Showing posts with label திராவிட இயக்கம். Show all posts
Showing posts with label திராவிட இயக்கம். Show all posts

தமிழனின் தீராத சனி -திராவிட இயக்கங்கள்!

அனைவருக்கும் தெரிந்த, பெரும்பாலனவர்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் இருப்பதைத் தான் தலைப்பாகச் சொல்லி இருக்கிறேன்.

டி.ஆர் பாணியில்...
சனிக்கோ எள்ளு,பெரியார் திராவிடனுக்கோ ஃபுல்லு...
பணத்தைக் கண்டு விடுவதோ ஜொள்ளு
இவர்களின் கொள்கை நாடகம் ஒரு லொள்ளு
இந்த ஈழப் பிண வியாபாரிகளைப் (திராவிட இயக்கங்கள்) புறம் தள்ளு
தமிழன் விழித்தால் உங்கள் தலையில் விழும் கல்லு
பெரியாரின் திராவிடனே நில்லு...
திராவிடன் கேட்கிறேன் சொல்லு!

இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அந்தக் கும்பலைப் பெரியாரின் திராவிடனாகவும், நம்மைப் திராவிடனாகவும் சொல்லி இருக்கிறேன். பெரியார் வந்து திராவிடத்தைக் கண்டுபிடிக்க வில்லை. அவருக்கு ஏற்றார் போல திராவிடத்தை மாற்ற முயற்சித்தார், அப்படி மாறியவர்களே பெரியார் திராவிடன். ஏதோ திராவிடனை இவர்கள் தான் லீசுக்கு எடுத்தது போல பேசுவது உண்மைத் தெர்ந்தவர்களுக்கு சிரிப்பைத் தான் வரவழைக்கும் : )
-----------------------------------------------------------------------------------
திராவிட இயக்கமும், சனியும் ஒரு ஒப்பீடு !
இருவருக்கும் கருப்பு தான் பிடித்த நிறம்.
காக்கா - சனிப்பகவானுக்குப் பிடித்த வாகனம் .காக்கா பிடிப்பதே திராவிட அரசியலின் தாரக மந்திரம்.
சனி நம் வீட்டிற்கு வந்தால் தனி மனிதனுக்கு கஷ்டம்திராவிட இயக்கம் இங்கே வந்ததால், தமிழ்நாட்டிற்கே கஷ்டம்!
2 1/2 வருடத்திற்கு ஒரு முறை வீடு மாறுபவர் சனிகாசு கொடுத்தால், எப்பொழுதானாலும் கொள்கை மாறுபவர்கள்

திராவிட இயக்கங்கள்! காரியம் கைகூட, சனி பகவானுக்கு வைப்பது எள்ளுதமிழனை ஏமாற்ற திராவிட இயக்கங்களுக்கு கொடுப்பது, மந்திரி பதவியும், ஃபுள்ளும்.
ஜென்ம சனியே 7 1/2 வருடம்இந்த சனி எத்தனை வருடம்?
-----------------------------------------------------------------------------------
ஈழத்துப் பிணங்களின் நெருப்பில்,பதவிக் குளிர்க்காயும்,பெரியார் திராவிடர்கள்..!
இது தெரியாமல்கொள்கை என நினைத்துஜால்ரா அடிக்கும்திராவிடத் தொண்டர்கள்..!
திராவிடனே யார்என்று தெரியாதஅப்பாவி பொதுஜனம்..!
-----------------------------------------------------------------------------------
என் கட்சி என் குடும்பம்
என் சொத்து என் கொள்ளை
இதுவே எங்களின் கொள்கை எதிர்த்துப் பேசினால்
பார்ப்பனியம் என்பேன்
மூடநம்பிக்கை என்பேன் தமிழ் விரோதி என்பேன்
ஆரிய மாயை என்பேன் திராவிடத்துரோகி என்பேன்
அடங்கிப் போனால் உன்னைப் பெரியார்த் திராவிடன் என்று சொல்லி
வார்டு கவுன்சிலர் ஆக்குவேன்...!
- தமிழினத் தலைவரும், தமிழர்த் தலைவரும்..


நன்றி : http://poimugam.blogspot.com/2009/09/blog-post.html