Showing posts with label பிராமணன். Show all posts
Showing posts with label பிராமணன். Show all posts

எங்கே பிராமணன்?

நான் பிராமணன் அல்ல. நான் பிராமணன் என்று கூறியிருக்க முடியாது, மாட்டேன் - இது தன்னிலை விளக்கம் நீங்களும் பிராமணனாக இருக்க முடியாது. - இது உஙகள் நிலை நான் விளக்ககுவது.ஏன், இன்றைய காலத்தில் யாருமே இருக்கமுடியாது. - இது பொதுவான பிறனிலையை நான் விளக்குவது.

பிராமணன் பொய் சொல்லக்கூடாது. இன்றைய உலகில், பிராமணன் என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி க்ளெய்ம் செய்யும் அந்த வினாடியே அதற்கு தகுதியற்றவர் என்று ஊர்ஜிதப்படுத்திவிடுகிறார்கள். ஏன்? இது வேண்டுமென்று செய்வதல்ல. பாவம், கோட்பாடுகளை சரிவர புரிந்துக் கொள்ளாததனால் தான்.
”சிம்ப்ள் லாங்குவேஜ்ஜில்” - ஆங்?( huh? என்பதின் தமிழாக்கம்) -சொல்லுகிறேன். புனிதமான நாலு வாழ்க்கை வழிமுறைகள் மனுஸ்மிருதியில் சொல்லி வைக்கப்பட்டது. ஹயரார்க்கி படி இது,

பிராமண வழி
வேத சாஸ்திரங்களை கற்க்கவும், கற்றதனால் அடைந்த ஞானத்தை புகட்டி நாடு நல்வழியில் செல்ல உதவி செய்வதும், பொய் சொல்லாமலிருப்பதும், யாசகம் செய்தே தன் பசி ஆறிக் கொள்வதும் (சாதரணக் காரியமில்லை சாமி)

ஷத்திரிய வழி
நாட்டை செவ்வனே ஆள்வதும், தன் பிரஜைகளை பசியில்லாமல் வைத்துக்கொள்ள பாடுபடுவதும், பகைவர்களிடமிருந்து அவசியம் நேர்ந்தால் போரிட்டு நாட்டை பாதுகாப்பதும் (இது முதல் வழியை காட்டிலும் கடினம் போல் தோன்றுகிறது)

வைசிய வழி
நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் வாணிபத்தில் ஈடுபட்டு பொருளீட்டுவதும், அரசாஙத்திற்க்கு வரி வருவாய் பெருக்குவதும் (ஒர் அளவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது)

சூத்திர வழி
முதல் மூன்று பிரிவிற்க்கும் வேண்டிய சில பனிகள் செய்வதும், பிற சில பனிகளும் - night soil உட்பட (இது எல்லாவற்றையும் விட கடினம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது என்ன பிரமாதம் என்று தோன்றும். யோசித்துப்பார்த்தால், நாம் மற்ற மூன்றும் செய்ய ஒத்துக்கொண்டாலும், இந்த வேலை செய்ய பயங்கர strike செய்வோம்)
என்று அழைக்கப்படும். (இது போக பஞ்சமர் என்று ஒன்று உண்டு. அது இங்கு தேவை இல்லை.)

இது புனிதமாக போற்றப்பட்டு மிகவும் நெருக்கமாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. எது கடினம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த hierarchyஐ ஏற்றுக் கொண்டு இங்கு விவாதிப்போம்.

பிறப்பால் ஒருவர் இந்த நான்கில் எவற்றிலும் வகைபடுத்தப்படமாட்டார். அவரவர் கடைபிடிக்கும் வழிமுறைப் படியே வகைப்படுத்தப்படுவார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி தாவலாம். கீழ் league இலிருந்து மேல் leagueற்க்கு போகலாம். ஷத்ரிய விஸ்வாமித்ரர் பிராமண ரிஷி ஆக முடிந்தது இதனால் தான்.மேல் leagueஇலிருந்தும் கீழ் leagueற்க்கு ஜம்ப் பண்ணலாம்.

இந்த விதிமுறைகளை இன்று ஏற்று கொள்ளும் பட்ச்சத்தில் எல்லோருமே வைசிய வழியைத் தான் பின் பற்றுகிறோம். கோவிலில் அர்ச்சகர் சம்பளம் வாங்கிக் கொண்டே பூஜை செய்கிறார். President, PM, MP, CM, MLA சம்பளம் வாங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். சூத்திரர் என்று இன்று வகைப்படுத்தப்படுபவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டே வேலை செய்கிறார்கள். எல்லோரும் தங்கள் serviceஐ விற்பனை செய்கிறார்கள். இதிலிருந்து தெரிவது என்ன? எல்லோரும் வியாபாரிகளே. அல்லது எல்லோரும் வைசியர்களே. (ஆனாலும் நாம் ஒழுக்கமான வைசியர்கள் இல்லை என்பதுஎன் அபிப்ராயம். அதாவது, அந்த வழிமுறையைக்கூட விதிகளுக்குட்பட்டு செய்யவில்லை )

இது அல்லாமல் ”நான் பிராமணன்” என சொல்பவர்கள் அந்த வார்த்தையின் புனிதத்தை கெடுக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றும். வேண்டுமானால், ஐயர் என்றோ ஐயங்கார் என்றோ சொல்லிக் கொள்ளலாம். அது வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தையே தவிர இந்த புனித அமைப்புகளை refer செய்யும் வார்தைகளல்ல. (நண்பன் RV தன்னை ஐயர் என்று சொல்லும் பொழுது இவன் மட்டும் தான் இந்த வார்தைகளை சரியாக பி்ரயோகப்படுத்துவதாக எனக்குப் படும்.)
சூத்திரர் என சொல்லிகொள்பவர்களும் அதன் புனிதத்தை கெடுக்கிறார்கள். அவர்களும் வியாபாரிகளே.

இன்று வர்ணங்களை நேசிப்பவர்கள் வேண்டுமானால் தங்களை இப்படி சொல்லிகொள்ளலாம் - வைசிய நாடார், வைசிய ஐயர், வைசிய ஐயங்கார், வைசிய பிள்ளை, வைசிய xyz என்று.