Showing posts with label Hitler. Show all posts
Showing posts with label Hitler. Show all posts

சர்ச்சில் இன்னொரு ஹிட்லர்

லட்சக் கணக்கான மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்த ஹிட்லருக்கும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கும் பெரிய வித்யாசம் இல்லை. வங்காளத்தில் 1943ல் ஏற்பட்ட பெரும் பட்டினிச் சாவுகளில் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் சாவதற்குக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்தான் என்று இந்திய விஞ்ஞானியும் எழுத்தாளருமான மதுஸ்ரீ முகர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இயற்பியல் படித்து விட்டு உயர் படிப்புக்கு அமெரிக்கா சென்ற மதுஸ்ரீ சயண்ட்டிஃபிக் அமெரிக்கன் இதழின் முன்னாள் ஆசிரியர். தற்போது ஜெர்மனியில் வசிக்கும் மதுஸ்ரீ இதற்கு முன்பு அந்தமான் தீவுகளில் வாழும் ஆதிவாஅசிகள் பற்றிய நூலை எழுதியிருக்கிறார்.
வங்காளப் பஞ்சம் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தன் ஆய்வைத் தொடங்கிய மதுஸ்ரீ பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கும் பல்வேறு ஆவனங்களை ஆரய்ந்ததில் முப்பது லட்சம் மக்களின் சாவுக்கு சரிச்சில் பொறுப்பேற்ருதான் ஆகவேண்டும் என்ர முடிவுக்கு வந்தார். எனவே தன் நூலுக்கு சர்ச்சிலின் ரகசிய யுத்தம் ( சர்ச்சில்ஸ் சீக்ரெட் வார்) என்றே பெயரிட்டிருக்கிறார்.

சர்ச்சிலுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் உறையூரில் தயாரித்த சுருட்டுகள் மிகவும் பிடித்தவை. ஆனால், இந்தியர்களை அறவே பிடிக்காது. ஹிட்லருக்கு எப்படி யூதர்கள் மீது வெறுப்பு இருந்ததோ, அதே போல சர்ச்சிலுக்கும் இந்தியர்கள் மீது கடுமையான இனத் துவேஷம் இருந்தது. லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவரான காந்தியை, அரை நிர்வாண பக்கிரி என்று வர்ணித்தது சர்ச்சில்தான். இந்தியர்களால் தஙகளைத்தாங்களே ஆளமுடியாது. சுதந்திரம் கொடுத்தால் சிதறி சின்னாபின்னமாகிப் போய்விடுவார்கள் என்று சொன்னார் சர்ச்சில். இன்று அவருடைய பிரிட்டனில் சுதந்திர இந்தியாவில் கல்வி பெற்று தகுதியடைந்த இந்திய டாக்டர்களுக்குத்தான் மிகப் பெரிய கிராக்கி.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் மக்களின் ஹீரோவாக சர்ச்சில் இருந்தார். ஆனால் யுத்தம் முடிந்ததும் நடந்த தேர்தலில் அவர் கட்சி ஆட்சியை இழந்தது.

சர்ச்சிலுக்கு இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் இருந்த வெறுப்புக்கு அளவே இல்லை.1040கஇல் முஸ்லிம் லீக் உருவாகி காங்கிரசுக்குப் போட்டியாக அரசியல் செய்தபோது, சர்ச்சிலின் கருத்து என்ன தெரியுமா? ‘ரொம்ப நலலது. சிக்கிரமே ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொண்டு சாகட்டும் ரத்தக் களறி ஏற்படட்டும்.”

அப்படிப்பட்டவர் 1943ல் வங்காளத்தில் பெரும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டபோது, மூர்க்கத்தனமாக உதவி செய்ய மறுத்தார் என்பதை மதுஸ்ரீ தன் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பட்டினிச் சாவுகள் மிகவும் கொடுமையானவை. உண்மையில் உணவு போதாததால் மட்டுமோ, அடுத்த விளைச்சல் சரியாக நடக்காததினால் மட்டுமோ மக்கள் சாகவில்லை. உனவு போதாமல் போனதற்குக் காரணம் பிரிட்டிஷ் ராணுவம்.

சர்ச்சிலின் அரசு வங்காளத்தில் இருந்த எல்லா கோதுமையையும் தன் ராணுவத்துக்கு வாங்கி முடக்கத் தொடங்கியது. இதனால் வெளி மார்க்கெட்டில் அரிசி உடபட எல்லா தானியங்களின் விலைகளும் ஏறின. பர்மாவிலிருந்து அரிசி வருவது வழக்கம். அதை வரவிடாமல் சர்ச்சிலின் அரசு செய்துவிட்டது. ஜப்பானியர்கள் பர்மா வழியே நுழைந்தால், அவர்கள் வசம் ஒரு படகு, மாட்டு வண்டி, யானை, கார் எதுவும் கிடைக்கக் கூடாதென்று முன்கூட்டியே வங்க பர்மா எல்லைகளில் இருந்த எல்லாவிதமான வாகன வசதிகளையும் அங்கிருந்த அரிசியையும் கூட பிரிட்டிஷ் ராணுவம் கைப்பற்றிவிட்டது. இந்த படகுகளிலும் வண்டிகளிலும்தான் பர்மாவிலிருந்து அரிசி வரவேண்டும். அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

தனியார் சரக்குக் கப்பலகள் முதல் ராணுவக் கப்பலகள் வரை இந்தியப் பெருங்கடலைல் இருந்த எல்லா கப்பலகளையும் ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையை வரவழைத்து வங்காளத்துக்குத் தரும்படி வைசிராய் லின்லித்கோ சர்ச்சிலைக் கேட்டார். சர்ச்சில் மறுத்துவிட்டார். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகிகள் அமெரி, வேவல் ஆகியோரும் சர்ச்சிலுக்கு இங்கிருக்கும் மோசமான நிலையைத் தெரிவித்து உடனே உணவு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி கேட்டார்கள்.

“பஞ்சத்தால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், எப்படி காந்தி மட்டும் இன்னமும் சாகாமல் இருக்கிறார் ?” என்று சர்ச்சில் பதில் தந்தி அனுப்பினார். காந்தி, பாவம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடங்கியது முதல் 1944 வரை சிறையில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவும் கனடாவும் உணவு அனுப்பத் தயாராக இருந்தபோதும் சர்ச்சில் அதற்குக் கப்பலகள் தர மறுத்துவிட்டார். எல்லா கப்பல்களும் யுத்தத்துக்கக தேவைப்படுவதாக அவர் சொன்னார். உண்மையில் அமேரிக்கக் கப்பலகள் முதல் எல்லாமே அப்போது சர்ச்சில் அரசின் கீழ்தான் இருந்தன. உணவுக் கப்பல்களையெல்லாம் பிரிட்டனுக்கு ராணுவத்துக்கு தானியங்கள் எடுத்துச் செல்லவும் , யுத்தம் முடிந்த பிறகு கிரீசிலும் ஐரோப்பாவிலும் தேவைப்படக் கூடிய உணவுகளை ஸ்டாக் செய்வதற்கும் சர்ச்சில் அனுப்பிக் கொண்டிருந்தார். இந்தியாவுக்கு அனுப்பப் போதுமான கப்பலகள் இருந்தன என்பதை அப்போதைய கப்பல் நடமாட்ட ரிகார்டுகளிலிருந்து மதுஸ்ரீ அமபலப்படுத்தியிருக்கிறார்.

உனவு தானியக் கப்பல்கள் வங்கத்துக்கு வருவதாகத் தெரிந்தாலே, உள்ளூரில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பொருளை வெளியே விட்டு விலைகள் விழ ஆரம்பிக்கும் என்று இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகிகள் சர்ச்சில் அமைச்சரவைக்குச் சொன்னதை சர்ச்சில் கண்டுகொள்ளவே இல்லை. ஜப்பான் வசம் பர்மா இருந்தபோதும் வங்கத்துக்கு அரிசி அனுப்ப ஏற்பாடு செய்ய தான் தயார் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறிவித்தார். அந்த செய்தியையே வெளியிடக் கூடாது என்று சர்ச்சில் அரசு சென்சார் செய்துவிட்டது.

விளைவாக வங்காளத்தின் கிராமங்களிலெல்லாம் மக்கள் உணவு இல்லாமல் பட்டினியில் தினசரி 5000, 6000 பேஎர் என்று தெருக்களில் செத்து விழுந்துகொண்டிருந்தார்கள். அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரைப் பிச்சையாகக் கேட்டு கொல்கத்தா நகர வீதிகளில் நுழைந்த கிராம மக்கள் பெரிய பெரிய ஓட்டல்களின் வாசலில் செத்து விழுந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவெங்கும், தமிழ்நாடு உடபட, பெரியதும் சிறியதுமாக சுமார் 40 பஞ்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லாமே பிரிட்டிஷ் சுரண்டலினால் ஏற்பட்டவைதான். மழை பொய்த்ததால் ஏற்பட்ட இழப்பைக் கூட ஈடு செய்ய அரசிடம் தானியங்கள் இருந்தன. ஆனால் பதுக்கல்காரர்கள் விலையை ஏற்ற அனுமதித்தது. பெரும் பணம் இருந்தவர்கள் மட்டும் தப்பினார்கள். ஏழைகள் ஈசல் போல செத்து விழுந்தார்கள்.

வங்கத்தில் மக்கள் செத்து விழுந்தபோது கூட இந்தியாவிலிருந்து கோதுமையையும் அரிசியையும் பிரிட்டன் ஏற்றுமதி செய்துகொண்டிருந்தது. ஆறு லட்சம் டன் தானியங்கள் தேவை என்று வைசிராய் கேட்டார். சர்ச்சில் அரசு கடைசியில் கொடுத்தது வெறும் 30 ஆயிரம் டன்தான். ஆனால் 71 ஆயிரம் டன் அரிசியை இலங்கையில் ரப்பர் தோட்டங்களுக்கு அனுப்பிற்று.

ஏழாண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு மதுஸ்ரீ இந்த நூலை எழுதியிருக்கிறார். முக்கியமான விஷயம், சர்ச்சில் அரசுக்கு எதிராக அவருக்குக் கிடைத்த ஆவணங்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் இருந்துதான். இதுதான் நமக்கு அவர்களுக்கும் உள்ள முக்கியமான வித்யாசம். இன்னும் கூட நெருக்கடி நிலை பற்றிய ஆவணங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சம காலத்திலேயே பல ஆவணங்களை திருத்தியும் மறைத்தும் வைக்கும் பழக்கம் நம் நிர்வாகங்களுக்கு இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால் மறுப்பதற்கும் திரிப்பதற்கும் தயார் நிலையில் இருக்கிறது நிர்வாகம். இந்தச் சூழ்நிலையில் இன்றைய பல அவலங்களை நாளைய வரலாற்றாசிரியர்கள் தோண்டியெடுக்கக் கூட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

அப்போது இன்னொரு ஹிட்லர் என்று நாம் அழைக்க வேண்டியவர்களையெல்லாம், இன்னொரு காந்தி என்று அழைப்பதற்கு மட்டுமே கூட ஆவணங்களைத் தயார் செய்துவைத்துவிட்டுப் போகும் ஆபத்து இருக்கிறது !


Thanks : www.gnani.net