தேசியத் தலைகுனிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடிப் பெண்கள் சிலர், சுற்றுலாப் பயணிகள் கொடுத்த உணவுக்காக நடனம் ஆடிய விடியோ காட்சி, "தி கார்டியன்' பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகியிருப்பதும், இந்தக் காட்சியை இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பியிருப்பதும் இப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஒளிபரப்புக்காக அந்த டிவி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இந்திய அரசின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் யார்? இந்த விடியோவைப் பதிவு செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தச் சம்பவத்துக்கு அடிப்படையான குற்றவாளி இந்திய அரசாங்கம்தானே? அதை முதலில் உணரட்டும்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஆங்கிலேயர் குடியேறத் தொடங்கியபோது அந்தத் தீவில் இருந்த பழங்குடிகள் பல விதங்களில் அழிக்கப்பட்டனர். இன்றைய உதகையை நிர்மாணிக்க, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சலைவன் (ஏதோ புலி, சிங்கங்களை வேட்டையாடியதைப்போல) எத்தனை பழங்குடி மக்களைக் கொன்றார் என்ற விவரங்கள் பதிவுகளாக உள்ளன. ஆனால், அத்தகைய பதிவுகள் அந்தமான் நிகோபார் தீவுகளைப் பொருத்தவரை இல்லை. ஆனால், பழங்குடிகளை ஆங்கிலேயர்கள் அழித்தொழித்தது மட்டும் நிச்சயம்.
அவர்கள் அழித்ததுபோக, மனிதர்கள் நுழைய முடியாத அந்தமானின் அடர்காடுகளில் இன்னமும் பழங்குடியினர் இருக்கின்றனர் என்பது இந்திய விடுதலைக்குப் பின்னர் தெரிந்தும்கூட, அவர்களது மேம்பாட்டுக்காக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் 2012-ம் ஆண்டிலும்கூட இந்த பழங்குடிப் பெண்கள் இன்னமும் அரை நிர்வாணமாக, மேலாடை அணியாமல் வாழும் நிலைமை.
சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு உணவுப் பொட்டலங்கள், சுவையான பிஸ்கட்டுகள் கொடுத்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதும் அவர்கள் சொன்னபடி ஆடுவதும் ஜாரவா பூர்வக் குடிகளைப் பொறுத்தவரை தவறான செயலோ அல்லது வெட்கப்படும் விஷயமோ அல்ல. அவர்களை அப்படிப்பட்ட இருட்டறையிலேயே வைத்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் வெட்ககரமானது.
1990-ம் ஆண்டுகளில்தான் அவர்கள் நாகரிக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பது, அவர்களது இருப்பிடங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகளை இந்திய அரசு கடந்த 20 ஆண்டுகளில் செய்திருக்க வேண்டாமா? ஜாரவா பழங்குடி மக்களை அணுகி, அவர்கள் ஆடை உடுத்தவும் வெளியுலகுடன் தொடர்புகொள்ளவும், படிப்பறிவு பெறவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யானை, புலிகளைக் காட்டுவதற்கான வனச் சவாரி போல, இன்னமும் புத்தி கெட்டுப்போகாமல் இருக்கும் மானுடசாதியைக் காட்டும் வனச்சவாரிக்கு காட்சிப்பொருளாக இருக்கட்டுமே என்று ஒரு பழங்குடி ஆதிகோலத்திலேயே இன்றும் நீடித்திருக்க அரசு விரும்பும் என்றால், அது முறைதானா?
பழங்குடியினர் வாழ்வைப் பொறுத்தவரை, வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்கிற இரண்டு விதமான நடவடிக்கைகள்தான் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று, கனிமங்களை வெட்டியெடுப்பதற்காகப் பல மாநிலங்களில் பழங்குடியினரை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றுவது நடக்கின்றது. அல்லது, அந்தப் பழங்குடியினரை அதே இடத்தில் அப்படியே, அதே அரை நிர்வாணக் கோலத்தில் சுற்றுலாப் பயணிகளின் காட்சிப்பொருளாக வாழச் செய்கின்றது. இரண்டுமே தவறு.
அந்தமான் நிகோபார் தீவுகளின் காவல்துறை இயக்குநர் பேட்டி அளிக்கையில், ""இந்தப் படக்காட்சி நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்குமேயொழிய தற்போது எடுக்கப்பட்டதாக இருக்க முடியாது'' என்கிறார். இன்னொரு அதிகாரி பேசுகையில், ""அந்தமான் நெடுஞ்சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இதில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தின்போது எதிர்ப்படும் ஆதிவாசிகளைக் கண்டு அவர்களுடன் பேசுதல், படம் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதைச் சொல்லியே சுற்றுலா ஏற்பாடு செய்யும் ஏஜன்டுகளும் இருக்கிறார்கள். இதைத் தவிர்க்க, பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் நுழையாமல் கடல்வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது குறித்து யோசித்து வருகிறோம்'' என்கிறார்.
என்ன அக்கிரமம்? அந்தப் பழங்குடிகள் ஏன் வெளிநாட்டவருடன் பேசக்கூடாது, பழகக்கூடாது? நல்ல ஆடை உடுத்தும் பழக்கத்தை பழங்குடிகளுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களை இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுத்தினால் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயராதா? அவர்களும் வெளியுலக மனிதர்களைப்போல உடுத்தி, படித்து முன்னேற மாட்டார்களா? ஏன் அவர்களை அப்படியே அரை நிர்வாணத்துடன் வாழ விட வேண்டும். புலிகள் பாதுகாப்புப் பகுதியை உருவாக்கி புலிகளைக் காப்பதுபோல, அந்தமான் அடர்வனப் பகுதியில் பழங்குடி மனிதர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு. அவர்களென்ன புலிகள்போல அருகி வரும் மனித இனமா?
அந்தப் பழங்குடிகளை அவர்களுக்குப் பழக்கமான காட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொருளல்ல. அவர்களை அதே இடத்தில் வாழவிடுங்கள். ஆனால், அவர்களுக்கு வாழ்க்கையின் முன்னேற்றங்களைக் காட்டுங்கள்.
நர மாமிசம் சாப்பிட்டு உயிர்வாழும் ஆதிவாசிகள் இன்றில்லை. ஆனால், ஆதிவாசிகளைக் காட்சிப் பொருளாக்கி உயிர்வாழும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது


Thanks and Source :  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=537512&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=தலையங்கம்: தேசியத் தலைகுனிவு!

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.
அனைவருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் - it works

சென்னை அரசு பஸ்சுகளில் பயணம் செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார்.


சமீபத்தில் ரஞ்சனி பிரசன்னா என்கிற கல்லூரி மாணவி, நம் கேட்டால் கிடைக்கும் குழு உறுப்பினர். அவர் துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறார். தினமும் ஜெயின் காலேஜிலிருந்து கிளம்பி, டைடல்பார்க்கில் இறங்கி ரயிலைப் பிடிப்பாராம். கேளம்பாக்கத்திலிருந்து வரும்19பி, 21 H, மற்றும் பெரும்பாலான பஸ்கள் முன்பெல்லாம் டைடல் பார்க்கில் நிற்காதாம். அதனால் அவர் T51ல் பயணிப்பாராம். சமீப காலமாய் 19பியும் டைடல் பார்க்கில் நிற்க ஆரம்பித்ததாம்.

இரண்டொரு நாள் முன்பு 19பி பஸ்ஸை பிடித்து டைடல் பார்க்குக்கு டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அங்கெல்லாம் நிற்காது என்றும், வரும் சிக்னலிலோ, அல்லது டைடல் பார்க்குக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அதற்கு ரஞசனி தான் தினமும் இந்த வண்டியில் பயணிப்பதாகவும், தினமும் டைடல் பார்க்கில் நிற்கும் வண்டி இன்று மட்டும் ஏன் நிற்காது என்று வாதாடியிருக்கிறார். கண்டக்டரும் விடாமல் நிறுத்த முடியாது என்று வாதிட, ரஞ்சனிக்கு அரசு போக்குவரத்து பற்றி புகார் செய்யும் நம்பர் நினைவுக்கு வந்திருக்கிறது. என்றோ ஒரு நாள் பார்த்த அந்த நம்பரை தன் செல்லில் சேமித்து வைத்திருக்க, உடன் அந்த எண்ணுக்கு தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசியவர் போனை கண்டக்டரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ அதெல்லாம் பேச முடியாது என்று சொல்ல, எதிர்முனை ஆள் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், வண்டி தற்போது பயணிக்கும் இடத்தையும் கேட்டிருக்கிறார். அப்போது பஸ் கந்தன்சாவடியில் பயணித்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார். எதிர்முனை நபர் தான் இன்னும் சிறிது நேரத்தில் லைனில் வருவதாய் சொல்லி இணைப்பை துண்டித்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் வண்டியில் இருக்கும் ஜி.பி.எஸ் சிஸ்டத்திலிருந்து அந்த நபர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். டிரைவருக்கு எதுவும் புரியவில்லையாம். அவருக்கு இது முதல் முறை அனுபவமாய் இருக்கும் போலிருக்கிறது. ஏன் வண்டியை டைடல் பார்க்கில் நிறுத்துவதில்லை என்றதும், அவர் இல்லையே சென்ற ட்ரிப்பில்கூட டைடல் பார்க்கில் நின்றுதானே வந்தோம். என்றதும், அப்படியானல் கண்டக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று கேட்டார். கண்டக்டரிடம் பேச்சே இல்லை. பேஸ்த் அடித்து போயிருந்தார். உடனே டிரைவர் கண்டக்டருக்கு சப்போர்ட்டாய், அவர் ரூட்டிற்கு புதுசு என்றும், அதனால் வந்த குழப்பம் தான் என்றும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்பு புகார் கொடுத்த ரஞ்சனியை அழைத்து அவரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் ரஞ்சனியையே பார்த்திருக்கிறார்கள். நிறைய பேர் அந்த புகார் எண்ணையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயமென்றால் எல்லாம் தாறுமாறாகத்தான் இருக்கும் என்ற ஒரு பொது புத்தி எல்லாருக்கும் உறுதியாகிக் கொண்டிருக்கும் வேளையில், அரசு இயந்திரம் சிறப்பாகவும் செயல்படுறது என்பதை சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. அது மட்டுமில்லாமல் தானாக கிடைக்காவிட்டால் கேட்டால் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நம்மால் உணர முடியும்.. ஸோ.. கேட்டால் கிடைக்கும்

சென்னை போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் 9884301013,9445030516,9383337639


Thanks : CableSankar

காலை எழுந்தவுடன் தானம்... பசி போக்கும் பாண்டி மனிதர்!

-நா.இள.அறவாழி''அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.’ - அதாவது பிறரால் பழிக்கப்படாத இல்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை ஆகும். வள்ளுவர் சொல்லும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் என் லட்சியம்'' என்று, குறள்மொழியையே குரல்மொழி யாகப் பகிர்கிறார் எஸ்.ராஜேந்திரன்.யார் இந்த ராஜேந்திரன்?


''சார், புதுவை அரசு மருத்துவமனைக்குப் பக்கத்துல பல வருஷங்களாத் தினமும் காலையில ஒருத்தர் வந்து அங்கு இருக்கும் ஏழைகளுக்கு இலவசமா உணவுகொடுக்கிறார்'' என்று விகடன் வாசகர் கல்யாணசுந்தரம் நம் வாசகர் வாய்ஸில் பதிவுசெய்து இருந்தார். புதுவை - அரசு மருத்துவமனைக்குச் சென்றால் ஒரு கூட்டமே சுற்றிச் சூழ, எல்லோருக்கும் உணவுப்பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டு இருந்தார் ராஜேந்திரன்.


'இதை என்னோட ஆத்ம திருப்திக்காகத்தான் பண்றேன். அதனால்தான் இதை விளம்பரப்படுத்த நான் விரும்பலை. இருந்தும் இதைப் படிச்சிட்டு பல பேர் ஏழைகளுக்கு உதவ முன் வரலாம். அதுக்காகத் தான் இதைப் பற்றிப் பேசறேன் தம்பி.


புதுவை- சிமென்ட் வொர்க்ஸ்ங்கிற கடைவெச்சு இருக்கேன். அதிகமா இல் லைனாலும் தேவைகளைப் பூர்த்தி செய் கிற அளவு வருமானம் வருது. எனக்குப் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் அதிகம். அதிலும் திருக்குறள் மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம். திருக்குறள் படிச்சுட்டுதான் இந்தத் தானத்தின் மீது ஈடுபாடு வந்தது.கடந்த 19 வருஷமா ஏழைகளுக்குக் உணவு கொடுத்துட்டு வர்றேன். ஆரம்பத் தில் காலையில் வீட்டில் இருந்து 7.30 மணிக்குக் கிளம்புவேன், புதுச்சேரியோட முக்கிய வீதிகளில் சுற்றி வந்து யாராவது ஏழைகள் இருக்காங்களானு பார்த்து அங் கேயே இட்லி வாங்கிக்கொடுத்து, அவங்க பசியைப் போக்கறது வழக்கம். முதலில் 10 ஏழைகளுக்கு உணவு கொடுத்துட்டு இருந்தேன். இப்போ அந்த எண்ணிக்கை நூறா மாறிடுச்சு. தினமும் காலையில் 70 இட்லி பொட்டலங்களுடன் கிளம்பிடுவேன். சில நேரங்களில் வைத்திருக்கும் பொட்டலங்களுக்கு மேல் நிறையப் பேர் வந்துடுவாங்க. பொட்டலங்கள் தீர்ந்துப்போச்சுன்னா மத்தவங்களுக்குக் கடையில் இட்லி வாங்கித் தருவேன். புதுச்சேரியோட முக்கிய இடங்களான பீச் ரோடு, பாரதி வீதி, மகாத்மா காந்தி சாலைனு ஒரு ரவுண்ட் அடிச்சுக் கடைசியா இந்த அரசு மருத்துவமனைக்கு வந்துடுவேன்.


தினசரி இல்லைனாலும் மதிய ஓய்வு நேரம் கிடைக்கும்போது வில்லியனூரில் இருக்கும் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போய் அங்கே இருக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனா ளிகளுக்கு மதியச் சாப்பாடு வாங்கிக் கொடுப் பேன். என்கிட்ட பசினு வந்தவங்க எல்லாருக்கும் பசியைப் போக்கி அனுப்பிஇருக்கேன்.


இந்த உலகில் வாழறவங்களை மூணு வகை யாப் பிரிக்குது திருக்குறள். மாக்கள், மக்கள், சான்றோர். மிருகங்களைப் போல வாழ்கிற மனிதர்களை மாக்கள்னும்; சராசரி வாழ்க்கை வாழறவங்களை மக்கள்னும்; லட்சியத்தோடுவாழ் பவர்களைச் சான்றோர்கள்னும் பிரிக்கிறாங்க. நான் லட்சியவாதி, நம்மால் ஒருத்தன் பசியைக் கூட போக்க முடியலைன்னா வாழுற வாழ்க் கைக்கு அர்த்தமே இல்லை. ஒரு மனிதனைக் கொல்லக் கூடிய, கொலை செய்யத் தூண்டக் கூடிய பசியைக் கொல்றதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம்'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இன்னும் சிலர் அவரைச் சூழ, சட்டைப்பையைத் தடவியபடியே நகர்கிறார் ராஜேந்திரன்!


 
Source : Vikatan

நான் விரும்பும் படங்கள்


சிவாஜி கணேசன்
 • தேவர் மகன்
 • முதல் மரியாதை
 • கலாட்டா கல்யாணம்
 • வீரபாண்டிய கட்டபொம்மன்
 • சபாஷ் மீனா
 • கௌரவம் (1973)
 • இராஜராஜசோழன் 1973)
 • நவராத்திரி (1964
 • பாசமலர் (1961
 • பராசக்தி (1952) 
மற்றும் பல படங்கள் ரஜினிகாந்த்
 • வில்லனாக
  • நெற்றிக்கண்
  • 16 வயதினிலே
  • தீ
  • மூன்று முடிச்சு
  • எந்திரன் ,
  • சந்திரமுகி 
     
 • கதாநாயகனாக  
  • மூன்று முகம்
  • தளபதி
  • ராகவேந்திரா
  • முள்ளும் மலரும்
  • ஆறிலிருந்து அறுபது வரை
  • தில்லு முல்லு
  • பாட்சா
கமல் ஹாசன்
 • நாயகன்
 • மஹாநதி
 • மைக்கேல் மதன காம ராஜன்
 • அன்பே சிவம்
 • தேவர் மகன்

நள்ளிரவில் பெற்றோம் - Gnani and a big fool

இந்த வருடம் முடிவதற்குள் இரண்டு மெகா பிம்பங்கள் நொறுங்கிப் போயிருக்கின்றன. ஒன்று அப்துல் கலாம். இன்னொன்று அண்ணா ஹசாரே. அப்துல் கலாமின் பிம்பமாவது சுமார் பத்து வருடங்கள் தாக்கு பிடித்திருக்கிறது. அண்னா ஹசாரே பிம்பம் 2011 ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வருடக் கடைசியில் கலைந்துவிட்டது. இரண்டு அசலான மக்கள் பிரச்சினைகளில் இருவரும் எடுத்த நிலைதான் இருவரது பிம்பங்களும் காலியாகக் காரணம்.


- how much Gnani happy about this. even his(Gnani) image is demage when he was quit Kumudam. he just answer it only in the elections are near by.(I trying to avoid personal attack as he personally attacking i ahve no other go)

கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் கூடிப் போராடிக் கொண்டிருக்கும்போது, அணு உலை பாதுகாப்பானது என்று அவசர அவசரமாக நற்சான்றிதழ் வழங்க அப்துல் கலாமை மத்திய அரசு ஏவிவிட்டது. பதவியில் இருந்தபோது குஜராத் முஸ்லிம் படுகொலைகள் உட்பட எந்த சமூகப் பிரச்சினையிலும் கறாராகக் கருத்து சொல்லாதவர், இப்போது அணு உலைக்காக ஆக்ரோஷமாக குரல் எழுப்பினார். எங்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேசுங்கள் என்று கூடங்குளம் மக்கள் எழுப்பிய கோரிக்கையை அவர் கண்டுகொள்ளவே இல்லை.

-- you people never asked about gutra Train trady. who did that. is that train got fired automatically. you people are one sided. Miniontiry politics. please purify yourself then you can question others.

- which president shouted against state government. why the central government not done anything on that time.

- when the people of kundan kulam invited. they have mentioned that they are going to quite his meeting. we can wake the sleeping person not who is acting like that.

கலாம் வாழ்க்கை முழுக்கவும் ராணுவ சார்பான தொழில்நுட்ப வளர்ச்சியில் மட்டுமே ஈடுபட்டவர். அவர் அணுகுண்டு, அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் எப்போதும் குழந்தைகளுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்து மீடியா வளர்த்த பிம்பத்தால் அவரைப் பெரிய சமாதான விரும்பி என்று தவறாக நம்பிய நம் மேல்தான் தப்பு. குழந்தைகளின் புத்தகச் சுமையைக் கூடக் குறைக்க அவர் எதுவும் செய்ததில்லை. கூடங்குளத்தில் இன்னும் இயங்க ஆரம்பிக்காத உலையைப் பாதுகாப்பானது என்று சொல்ல முடிந்த கலாமுக்கு, தமிழ்நாட்டின் இன்னொரு பெரிய கவலையான முல்லைப் பெரியாறில் செயல்பட்டு வரும் அணை பாதுகாப்பானதா இல்லையா என்று சொல்ல தைரியமில்லை.


--he is automic enginer. he can tell about his industry. why you want him to answer everything.   he is scienctist not the politician.
அண்ணா ஹசாரேவின் பிம்பம் ஒரு வருடம் கூட தாங்கவில்லை. மீடியா உதவியுடன் அவர் நடத்திய லோக்பால் போராட்டம் ஜனநாயக விரோதமான போராட்டமாக மாறிவிட்டது. பிரதமர், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் அனைத்துக்கும் மேலே ஒரு சர்வாதிகாரியாக லோக்பாலை உருவாக்கியே தீருவேன் என்று அவரும் அவரது குழுவும் காட்டும் பிடிவாதம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. லோக்பாலை ஒரு சர்வரோக சஞ்சீவியாக அவர் சித்திரித்துக் கொண்டே இருந்தார். கடைசியில் ஹசாரே மூன்று மாதங்களுக்கொரு முறை உண்ணாவிரதம் நடத்திக் கொண்டே இருப்பது ஒரு தமாஷாகிவிட்டது. ஒரு லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்த்து அவர் குழுவினர் பல லட்சம் ரூபாய் வாடகையில் மும்பையில் தேர்வு செய்த மைதானத்தில் கடைசியில் திரண்டது வெறும் 5 ஆயிரம் பேர்தான்.


-- Anna movement is revolution in the middleclass who are always slient. He did in the Gandhian movement.  Congress govt. false promises worked out very well.  May be Mr. Ganani will be happy with current Jokepal we are not. ( I am not supporter of Gnadhian Movements).
சென்னையில் ஹசாரே குழுவினருக்கு உட்கார்ந்து உண்னாவிரதப்போராட்டம் நடத்த தன் கல்யாண மண்டபத்தை இலவசமாகக் கொடுத்து உதவியவர் ரஜினிகாந்த். இவரும் ஈழத்தமிழர் அவலம் முதல் கூடங்குளம், முல்லைப் பெரியாறு எதற்கும் வாயைத் திறக்காதவர். பகிரங்கமாகவே அத்வானி, மோடி அபிமானி. அவர்களோ இப்போது அண்ணா அபிமானிகள். ஜோதியில் ரஜினியும் கலந்தாயிற்று.

-- i dont understand this. if someone say something we cant expect everything at everytime. even Mr.Gnani spokes more about kudankullam more than Mulai periyar. can i say he is agains farmers.

அண்ணாவுக்குப் பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்கள்தான் என்பது மெல்ல மெல்ல அம்பலமாகிவிட்டது. 1983ல் அண்ணா ஹசாராவே ஆர்.எஸ்.எஸ்சில் பங்கேற்றவர் என்பதை நயி துனியா ஏடு வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வகையறாக்களின் நோக்கம், காங்கிரஸ் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து முடியுமானால் இடைத்தேர்தல் வரச் செய்வதுதான். அதற்கு அண்ணா ஹசாரே ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறார் என்று இப்போது பரவலாகத் தெரிந்துபோய்விட்டது.

- If there are Hindu leader/RSS acticist in the Anna camp then entire ana supports are RSS.

if Kundankullam is fully supported by chirtian minitionay then is people fight.  very good. secuarism(is this called Indin Secuarism).  


அவருடைய லோக்பால் மசோதாவை எந்தக் கட்சியும் முழுமையாக ஒப்புக் கொள்ளாதபோதும், காங்கிரசுக்கு எதிராக மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்தார். கடைசியாக இந்த வாரம் லோக்பால் மசோதாவை அவையில் நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுத்தபின்னர் கூட, இன்னும் மூன்று நாட்களில் நிறைவேற்றாவிட்டால் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வேன் என்று மிரட்டினார். மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்தது பி.ஜே.பிதான். திரும்பவும் கமிட்டிக்கு அனுப்பி சில மாதங்கள் கழித்து நிறைவேற்றலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.


-- we want better lokpal. not the govt. Joke pal we want them strong in the beginning itself. not the amendments.

இதையெல்லாம மீறி காங்கிரஸ் சொன்னபடி லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொன்ன சில திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. லோக்பாலுக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தரும் தீர்மானம் மட்டுமே தோல்வியடைந்தது. இது கூட எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திருந்தால் நிறைவேறியிருக்க முடியும். லோக்பாலை, தணிக்கை அதிகாரி, தேர்தல் கமிஷன் போல அரசியல் சட்ட ஒப்புதல் உடைய அமைப்பாக ஆக்கியிருந்தால் லோக்பால் நிச்சயம் பலமுள்ளதாக இருக்க முடியும். அப்படி ஆகவிடாமல் தடுத்தது பி.ஜே.பியும் இடதுசாரிகளும்தான்.

-- again i am repecting, we want better lokpal not the govt. Joke pal we want them strong in the beginning itself. not the amendments.

இப்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறுமா என்பது சந்தேகம்தான்.அங்கே வேறு திருத்தங்களுடன் நிறைவேறினால், மறுபடியும் அந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் தர மக்களவைக்கு வரவேண்டியிருக்கும். மாநிலங்களவையில் சிக்கல் இருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி அங்கே நிறைவேற்ற காங்கிரஸ் அரசு முயற்சிக்கலாம். இந்த இதழ் வெளிவரும்போது நிலைமை தெரிந்துவிடும். முதற்கட்டமாக இப்போதைய லோக்பால் மசோதாவைக் கூட கொண்டு வரவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒரேயடியாக தடுத்தால், அவர்கள்தான் மக்களிட்ம அம்பலப்பட்டுபோவார்கள்.இப்போது வந்திருக்கும் லோக்பால் மசோதாவில் அண்ணா ஹசாரே கோரியபடி பிரதமரையும் விசாரிக்கும் அதிகாரம் தரப்பட்டாகிவிட்டது. லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களை பரிந்துரைக்கும் குழுவிலும், லோக்பால் குழுவிலும் 50 சத விகிதம் இட ஒதுக்கீடு – பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள், சிறுபான்மை மதத்தினர் ஆகியோருகு தரப்பட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை அண்ணா ஹசாரே குழுவும் பி.ஜே.பியும் எதிர்க்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில், தேர்தலில் நிற்காத சிவில் சொசைட்டி சொல்வதையும் கேட்கவேண்டுமென்று வாதாடுபவர்கள் போராடுபவர்கள், சமூகத்தின் பலவேறு பிரிவுகளுக்கு லோக்பாலில் பிரதிநிதித்துவம் தருவதை மட்டும் எதிர்ப்பது அவர்களுடைய அசல் நோக்கத்தைக் காட்டிக் கொடுக்கிறது.


- what is the need of reservation in this.  we are very soon goiung to ask reservation criminal/civil punishments.  
லோக்பாலின் தலைவரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் ஆரோக்கியமான அணுகுமுறைதான். லோக்பாலின் கீழ் சி.பி.ஐயைக் கொண்டு வரவேண்டுமென்ற அண்ணாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்கு பதில் சி.பி.ஐயை அரசு ஏவல் நாயாக இல்லாமல் சுயேச்சையாக ஆக்க ஒரு நடவடிக்கையை எடுக்க அரசு முன்வந்திருக்கிறது. சி.பி.ஐயின் இயக்குநரை நியமிக்கும் குழுவில் பிரதமருடன் எதிர்க்கட்சித்தலைவரும், உச்ச்ச நீதிமன்ற நீதிபதியும் இருப்பார்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் வரவேற்கத்தக்க அணுகுமுறைதான்.


- opposite party also a political party sir. we are India. you better understand that.
லோக்பாலின் கீழேயே விசாரணை அமைப்புகளைக் கொண்டு வரவேண்டுமென்று அண்னா குழு சொல்வது நிரகாரிக்கப்பட்டது சரி. அதில் லோக்பாலை இன்னொரு போட்டி அரசு போல ஆக்கிவிடும் ஆபத்து உள்ளது. அதே சமயம் மத்திய கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ ஆகியவற்றின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு தரப்படுகிறது. இது நல்ல அம்சம். இப்படி சி.பி.ஐயின் விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பயனப்டுத்தித்தான் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பல நல்ல கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது. அதே போன்ற அதிகாரம் லோக்பாலுக்கும் தரப்பட்டிருக்கிறது.


எனவே இப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவை முழுக்கவும் மோசடியானது என்றோ பலவீனமானது என்றோ ஒதுக்கமுடியாது. இன்னும் கூடுதல் அதிகாரங்கள் தருவது இன்னொரு போட்டி அரசாக லோக்பாலை ஆக்கும் ஆபத்து கண்டிப்பாக உள்ளது. உண்மையில் இப்போது கொண்டு வரபட்டுள்ள லோக்பாலைக் கொண்டே பல மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். தேர்தல் ஆனையத்தில் டி.என்.சேஷன் தொடங்கி வந்த ஆணையர்கள் பலரும் செய்த முக்கிய பணிகள் எதற்கும் புது சட்டங்கள் போடப்படவில்லை. ஏற்கனவே ஆணையத்துக்கு இருந்த அதிகாரத்தைக் கொண்டே அவை செய்யப்பட்டன. எனவே தேர்தல் ஆணையமானாலும், உச்ச நீதிமன்றமானாலும் லோக்பாலானாலும் யார் அங்கே பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதே முக்கியம். நியமிக்கப்படுபவர் சரியானவராக இருந்தால் இருக்கும் சட்டங்கள் தாராளமாகப் போதுமானவைதான்.

லோக்பாலுடன் சேர்த்து ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த.இப்போதைய மசோதா வழிசெய்திருக்கிறது. இதற்காக அரசியல் சட்டம் 253ம் பிரிவைப் பயன்படுத்தியுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.,மு.க், திரினமூல் உள்ளிட்ட பல மாநிலக்கட்சிகள் எதிர்ப்பு காட்டுகின்றன. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு இதன் மூலம் தலையிடுவதாக அவை சொல்வது சரியல்ல. நீங்கள் விரும்பினால் லோக் ஆயுக்தாவை நியமியுங்கள் என்று சொன்னால் கருணாநிதியோ ஜெயலலிதாவோ, லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களோ நிச்சயம் செய்யமாட்டார்கள். இத்தனை வருடம் செய்யவே இல்லையே! லோக் ஆயுக்தா வந்தால் முதலில் நேரடியாக புழல் சிறைக்கு அனுப்பப்படக் கூடியவர்கள் எப்படி தாங்களே சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வார்கள் ? லோக் ஆயுக்தாவால் எடியூரப்பாவுக்கு ஏற்பட்ட கதி அவர்களுக்கு மறக்குமா ? மனித உரிமைகள் ஆணையத்தை ஒவ்வொரு மாநிலமும் இப்போது அமைத்திருப்பதற்குக் காரணம் அது 253ம் பிரிவின் கீழ் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதினால்தான். லோக்ஆயுக்தாவும் அப்படி வற்புறுத்தினால்தான் வரும்.

- if lokayutha in the control on central govt. it will act like the Govoner of the state. it should be independent body without political infulences. See in Karnataka Hende resigned and supports Congress in teh election. only this will happen.


இப்போதைய மசோதாவில் தனியார் நிறுவனங்கள்,காப்பரேட் கம்பெனிகள், மீடியா ஆகியவை உட்படுத்தப்படவில்லை. என்.ஜி.ஓ எனப்படும் தொண்டு நிறுவனங்கள் மறைமுகமாக கொண்டு வரப்பட்டுவிட்டன என்று சொல்லலாம். பொது நன்கொடையோ, அரசு உதவியோ பெறும் அமைப்புகளும் லோக்பால் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்ற விதியின் கீழ் இவை வரும். இன்னும் லோக்பால் கீழ் என்னவெல்லாம் சேர்க்கவேண்டும் என்று கருதுகிறோமோ அதை காலப்போக்கில் ஒவ்வொன்றாகச் செய்யலாம். அடிப்படை அமைப்பு இப்போது வந்துள்ள மசோதாவினால் அமைக்கப்பட்டுவிட்டால், அடுத்த கட்டம் எளிதுதான்.


இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது ஒரு நள்ளிரவில்தான் நடந்தது. அதே போல லோக்பால் மசோதாவும் மக்களவையில் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ( என்னை 12 மணிக்கு எழுப்பி புதிய தலைமுறை டி.வியில் கருத்து கேட்டார்கள் ! ) சுதந்திரத்தை விமர்சிக்கும் புதுக் கவிதைகளில் என்னால் மறக்க முடியாதது : அரங்கநாதன் எழுதிய “இரவிலே வாங்கினோம். இன்னும் விடியவே இல்லை.” . லோக்பாலும் இரவிலே வந்திருக்கிறது. ஊழலுக்கு விடிவு காலம் வருமா?


- Sure it will

Daily Calendar