கு உடனடியா ஒரு முற்றுப்புள்ளி வெச்சுத்தான் ஆகணும். அப்பாவி மக்கள் சாகறதை பற்றி நான் ரொம்ப வேதனைப்படறேன். கடுமையாக கண்டிக்கிறேன்.