யாருக்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டும்?

கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பரவலான பரிந்துரையின் எதிர்வினையாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தி ஹிண்டு நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.


குடியரசு தினத்தன்று வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருதுதான் இன்றைய நாட்களில், செய்தியாகின்றன. மிர்சா காலிப் மற்றும் சரத் சந்திர சட்டோபத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது, சிலர் அதை எதிர்த்தார்கள். இறந்து போனவர்களுக்கு எல்லாம் அந்த விருது வழங்கப்படக் கூடாது என்பதே அவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில், மிகச் சரியானவர்களுக்கு... அவர்கள் இறந்து போயிருந்தாலும் விருது வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. கடந்த காலங்களில், இறந்த பின்னால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. சர்தார் படேல் மற்றும் டாக்டர் அம்பேத்கார் ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.

மிர்சா காலிப் நவீன மனிதர்தான். ராமரைப் போல புராணகால மாந்தரோ அல்லது கௌதம புத்தர் போல தொன்மையானவரோ அல்ல. நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து வந்தவரே ஆனாலும், நவீன நாகரிகத்தின் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்த மரபுகளை உடைத்தெறிந்தார்.

செய்யுள் ஒன்றில் அவர் இப்படி எழுதுகிறார்:

'ஈமான் முஜே ரோகே ஹை
ஜோ கின்சே ஹெ முஜே கஃபர்
காபா மேரே பீசே ஹை
கலீசா மேரே ஆகே..'

இதில் 'கலீசா' என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் தேவாலயத்தைக் குறிக்கும். ஆனால் இங்கே நவீன நாகரிகத்தைக் குறிக்கிறது. அதேபோல, 'காபா' என்பது இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவைக் குறிக்கும் நேரடியான சொல். ஆனால் இங்கே அது நிலப்பிரபுத்துவத்தைக் குறிக்கிறது. ஆக, இந்தச் செய்யுள் தரும் உண்மையான பொருள் என்னவெனில்: "மத நம்பிக்கை என்னை பின்னுக்கு இழுக்கிறது, ஆனால் ஐயப்பாடுகள் என்னை முன்நோக்கி இழுக்கின்றன; நிலப்பிரபுத்துவம் என் பின்னால் இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னால் இருக்கிறது."

காலிப், இதன் மூலம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நவீன நாகரிகத்தை அங்கீகரிக்கிறார். அதுவும் இந்தியா நிலப்பிரபுத்துவச் சூழலில் ஆழ்ந்திருந்த 19-ம் நூற்றாண்டின் மத்தியில் இதை எழுதுகிறார்.

உருதுக் கவிதை, இந்தியப் பண்பாட்டுப் புதையலில் மின்னும் ரத்தினமாக இருப்பது ('உருது என்பது என்ன' என்ற என் கட்டுரையை www.kgfindia.com என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்). மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது இந்தச் சிறந்த மொழிக்கு. 1947-க்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளில், கற்றவர்கள் மத்தியில் மிகச் சரளமாகப் புழங்கக் கூடிய மொழியாகத்தான் உருது இருந்தது. இந்து, இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்துவர் என யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் உருது மொழி பேசுபவராக இருந்தார்கள். எனினும், 1947-க்குப் பிறகு சில தீய சக்திகள் உருது மொழியை அயல் மொழி என்றும் அது இஸ்லாமியர்களின் மொழி மட்டுமே என்றும் தவறான பொய்யுரைகளைப் பரப்பினார்கள்.

உருது மொழியில் மிக முன்னோடியான ஒரு நபர் மிர்சா காலிப். நம்முடைய கலவையானப் பண்பாட்டின் மிகச்சிறந்த பிரதிநிதியாவார். அவர் இஸ்லாமியராக இருந்த போதும், மதச்சார்பின்மையுடன் இருந்தார். பல இந்து மத நண்பர்களையும் அவர் கொண்டிருந்தார். அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம்முடைய பண்பாடு, அதில் முக்கியக் கூறான உருது, இன்னமும் நம்மிடையே வாழ்கிறது.

ஏப்ரல் 2011-ல் டெல்லியில் நடந்த ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின் போது நான் முதன்முதலாக காலிப் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அங்கு கூடியிருந்த பிரபலங்களால் அது பெருமளவு ஆமோதிக்கப்பட்டது. சபாநாயகர் மீரா குமார், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், முதன்மை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ஆகியோர் அவர்களில் சிலர். எனினும், சில நாட்களில் முன்னணி பத்திரிகை ஒன்று என்னுடைய கோரிக்கையை 'பைத்தியக்காரத்தனமாகிப் போன சென்டிமென்டலிசம்' என்று எழுதியது.

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சரத் சந்திர சட்டோபாத்யாயாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சரத் சந்திரர் தன்னுடைய கதைகளின் வழியே இந்தியாவை இன்றும் நாசப்படுத்தி வருகிற சாதிய அமைப்பையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும், மூடநம்பிக்கைகளையும் முழு மூச்சாகச் சாடியிருப்பார் (பார்க்க ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ராஹீன், தேவ்தாஸ், பிராமன் கி பேட்டி, கிராமின் சமாஜ் உள்ளிட்ட கதைகளை).

1933-ல் கல்கத்தா டவுன் ஹாலில் அவரைப் பெருமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், தனது ஏற்புரையில் சரத் சந்திரர் இவ்வாறு சொல்கிறார்: ''என் முன்னோடிகளுக்கு மட்டுமே கடன்பட்டது அல்ல எனது இலக்கியம். ஏழ்மையானவர்களுக்கும், தங்களின் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துவிட்டு அதனிடம் இருந்து திரும்ப எதையும் பெற்றுக் கொள்ளாத சாமான்யர்களுக்கும், பலவீனர்களுக்கும் மற்றும் கவனித்துக் கவலைப்பட யாருமே இல்லாது கண்ணீர் சிந்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்களின் துயரங்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்காகப் போராட அவர்களே என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட முடிவுறாத அநீதிகளுக்கும், ஒப்புக் கொள்ள முடியாத, தாங்கிக் கொள்ளமுடியாத அநீதிகளுக்கும் நான் சாட்சியமாக இருந்திருக்கிறேன். இந்த உலகத்தில் வசந்த காலங்கள், அழகோடும் செல்வத்தோடும் அன்று பூத்த பூக்களின் இனிமையான நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றலோடும், குக்கூப் பறவைகளின் பாடல்களோடும் சிலருக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த நல்ல விஷயங்கள் எல்லாமே பூகோளத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. எனது பார்வையோ தொடர்ந்து சிறைப்பட்டிருக்கிறது.''

இந்தியாவில் இன்றும் 80 சதவிகித நம் மக்கள் கொடுமையான வறுமையில், கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், வேலைவாய்ப்பின்மையின் பிரச்னைகள் தாண்டவமாடுகையில், ஆரோக்கியம், வீட்டு வசதி, கல்வி மற்றும் பல பிரச்னைகள் மிகுந்திருக்கும் சூழலில் இந்தப் பேச்சு நிச்சயமாக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும்.

தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து எழுதிய தமிழ்க் கவிஞன் சுப்ரமணிய பாரதிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்களின் முன்னேற்றத்துக்காக வன்மையுடன் எழுதப்பட்ட பாரதியின் கவிதை ஒன்று இங்கே தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் 'ஹின்சா விரோதக் சங் எதிர் மிர்சாபூர் மோதி குரேஷ் ஜமத் மற்றும் பிறர்' தொடர்பான வழக்கில் மார்ச் 14, 2008-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:

'முப்பது கோடி முகமுடையாள்
எனில் மெய்ப்புறம் ஒன்றுடையாள்
இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்'

பாரதியின் இன்னொரு பாடல்:


கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!


ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் காலிப்பை, சரத் சந்திரரை, சுப்ரமணிய பாரதியைப் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இப்படியான ஒரு கீழ்த்தரமான பண்பாட்டுக்குள் மூழ்கிவிட்டோம்.

நம் உண்மையான நாயகர்களை நாம் ஒதுக்கிவிட்டோம். கற்பனை நாயகர்களை மட்டும் கொண்டாடுகிறோம். இன்றைய தலைமுறை இந்தியர்கள் நம் பண்பாட்டில் இருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை நான் வருத்தத்துடன் சொல்கிறேன். இவர்களின் கவலை முழுக்க பணம், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட், கற்பனை உலகம் என்றே இருக்கிறது.

இன்று இந்தியா குறுக்குச்சாலைகளில் நின்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கு வழிகாட்டுவதோடு நில்லாமல் அதனை முன்னெடுத்துச் செல்லும் மனிதர்கள் நமக்குத் தேவை. அப்படியானவர்களுக்கே... அவர்கள் இறந்த போயிருப்பினும் கூட பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு. அப்படியான விருதை சமூகத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றோருக்கு வழங்குவது அந்த விருதை ஏளனம் செய்வதாகும்!

(ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின்: இஸ்லாமியர்களின் கவிதை வாசிக்கும் திருவிழா, கிட்டத்தட்ட நம் ஊர் மார்கழி சீஸன் போல.)



தமிழில் : ந.வினோத்குமார்

Source : Vikatan 
Original Source : Hindu

முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! - ஞாநி, சோ

பலர் முல்லைப் பெரியாறு பற்றி வலைப்பதிவிலும், ட்விட்டரிலும் விவாதிக்கிறார்கள். விவாதிப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியுமா என்று கூட தெரியாது. சும்மா ஜெயும் உம்மன்சாண்டிக்கும் நடக்கும் அறிக்கை யுத்ததை வைத்து நடக்கும் விவாதம் என்றே தோன்றுகிறது.


இந்த வார கல்கியில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்களிலிருந்தும், துக்ளக் பத்திரிக்கையிலிரிந்தும் வந்த சில தகவல்கள். பலருக்கு சரியான தகவல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த பதிவு, அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?
‘தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்’ என்பது கேரள அரசின் நிலை. ‘அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்’ என்பது தமிழக அரசின் நிலை.

இரண்டில் எது உண்மை?
அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தப் பிரச்னை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து, பிரச்னையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாகக் குறைத்துத் தேக்கிய நீரின் அளவை, பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

அப்படியானால் விஷயம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்னை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்துத் தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்னையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது, அந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு, சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட ‘டேம் 999’ படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை, தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கேரள மக்களின் பயத்தைக் கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த அணை யாருக்குச் சொந்தம்? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?
முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.

அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே?
பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்துப் பராமரித்து வருவதுதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்து வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சித் தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.

அப்படியானால் ஏன் கேரளம், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியைக் கிளப்பிவிடுகிறது?
இந்தப் பிரச்னையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது, அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை, திருவிதாங்கூருக்குச் சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.
ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகளையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை, சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முல்லைப் பெரியாறைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படிச் செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது, 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவி குளம் - பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.
தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர் - அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?

ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும்?
“இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அணை உடைந்தால் அந்தத் தண்ணீர் நேராகக் கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறா 4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதிலிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.

இந்தப் பிரச்னையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா?
பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் உத்தரவை ஒப்புக்கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.

அப்படியானால் என்னதான் தீர்வு?
நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ, மேனன் நகைக் கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப் பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்குச் சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம்.
தமிழக சினிமா கலைஞர்களுக்கு, கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால், அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.
தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

( நன்றி: கல்கி )


துக்ளக் பகுதிகள்

கேள்வி : ‘முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பில்லை’ – என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாரே! இதற்குப் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும்?

பதில் : ‘நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது 1974-ல் கேரள அரசினால் நிரப்பப்பட்ட இடுக்கி நீர்த்தேக்கத்தினால்தானே தவிர, முல்லைப் பெரியாறு அணையினால் அல்ல’ என்று சில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ‘ஒரு அணை கட்டி நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்த மாதிரி அதிர்வுகள் தோன்றாது. மஹாராஷ்டிரத்தில், கொய்னா அணை கட்டி சில ஆண்டுகளில், நில அதிர்வுகளும், அதைத் தொடர்ந்து விபத்தும் நேரிட்டன. கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்தில், உள்ள நீரின் அளவு அதிகமாகும்போதுதான் இந்த அதிர்வுகள் அதிகமாகின்றன. ஆகையால், இடுக்கி அணைக் கட்டில், நீர்த் தேக்கத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும்’ என்ற கருத்து அந்த விஞ்ஞானிகளால் கூறப்பட்டிருக்கிறது. இது சரியானதுதானா என்று சொல்லக் கூடிய தகுதி நமக்கு இல்லை. ஆனால், இந்த மாதிரி கருத்துக்களை விவரம் அறிந்தவர்கள் கூறுகிறபோது, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆகையால், இந்தக் கருத்தை ஒட்டிய ஆய்வு நடத்தப்படுவது நல்லது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?
ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?
ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.

உண்ணாவிரதம் இருக்கும் முன் இந்த தகவல் எல்லாம் குஷ்பு படித்திருப்பாரா ?

Source : Kalki, Thgulak, Idlyvadai.blogspot.com

பாரதியார்



வணங்குகிறோம்

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்

1987 டிசம்பர் 2...

ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

டிசம்பர் 5...

அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6...
சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.


டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20
ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.


டிசம்பர் 22...
சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.


டிசம்பர் 23...
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

Thanks and Source : Vikatan
Link : http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=98:2010-12-20-12-10-11&catid=925:2010-12-20-12-47-32&Itemid=89

கொக்கு தலையில் வெண்ணெய்

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, பல இலச்சினைப் பொருள் விற்பனைக் கடைகள் என்றால் 51 விழுக்காடும், தனிஇலச்சினைக் கடைகள் என்றால் 100 விழுக்காடும் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன், கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.


ஆனால், மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடாகிய சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதையும், இந்தோனேஷியாவில் இத்தகைய அனுமதிக்குப் பிறகும் அங்கே 90 விழுக்காடு சில்லறைக் கடைகள் தொடர்ந்து நீடித்து இருப்பதையும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்த நினைக்கிறது.

இதனிடையே, அன்னிய முதலீட்டுக்கு ஆதரவான அமைப்புகள் ஒன்று சேர்ந்து தங்கள் நியாயத்தைப் பத்திரிகைகள் மூலம் பதிவு செய்யத் தொடங்கிவிட்டன. இங்குள்ள ஷாப்பிங் மால் போன்ற உள்ளூர் முதலாளிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ அதையேதான் அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்களும் செய்யப்போகின்றன. ஏன் இந்த பயம்? ஏன் இந்த இரண்டுவகை நியாயங்கள்? என்று புன்னகையுடன் கேள்வி எழுப்புகின்றன.

இத்தகைய பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் வந்தால், ஆங்காங்கே குளிரூட்டு வசதிகளுடன் காய்கறிகளைப் பாதுகாத்து, விலையேற்றத்தை ஒரே சீராக வைக்க முடியும். இதனால் விவசாயிகளுக்குத்தான் அதிக பயன் என்று மத்திய அரசின் இந்தத் திட்டத்தை வரவேற்கும் தொழில்நிறுவன கூட்டமைப்புகள் கூறுகின்றன.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், 60 லட்சம் பேருக்கு சரக்குகள் கையாளும் தொழில்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்லும் வாதங்கள் எந்த அளவுக்கு சரியான புள்ளிவிவரம் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

மத்திய அரசு சொல்வதைப்போல முக்கியமான 53 நகரங்களில் மட்டுமே இந்த பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் தங்கள் கடைகளைத் திறக்கப் போகின்றன என்றால், அதிகபட்சம் ஒரு நகரில் 50 கடைகள் என்றாலும் 2,650 கடைகள்தான் திறக்கப்படலாம். இதனால் ஒரு கோடிப் பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிவிட முடியும் என்பது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் கதையாகத்தான் இருக்கும்.

51 விழுக்காடு முதலீடு செய்யும்பட்சத்தில் 50 விழுக்காடு முதலீட்டை, தொழில் வர்த்தகப் பின்புலக் கட்டமைப்புக்காக ஊரகப் பகுதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. அதாவது, இவர்கள் தங்கள் அங்காடிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வது, உற்பத்தி செய்வது, பதனிடுதல் அல்லது பாக்கெட்டில் அடைத்தல் ஆகிய பணிவாய்ப்புகளைக் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடாது என்பது இந்த நிபந்தனைக்குப் பொருள். ஆனால், இதனை கண்காணிக்கப் போவது யார்? இதைக் கண்காணிக்க இயலுமா? அதை மாநில அரசு செய்யுமா அல்லது மத்திய அரசு செய்யுமா?

பன்னாட்டு நிறுவனங்களின் செய்கைகளை நமது அதிகார வர்க்கம் கண்காணித்து நெறிப்படுத்தும் என்பதை நாம் நம்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு 100 விழுக்காடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தனியாக ஒரு கம்பெனி தொடங்கி, நிலங்களைச் சொந்தமாக வாங்கியோ, குத்தகை எடுத்தோ விவசாயம் செய்யலாம். காய்கறி விளைவிக்கலாம். அதாவது காலப்போக்கில், சிறு விவசாயிகள் கபளீகரம் செய்யப்பட்டு அவர்கள் விவசாயக் கூலிகளாகவும், நகரங்களில் ரிக்ஷா தொழிலாளர்களாகவும் கைவண்டி இழுப்பவர்களாகவும் கூலியாள்களாகவும் காவலாளிகளாகவும் ஏவலாளிகளாகவும் பிழைப்பை நடத்துவார்கள் என்று பொருள்.

மருந்து தயாரிப்புத் துறையில் 100 விழுக்காடு முதலீட்டுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் 100 விழுக்காடு முதலீட்டில் புதிய கம்பெனிகள் தொடங்காமல், இங்குள்ள புகழ்பெற்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடும், ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீடும் அனுமதிக்கப்பட்டுவிட்டது. விமானப் போக்குவரத்துத் துறையில் அன்னிய முதலீடு 26 விழுக்காடு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுவிட்டது.

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

Source : Dinamani

முல்லைப் பெரியாறு: உண்மை சொல்லும் குறும்படம்

'டேம் 999' என்ற பெயரில் ஓர் ஆங்கிலப் படத்தை எடுத்து, முல்லைப் பெரியாறு அணையையே உடைக்கும் அளவுக்கு கேரள மக்களை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.


ஆனால், உண்மையில் இந்த அணைக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்துக்குமே வரலாற்று ரீதியில் தொடர்பே இல்லை.

அந்தக் காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கு தவறாக ஒப்பந்தம் போட்டுவிட்டது ஆங்கிலேய அரசு. ஆனால், ஒரு காலத்தில் சேர நாட்டுப் பகுதியில் இருந்த பூனையாற்று சமஸ்தானம் எனும் தமிழ்ப் பகுதியை ஆண்ட, பூனையாற்று தம்பிரான் என்பவருக்குத்தான் முல்லைப் பெரியாறு பகுதியே சொந்தமாக இருந்தது.

இந்த பகீர் உண்மைகளை குறும்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்!

இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்... பகிருங்கள்.


குறும்படத்தைக் காண - http://www.youtube.com/watch?v=l7uJ1nhXZ_A


Thanks Vikatan

கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்

கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..


வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு , அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....

எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...

தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு

கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ... மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...

கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....

25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....

முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ... பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... ( இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு , உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
( அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.

வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)

கொஞ்சம் கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும்...அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம் , எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...

எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ , அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் , தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....


என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க ???.....

............. சத்தியமா நான் எழுதல !!!!..............

நான் எழுதாவிட்டாலும் முற்றிலும் உண்மை

லிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...
கதாஃபி... (லிபிய மக்களுக்கு)  மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!
கதாஃபி... (லிபிய மக்களுக்கு)  மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..! தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!

இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!

'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!

மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை... இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!


லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார் 1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!

லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு 'வேலை இல்லை' எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..!

EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..!

மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..! வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)

லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்த கடனுக்கான வட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!

ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..!

ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனே அரசு 50% பில்லை கட்டிவிடும்..!

அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர் ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)

லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே நிற்கிறதாம்..!

ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி. அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில் ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.

ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!

40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..! ஆப்ரிக்காவிலேயே நம்பர் ஒன் பொருளாதாரம் & GDP.

நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project) நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!

இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!

இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?
லிபிய புரட்சியாளர்கள்...
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!

கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)

மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?
"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லும் வரை..!
Thanks : http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_29.html

Chennai Classic Photos






























இப்போதுதான் வெடித்ததா கூடங்குளம் போராட்டம்?

தமிழகத்தின் கடற்கரை நீளம் 1,076 கிலோமீட்டர்கள். இது முழுக்க இருக்கும் கடலோர கிராமங்கள் அனைத்தில் இருந்தும் மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள், அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு!

அதில், 127 பேர் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக சுமார் 11,000-க்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தார்கள்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் இருந்தார்கள். போராட்டம் தொடங்கிய செப்டம்பர் 11 ஆம் தேதியில் இருந்து வயல்களுக்கோ, கடலுக்கோ அவர்கள் செல்லவில்லை. உப்புக் காற்றையே உணவாக்கிக் கொண்டு சோர்ந்து உறங்கின குழந்தைகள். பள்ளிக்கூடங்கள் அறிவிக்கப்படாத விடுமுறையைப் பெற்றிருந்ததால் மதிய உணவையும் தியாகம் செய்து பசியில் துவண்டு போயிருந்தார்கள் மாணவர்கள்...
- இவை அண்மைய போராட்ட நிகழ்வின் சிலக் குறிப்புகளே.

இப்போது...

'கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது. ஆனால், அது பாதுகாப்பற்றது என்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள்' என்று, இந்திய அணுசக்தி கழகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி பாதிப்புக்கு வாய்ப்பில்லை, அணு மின் நிலையத்துக்குள் தண்ணீர் புகாது என்றெல்லாம் ஆருடம் சொல்லியிருக்கிறது அணுசக்தி கழகம்.
கூடங்குளம் விவகாரம் குறித்து புதன்கிழமை சுமார் அரைமணி நேரம் பிரதமரிடம் இணையமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.
நிலக்கரி, தண்ணீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போதைய மின் தட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யாது. ஆகையால் நாட்டுக்கு அணுசக்தி மின்சாரம் தேவையானது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன என்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை நாராயணசாமியிடம் பிரதமர் கூறினாராம்!


மின்சாரத் தேவை பூர்த்தியாகிறதா?
ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புக்குப் பிறகு அணு உலைகளின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது மக்களுக்கு. அணுமின் நிலையங்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லி வந்த படித்த மக்கள் கூட தற்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஹிரோஷிமா நாகசாகி முதல் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் மார்கூல் என்ற அணு உலை வெடித்தது வரை எத்தனையோ அணு விபத்துக்களை உலக நாடுகளின் அரசுகள் பார்த்திருந்தாலும் அதன் அபாயத்தை உணராமல் மேலும் மேலும் புதிய அணுமின் நிலையங்களை ஏற்படுத்தி வருகின்றன.
வளர்ந்த சில நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மூடிவிட்டு தங்களுக்கான மின்சாரத் தேவைக்காகவும், அணு ஆயுதங்களுக்காகவும் வளரும் நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் புதிய அணு உலைகளுக்குத் திறப்பு விழா நடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
இயற்கை விவசாயத்தையே அங்கீகரிக்கத் தயங்கும் நம் இந்திய அரசு, நாடெங்கும் அணுமின் நிலையங்கள் தொடங்க பன்னாட்டு அரசுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்ததில் எந்த ஓர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடையத் தேவையில்லை. இந்தியாவில் 'மின்சாரத்துக்காக' என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்ட அணுமின் நிலையங்கள் உண்மையாகவே அவை தொடங்கப்பட்டதற்கான தேவையைப் பூர்த்தி செய்திருக்கின்றனவா என்றால் அதுதான் இல்லை. நமது நாட்டின் மின்சாரத் தேவைக்கும் அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறனுக்கும் இருக்கும் இடையே வித்தியாசங்கள் நிறைய..
இந்த இடத்தில் வியப்பளிக்கும் இன்னுமொரு தகவல், மரபு சாரா எரிசக்தி முறைகளுக்கு ஊக்கமளித்து சரியாகச் செயல்பட வைத்தால் நம் நாட்டினுடைய மின்சாரத் தேவையைப் பாதியாகக் குறைக்க முடியும் என்பது. ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அணுமின் நிலையங்கள் அமைக்க கோடி கோடியாகப் பணத்தை இறைப்பது ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலை அரசு ஒருபோதும் சொல்லப்போவது இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தாலும் ஒன்று 'மின்சாரத்துக்காக' என்றோ அல்லது 'பாதுகாப்புக் காரணங்களுக்காக பதில் அளிக்க முடியாது' என்றோ தான் தகவல் வரும்.
தற்போது இந்தியாவில் 20 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்திய - அமெரிக்க, இந்திய - ரஷ்ய, இந்திய - பிரான்ஸ் அணு ஒப்பந்தங்கள் வேகவேகமாகக் கையெழுத்தாகி வருகின்றன. ஒவ்வொரு அணுமின் நிலையங்கள் அமைந்திருக்கும் மாநிலங்களிலும் அணுசக்தியை எதிர்த்து குரல் எழும்புகின்றன. புதிதாக முளைக்க இருக்கும் ஒப்பந்தங்களை எதிர்த்தும் மக்கள் போராடுகிறார்கள். எங்கெல்லாம் மக்கள் கொதிப்படைகிறார்களோ அங்கெல்லாம் போலீஸாரால் ஒடுக்கப்படுகிறார்கள்.


எதிர்ப்பு வலுத்துள்ளதன் பின்னணி...
1988-ல் கையெழுத்தாகி 1997-ல் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ஆரம்பித்து சுமார் 12 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை இந்த அணுமின் நிலையம். கட்டுமானப் பணிகளில் எத்தனையோ குழப்பங்கள், விபத்துகள் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கே பணியாற்றும் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக வேறு ஒரு பெயரில் போலியாகப் பணியாற்றி வந்ததாகவும், அவரைக் கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தங்களின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரையே தன்னால் சரிவர சோதனை செய்யாத அரசு, எவ்வாறு தன் நிலையத்தில் இருக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்கும்? எவ்வாறு தன் உலைகளில் இருக்கும் குறைபாடுகளைக் கவனிக்கும்? எவ்வாறு அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வெளிப்படுத்தும்?


இத்தனை நாள் இல்லாது திடீரென்று ஏன் இந்தத் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. உண்மையில், இத்திட்டம் கையெழுத்தான தினத்தில் இருந்தே பல்வேறு வழிகளில் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் வரவில்லை. ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை. அதனால் கூடங்குளம் பகுதியைத் தாண்டி வேறு பகுதிகளுக்குச் செய்திகள் முழுமையாகச் சென்று சேரவில்லை.
மூன்று மைல் தீவு, செர்னோபில், அவ்வப்போது கல்பாக்கத்தில் நிகழும் விபத்துகள் போன்றவை ஏற்பட்ட போதும் கூட கூடங்குள மக்களின் அலறல் நம் யாருக்கும் கேட்கவே இல்லை. இந்த வருடத்தின் தொடக்க மாதங்களில் நிகழ்ந்த ஃபுகுஷிமாவுக்கு விபத்துக்குப் பிறகுதான் இந்த மக்களின் கோரிக்கையின் மீது வெளிச்சம் படர்கிறது.


எதற்காக அச்சம்...
கூடங்குளம் கிராமம் விவசாயிகளும், மீனவர்களும் அதிகம் உள்ள பகுதி. ஒருவேளை இந்த அணு உலைகள் செயல்பட ஆரம்பித்தால், உலைகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பயிர்கள் பாதிக்கப்படும். கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகும். அணு உலைகளைக் குளிவிக்கும் குளிர்விப்பான்களாக கடல் நீர்தான் பயன்படுத்தப்படுகின்றது. உலைகளைக் குளிர்வித்த அதே நீர் மீண்டும் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் கடலில் வெப்பம் அதிகரித்து அதனால் கடல்சார் சூழலியல் பாதிப்படையும். இன்னொரு முக்கியமான விஷயம், இன்று வரை அணுக்கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தற்போது பொதுவில் இருக்கும் நடைமுறை, ஒன்று கடலில் கலக்க வைப்பது அல்லது பூமிக்கடியில் புதைத்து வைப்பது. கடலில் கலந்தால் வெப்பம் அதிகரித்து மீன்கள் சாகும். புதைத்து வைத்தாலோ நிலத்தின் தன்மை விஷமாகும்.
அணுமின் நிலையங்களை அமைக்க நிலங்கள் தேர்வு செய்யப்படுவது, அந்தப் பகுதி நிலநடுக்க மண்டலத்துக்குள் வருமா என்ற அடிப்படையில்தான். தமிழக முதல்வரின் சமீபத்திய அறிக்கையில் கூடங்குளம் அணு உலைகள் நிலநடுக்க மண்டலத்துக்கு வெளியேதான் இருக்கிறது என்கிறது. ஆனால் அது முற்றிலும் தவறு. காரணம், 2003 பிப்ரவரி 9 ஆம் தேதி பாளையங்கோட்டையிலும், 2006 மார்ச் 19 ஆம் தேதி கூடங்குளத்தைச் சுற்றியுள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகிய பகுதிகளில் மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிலரின் வீடுகளில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில் மெலிதான நிலநடுக்கம்தான் ஏற்படும். அதனால் கூடங்குள அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எந்த விஞ்ஞானியாவது உத்தரவாதம் தர முடியுமா? அதே அளவு நிலநடுக்கம் தான் மீண்டும் அந்தப் பகுதிகளில் ஏற்படும் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
இத்தனைக்கும் கூடங்குளத்தின் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பிக்கவில்லை. ஏனெனில், 1980களில் அப்படி ஒரு முறையே பின்பற்றப்படவில்லை. மூன்றாவது மற்றும் நான்காவது உலைகளுக்கு மட்டும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைப் பெற்றிருக்கிறார்கள் அணுசக்தித் துறையினர் என்றொரு கருத்தும் நிலவுகிறது.
மேலும், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன. 2007 ஜனவரியில் இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அணுசக்தி துறையினரால் வழங்கப்பட்டு 'தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்' முதலாவதாக ஒரு நோட்டீஸை அச்சடித்தது. அதில் 'ஆலை அமைந்துள்ள இடம் / இடப்பெயர்ச்சியாக வேண்டிய செயல்கள், இத்திட்டால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிற உண்மையான குடிமக்கள்' ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு 2007 மார்ச் மாதத்தில் 'மக்கள் கருத்துக் கேட்பு' கூட்டம் நடைபெறும் என்று சொல்லி இரண்டாவதாக ஒரு நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் இரண்டாவதாக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸில் 'இடப்பெயர்ச்சி, பாதிக்கப்படுகிற' போன்ற வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன.


காணாமல் போன கால்வாய்..
பல கோடி ரூபாய் செலவு செய்து அழிவு வேலையைத் தொடங்க இருக்கிற நம் அரசாங்கம் நமது விவசாய மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை மிகத் திறமையாகவே செய்து கொண்டு வருகிறது. அதற்கு ஓர் உதாரணம் பெருஞ்சானிக் கால்வாய். கூடங்குளத்திற்கு அருகே உள்ள பரமேஸ்வரபுரம் என்கிற கிராமத்தில் பேச்சிப்பாறையில் இருந்து நீர் கொண்டு வர ஒரு கால்வாய் கட்டப்பட்டது. அப்போது காமராஜர் முதல்வராக இருக்க, கக்கன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இதற்காக அவர்களின் நினைவாக ராதாபுரம் பேருந்து நிலையத்தில் காமராஜர், கக்கன் ஆகியோர் இருவருக்கும் சிலை வைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை. அவர்கள் ஏற்படுத்தித் தந்த இந்தக் கால்வாய் தற்போது பாழடைந்து கிடக்கிறது.
அந்தக் கால்வாய் இருந்த வரையில் சுமார் பத்து கிராமங்களின் விவசாயத்தை வாழ வைத்ததாகச் சொல்கிறார்கள் கிராம மக்கள். காமராஜர் காலத்திற்குப் பின் வந்த அரசுகள் அந்தக் கால்வாயை முறையாகப் பராமரிக்காததால் இன்று அது புதர் மண்டி, சிதைந்து, இடிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்ட நிலங்களுக்கு அருகில் பரிதாபமாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.



அரசின் கடமை எது?
"சாதாரண நாள்லயே எங்களை கடலுக்குள் மீன் பிடிக்க அனுமதிக்கிறதில்ல... இப்ப இதுல வேற அணு உலை அமைஞ்சிருக்குற கடல் பகுதியில மூன்றடுக்கு பாதுகாப்பு வேற போட்டிருக்காங்க. அதனால இனிமே கடலுக்குள் போகவே முடியாதோங்கிற சந்தேகம் வந்துருச்சு.." என்று வருத்தப்பட்டார் ஒரு மீனவர். விவசாயத்தை அழிப்பதும், வாழ்வாதாரத்தை நசுக்குவதும் தான் ஓர் அரசு தன் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மையா?
'30க்கும் மேற்பட்ட அணு உலைகளைக் கொண்டிருக்கிற பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் மின்சாரம் பெறவில்லையா... அவர்கள் நாட்டில் என்ன ஆபத்து நிகழ்ந்துவிட்டது?' என்று கேட்கிறார்கள் வலதுசாரி அரசியலைப் போற்றுபவர்கள். இப்போது அந்த தேசங்களில் இரண்டுவிதமான பிரச்னைகள் முளைத்திருக்கின்றன. ஒன்று, அணுக்கழிவுகளைப் புதைக்க நிலம் தர மறுக்கிறார்கள் மக்கள். இரண்டு, அணு உலைகளைக் குளிர்வித்த ஆற்று நீரை மீண்டும் ஆற்றுக்குள் செலுத்துவதால் ஆறு சூடாகி வறட்சியாகிறது. ஆறு வறண்டு போனால் உலைகளைக் குளிர்விக்க முடியாது. குளிர்விக்க முடியாமல் போனால் மின்சாரம் தயாரிக்க முடியாது. இந்த உண்மையை அணுசக்தி ஆதரவாளர்கள் எப்போது தெரிந்து கொள்வார்கள்?
பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்ட அரசு, பிளாஸ்டிக்கைக் காட்டிலும் அதிக அளவு அபாயம் உள்ள அணு உலைகளுக்கு அனுமதி அளிக்கும் விதத்தில் நடந்து கொள்வது நகைமுரணாக இருக்கிறது. 'மண் பயனுற வேண்டும்... இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் சோறிட வேண்டும்!' என்பதே அறிவியலின் அடித்தளமாக இருக்க வேண்டும். ஓர் அரசின் அடிப்படைக் கடமையும் அதுவாக அமைய வேண்டும்!


"முட்டாள்தனமானது!"
இடிந்தகரையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவு அளித்த சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் சென்னை திரும்பிய போது அவரிடம் பேசினேன்.
அணுமின் நிலையங்களுக்காக நிலத்தை அபகரிக்க அணுசக்தித் துறை தன்னுடைய சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிகிறதே? என்று கேட்டதற்கு, "அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அது முழுக்க முட்டாள்தனமானது. அணை கட்டுவதாக இருந்தாலும் சரி, அணு உலைகள் கட்டுவதாக இருந்தாலும் சரி, மக்களைத் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டு மேற்கொள்வது அடிப்படையான மனித உரிமை மீறல்!" என்றார்.

அணுமின் நிலையம் தொடர்பான இந்த மக்களின் போராட்டம் அரசியலாக்கப்படுகிறதா என்றதற்கு, "இது அரசியலாக்கப்பட வேண்டும் என்றுதானே போராடுகிறோம். இது மட்டுமல்ல. ஒவ்வொரு பிரச்னையும் அரசியலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்து, விவாதங்கள் துவங்கி ஒரு நல்ல தீர்வுக்கு வர முடியும்!" என்றார் அழுத்தமாக!


இடதுசாரிகளின் மெளனம் ஏன்?
பிரான்ஸ் நாட்டில் இருந்து அணு உலைகள், எரிபொருட்கள், தொழில்நுட்பங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய எதிர்ப்பு காட்டியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள். அதே போல, அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தையும் எதிர்த்தார்கள்.
ஆனால், ரஷ்யாவின் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது. இதே வி.வி.இ.ஆர். அணு உலையில் ரஷ்யாவில் 'வெப்ப ஓட்ட' சோதனை நிகழ்த்தப்பட்ட போது அது தோல்வியில் முடிந்திருக்கிறது. மேலும் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது அல்ல என்று அந்த நாட்டின் அனைத்து அணு உலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும், கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடங்குளம் அணு உலைக்கு அழுத்தமாக எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த பிருந்தா காரத், 'அணு உலைகளை எதிர்க்கும் எந்தக் குழுவுக்கும் தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்' என்று பட்டும்படாமலும் சொல்லிச் சென்றார். இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கள்ள மௌனம் ஏன்? இது ரஷ்யாவில் இருந்து வந்த தொழில்நுட்பம் என்பது மட்டும்தானா?

Source : Vikatan.com (http://news.vikatan.com/index.php?nid=4126)

சின்ன கருணாநிதி

சென்னை நூறடி சாலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போது அபகரித்த ஒரு கட்டிடத்தில் சிறுத்தைகள் அலுவலகம் வைத்து நடத்தி வந்து கொண்டிருந்தேன். திடீரென்று நீதிமன்றம் அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட போது, கட்டப் பஞ்சாயத்து செய்து அபகரித்த இடமாயிற்றே என்று கொஞ்சமாவது தயங்கினேனா ? மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெற வேண்டும் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த இடம் கை விட்டுப் போய் விடக் கூடாது என்றும் எத்தனை முறை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியிருப்பேன். ?
ஒரே ஒரு காடுவெட்டி குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியே உடைந்தது.
விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டங்களின் போது கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட 16 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை போட்டு, அன்னை சோனியாவை திருப்தி படுத்தினீர்களே ? ஏதாவது கேட்டேனா ? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த அந்த 16 பேரின் குடும்பங்கள் என்ன ஆயிற்று என்று கவலைதான் பட்டிருப்பேனா ?
நான் எப்போதும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது என்னுடன் கடற்கரையில் கலந்து ஆலோசிக்கும் எனது பல ஆண்டு கால நெருங்கிய நண்பர் என்னை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போகச் சொல்லியும் கூட, ஜெயலலிதாவை விட மோசமான தமிழினத் துரோகி நீங்கள் தான், அதனால் உங்களுடன் தான் கூட்டணி என்று இறுதி முடிவு எடுக்கவில்லை ? அதனால் அந்த நண்பர் இன்று வரை என்னடன் பேசவில்லை என்றாலும் கூட, நான் என்ன நட்பை இழந்ததற்காக கவலைப் பட்டேனா ?
அந்த நண்பரை விட, என்னை உங்களோடு இணைத்து வைத்த ஆருயிர் நண்பர் காமராஜ் தானே இப்போது எனக்கு முக்கியமாக இருக்கிறார் ? காமராஜோடு நட்பாக இருப்பதை விடவும், எனக்கு உங்கள் வாரிசாக இருக்க வேறு என்ன தகுதி வேண்டும் ?
பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுக்க பட்ட போது நான் ஒரு இடத்தின் நின்றேன். இன்னோரு இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆரம்பகாலம் முதல் என்னோடு உழைத்து இயக்கத்துக்காக பாடு பட்டவர்களுக்கா கொடுத்தேன் ? வேலாயுதம் என்ற மோசடி பேர்விழிக்குத் தானே கொடுத்தேன் ?
தலித் சமுதாயத்திற்காக பாடு படுகிறேன் என்று அரசியலுக்கு வந்து விட்டு உங்களைப் போலவே சினிமாவில் நடிக்கிறேன் என்று சில காலங்கள் கூத்தடித்துக் கொண்டிருக்கவில்லையா நான் ?
நீங்கள் நினைத்திருந்தால் எனக்கு ஒரு துணை அமைச்சர் பதவியையாவது வாங்கித் தந்திருக்க முடியும் என்றாலும், நீங்கள் மாற்றான் வீட்டுப் பிள்ளை போல என்னை கண்டு கொள்ளாமல் இருந்தும், ஒரு முறையாவது ரோஷப் பட்டுக் கேட்டிருப்பேனா உங்களிடம் ? தலைவர் கொடுத்தார். நான்தான் வேண்டாம் என்று விட்டேன் என்றல்லவா ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிகிறேன்.
தலித்துகளுக்கு இதயத்தில் இடம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் கட்டுக் கதையை நம்பிக் கொண்டு, தலித் சமுதாயத்தினருக்கு உங்கள் அரசு இழைக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கவில்லையா நான் ?
இப்போத பணி இடை நீக்கம் செய்யப் பட்டிருக்கும் உமாசங்கர் தலித்தாக இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தலித் அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக திரண்டுள்ள நிலையில், இன்று வரை ஒரு வார்த்தை பேசியிருப்பேனா நான் ?
இப்போது சொல்லுங்கள். உங்கள் வாரிசாக என்னை விட தகுதியானவன் யார். அதனால், எனது பிறந்த நாளான இன்று முதல், என்னை “சின்னக் கருணாநிதி“ என்று அழைக்குமாறு உங்கள் கழக உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்டீர்கள் என்றால், இதை விட எனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.


Source : http://www.savukku.net/

ஊழலே உன் வேர் எங்கே ?

பிரெஞ்ச் மொழியில் டேஜா வூ என்றால் ஏற்கனவே கண்டது என்று அர்த்தம். இது ஆங்கில மொழியின் ஒரு தொடராக சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விஷயம் நடக்கும்போது அதே போல முன்னர் ஒருமுறையும் நடந்த உணர்வு மனதில் தோன்றுவதுதான் டேஜா வூ. ஒவ்வொரு முறை ஊழல், லஞ்சம் பற்றி விவாதங்கள் எழும்போதெல்லாம், எனக்கு இந்த டேஜா வூ உணர்வு தவறாமல் ஏற்படுகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னர் 2004ல் ஒரு பிரபல வாரமிருமுறை இதழில் ஊழலே உன் வேர் எங்கே என்று ஒரு தொடர் கட்டுரை எழுதினேன். இப்போது ஊழலை ஒழிக்க முடியுமா, லோக்பால் வந்துவிட்டால், ஊழலை ஒழிக்காவிட்டாலும் குறைத்துவிடமுடியுமா, ஊழலை அடியோடு ஒழிக்க அடுத்து தேவைப்படுவது தேர்தல் சீர்திருத்தமா, இளைஞர்கள் வந்தால் ஊழல் ஒழியுமா என்றெல்லாம் பல கருத்துகள் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தையடுத்து பேசப்படுகின்றன.

எல்லாம் ஏற்கனவே கேட்ட கருத்துகளாகவே தோன்றுகின்றன. ஏழு வருடம் முன்பு எழுதிய கட்டுரைத் தொடரை எடுத்துக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன். டேஜா வூவாக இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் இதோ: ஊழலின் வேர் படிப்பில் இருக்கிறதா? கல்லாமையில் இருக்கிறதா? பன பலத்தில் இருக்கிறதா? கிரிமினல் குற்ற மனப்பான்மையில் இருக்கிறதா? எதிலிருக்கிறது ? நமது எம்.பிகளில் எல்லாவிதமானவர்களும் இருக்கிறார்கள்.
கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். மீடியா பொதுவாகக் கோமாளி என்று வர்ணிக்கிற லாலு பிரசத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்துதுதான் 2004 மக்களவைக்கு மிக அதிகமான படித்த எம்.பிகள் வந்தார்கள். ! லாலுவே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மாணவர் இயக்கத் தலைவராக அரசியலில் நுழைந்தவர்தான்.
புதிய தலைமுறையினர் அரசியலுக்குள் வந்தால் நிறைய மாற்றங்கள் வந்துவிடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், 2004 மக்களவையில் மிக அதிக கடன் பாக்கி, கிரிமினல் குற்றச்சாட்டுக்கெல்லாம் உள்ளான எம்பிகள் அதிகமாக இருந்த லாலுபிரசாத் யாதவின் கட்சியிலிருந்துதான் அதிகமான புதிய தலைமுறையினரும் வந்திருந்தார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் அரசியலுக்கு வந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் லட்சிய நோக்கத்துடன் பொது வாழ்க்கையை தூய்மைப்படுத்தும் அர்ப்பணிப்புடன் வந்தவர்கள் அல்ல. பெரும்பாலோர் ஏற்கனவே அரசியல் கட்சிகளுடன் ஏதாவது ஒரு தொடர்பு இருந்தவர்கள். ஒன்று குடும்பத்தொடர்பு. அப்பா அம்மாவோ, அண்ணன் அக்காளோ, தாத்தா பாட்டியோ அரசியல் பிரமுகராக இருக்கும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அல்லது அரசியல்வாதிகளுக்கு ரவுடித்தனத்தில் ஒத்தாசை செய்து வந்த ரவுடிக் குடும்பங்களிலிருந்து வதவர்கள். அப்துல் கலாம் ஆசைப்படுகிற மாதிரி லட்சிய வேகம் உள்ள இளைஞர்கள் அல்ல. சமூக அறிஞர் ரஜ்னி கோத்தாரி சுட்டிக்காட்டியது போல ஒரு காலத்தில் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக இருந்து வந்த தாதாக்கள் பலரும் 1975க்குப் பிறகு சஞ்சய் காந்தியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, தாங்களே நேரடியாக அரசியல் தலைவராகிவிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து அப்படி ஆகிவிட்டவர்கள்.
ஊழலை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு வேலையை அரசியல்வாதிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது செய்திருக்கிறார்கள். தொழிலதிபர்களோ, சினிமாக்காரர்களோ, வேறு யாராயிருந்தாலும் சரி, கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து அதை அறிவித்துவிட்டால், அதற்கு வெறும் 30 சத விகித வரி விதிக்கப்படும். வரியை செலுத்திவிட்டால் போதும். அந்தப் பணம் எப்படி சம்பாதிக்கப்பட்டது என்ற கேள்வி எதுவும் கேட்கப்படமாட்டாது என்று 1997ல் அறிவிக்கப்பட்டது.
அரசுக்கு வரி வருமானத்தை அதிகரிக்கவும், கறுப்புப்பணத்தை வெள்ளைப் பணமாக்கி சுழற்சிக்குக் கொண்டு வந்து பொருளாதார தேக்கத்தை உடைக்கவும் இதைச் செய்வதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
கணக்கு காட்டாமல் வைத்திருந்த சொத்து பணமாக இருந்தால் 30 சத வரி. கட்டடமாகவோ, நகைகளாகவோ இருந்தால், அதன் மதிப்பில் 30 சத விகித வரி. இந்த இடத்தில்தான் ஒரு சலுகை ஷரத்து சேர்க்கப்பட்டது. அதாவது கட்டடம், நகைகளின் மதிப்பு 1997ம் ஆண்டு மதிப்பாக இருக்கத் தேவையில்லை. 1987ம் ஆண்டு மதிப்பு அடிப்படையில் வரி செலுத்தினால் போதும்.

இதன் விளைவு என்ன தெரியுமா?
கைவசம் கோடிக்கணக்கில் ரொக்கமாக கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் எல்லாம் அந்தப் பணத்துக்கு வரி கட்டாமல், நகையும், கட்டடமும் வைத்திருப்பதாகப் பொய் சொன்னார்கள். அந்தப் பொய் நகைகளுக்குப் பத்தாண்டு பழைய மதிப்பில் வரிகட்டினார்கள். வரி கட்டியபிறகு சில ஆண்டுகள் கழித்து அந்தப் பொய் நகைகளை தற்போதைய மதிப்பில் விற்றுவிட்டதாக இன்னொரு கணக்கு காட்டிவிட்டார்கள். அதாவது கறுப்புப்பணம் வைத்திருந்ததற்கு வரி கட்ட அனுமதி தந்தால்,அதிலும் மோசடி. இப்படி சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கிறது. ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
ஏன் நடவடிக்கை இல்லை ? அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளுக்கு ஏராளமாக பணம் தேவைப்படுகிறது. எதற்காக அவ்வளவு பணம் ? அவர்களுடைய சொந்த ஆடம்பரத்துக்கும் அவர்கள் குடும்பத்தில் அடுத்த பத்து தலைமுறைகளின் தேவைக்காகவும் மட்டுமா இந்த ஊழல்கள் நடத்தப்படுகின்றன? சகிக்கப்படுகின்றன/? இல்லை.
பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை என்றார் வள்ளுவர். நீங்கள் மிக மிக நேர்மையான தனி மனிதராக இருந்தாலும் பெரும் பணம் இல்லாமல் அரசியல் செய்யவே முடியாது என்பதுதான் உண்மை. ஏன் அப்படி ?
இந்திய அரசியலைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பதுதான் அரசியலில் உச்சகட்டம். தேர்தல் விதிகளின்படி சட்டமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் பத்து லட்ச ரூபாய் வரையும், மக்களவைத்தேர்தலில் 25 லட்சம் வரையும் செலவு செய்யலாம். ( இது 2004ல்.)
நேர்மையானவரான உங்களைத் தப்பித்தவறி ஏதோ ஒரு பெரிய கட்சி தன் வேட்பாளராக அறிவித்துவிட்டால் என்ன ஆகும் ? வரம்பை மீறி நான் செலவு செய்யமாட்டேன் என்று முடிவு செய்கிறீர்கள். நீங்கள் ஒரு அரசு ஊழியராகவோ, ஆசிரியராகவோ, பத்திரிகையாளராகவோ, தனியார் அலுவலக ஊழியராகவோ, வேலை பார்த்து வந்த நடுத்தர வகுப்பு அறிவுஜீவி என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சேமிப்பு, பிராவிடண்ட் பண்ட் லோன் எல்லாம் போட்டு தேச சேவை செய்ய முடிவு செய்துவிட்டீர்களானால் கூட, அதிகபட்சம் ஓரிரு லட்சங்களுக்கு மேல் உங்களால் திரட்ட முடியாது.
உங்கள் எம்.எல்.ஏ தொகுதியில் சராசரியாக இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள். நீங்கள் போட்டியிடும் செய்தி ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க, அச்சிட்ட தபால் கார்டை மட்டுமே ஒரே ஒரு முறை அவர்களுக்கு அனுப்புவதானால் கூட, அச்சுக் கூலி 50 பைசா, அஞ்சலட்டை விலை 2 ரூபாய் எம்று மொத்தமாக 5 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு குடும்பத்துக்கு ஒரு கார்டு அனுப்பினாலே, 2 லட்சம் காலி. வீடு வீடாக நீங்கள் நடந்து போனால் கூட, உங்கள் கூட வரும் பத்து பேருக்கும் உங்களுக்கும் சுமார் 25 நாடகள் தினப்படி ஆகும் குறைந்தபட்ச செலவுக்குக் கூட காசில்லை. மிகக் குறைந்தபட்சம் இரண்டு ஜீப், நாலு ஆட்டோ, பத்தாயிரம் சுவரொட்டிகள், இருபது பொதுக் கூட்டங்கள் இல்லாமல் நீங்கள் போட்டியிடும் செய்தியை வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்லவே முடியாது இதற்கான செலவே பத்து லட்ச ரூபாய் தாண்டி விடும்.
நீங்கள் செலவிடும் சொந்தப் பணம் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும் மீதி பத்து லட்ச ரூபாயை உங்கள் கட்சி உங்கள் நேர்மையை மதித்து உங்களுக்காக செலவு செய்ய முன்வருவதாக வைத்துக் கொள்வோம். ( சும்மா ஒரு ஃபேண்ட்டசிதான்). கட்சிக்கு அந்தப் பணம் எங்கிருந்து வரும் ? பொது மக்களிட்ம உண்டியல் ஏந்தி கட்சி அதைத் திரட்டியதால் வந்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் நேர்மையானவ்ர் மட்டுமல்ல முட்டாளும் கூட.
கட்சி திரட்டி வைத்திருக்கிற பணம் வெவ்வேறு வியாபாரிகள், தொழிலதிபர்கள் ரகசியமாக அளித்திருக்கும் பணம்தான். இதை சும்மா கொடுக்க அவர்கள் முட்டாள்கள் அல்ல. கட்சி ஆட்சியில் இருந்தால் தங்களுக்கு சாதக்மானதை செய்து தரவும், எதிர்க்கட்சியில் இருந்தால், தங்களுக்கு சாதகமானவற்றை எதிர்க்காமல் இருக்கவும், பாதகமாக எதுவும் செய்யாமல் இருக்கவும், அவர்கள் கொடுத்து வைத்திருக்கும் அட்வான்ஸ் லஞ்சம்தான் அது.
சில ஆண்டுகள் முன்பு அப்போது முதலமைச்சராக இருந்த ஒருவரை பஸ் முதலாளிகள் சந்தித்து ‘நன்கொடை’ தரச் சென்றார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் பதில் விருந்தளித்தார். விருந்தின் முடிவில் பிரதான எதிர்க் கட்சித்தலைவரையும் சந்தித்துவிடும்படி அறிவுரையும் வழங்கினார். அதன்படி மறு நாள் காலை எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து அவருக்கும் ‘நன்கொடை’அளிக்கச் சென்றார்கள். வந்தவர்களை காலை டிபன் சாப்பிட அழைத்தார் தலைவர். “அங்கே லஞ்ச் என்றால் இங்கே டிபனாவது உண்டில்லையா?” என்று இரட்டை அர்த்தத்தில் அவர்களிடம் சொன்னார். கட்சியின் காபிச் செலவுக்கு மட்டும் நன்கொடை தரச் சென்றவர்கள் டிபனுக்கும் கொடுத்துவிட்டு திரும்பினார்கள்.
கட்சி நடத்தவும் தேர்தல் செலவு செய்யவும் பெரும் பணம் தேவைப்படுவதில்தான் அரசியல் ஊழல்கள் தொடங்குகின்றன. பெரும் தொழிலதிபர்களின் நன்கொடைகள் இல்லாமல் எந்தக் கட்சியும் நடத்த முடியாது. அதிகாரத்துக்கு வந்தபின்னர் அவர்களுக்கு பதிலுக்கு நன்றி செலுத்தும் கடமையிலிருந்து தவறவும் முடியாது.
இந்த நிலைமையை மாற்ற ஒரு முயற்சி இந்திரா காந்தி காலத்தில் நடந்தது. ஊழலை ஒரேயடியாக நிறுத்திவிடும் முயற்சி என்று தப்பாகக் கருதவேண்டாம். உள்ளூர் தொழிலதிபர்கள், வியாபாரிகள் பிடியிலிருந்து மட்டும் கட்சியை விடுதலை செய்யவேண்டும் என்பது சஞ்சய் காந்த்கியின் திட்டம். அவர்களில் கணிசமானவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் ஆதரிப்பவர்கள் என்பது சஞ்சய் காந்திக்கு உறுத்தலாக இருந்தது. எனவே பிரும்மாண்டமான வெளி நாட்டு கம்பெனிகளின் பேரங்களில் கட்சிக்கு நிதி திரட்டிக் கொண்டால், உள்ளூர் முதலாளிகளை சார்ந்திருக்கத் தேவையில்லை என்பது சஞ்சயின் யுக்தி. இந்த அணுகுமுறையின் விளைவாகத்தான் இரான் கேஸ் பைப் ஊழலில் தொடங்கி பல்வேறு ராணுவ ஆயுத பேரங்கள் வரை வளர்ந்திருக்கிறது.
எனவே நீங்கள் நேர்மையானவராக இருந்தாலும், உங்கள் கட்சி நேர்மையற்ற முறையில் சம்பாதித்த பணத்தைத்தான் உங்கள் தேர்தலுக்கு செலவிடும். கட்சியின் ஊழலால் மக்கள் பாதிக்கப்படுவதை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்தால் உங்களை கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சி நீக்கிவிடும். நேர்மையான ஒருத்தரை கட்சி தன் செலவில் பதவியில் அமர்த்தும் என்பதே சுகமான கற்பனைதான். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் டிக்கட்டுக்கு விண்ணப்பிக்கும்போதே உங்களை பணம் டிபாசிட் செய்யச் சொல்கின்றன.
இருப்பதில் தனி நபர் ஊழல்கள் மோசடிகள் பெரிதும் இல்லாத இடதுசாரி கட்சிகளில் சேர்ந்து நீங்கள் எம்.எல்.ஏ, எம்.பியாக முயற்சித்தால் நிலைமையே வேறு. அங்கே கட்சி நடத்துவதற்கான பணமே குறைவு. உங்கள் எம்.எல்.ஏ, எம்.பி சம்பளத்தையே கட்சிக்குக் க்கொடுத்துவிட்டு கட்சியின் முழு நேர ஊழியருக்கு அவை தரும் குறைந்த தொகையை நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். இது நல்ல நடைமுறைதான். ஆனால் தியாகிகளுக்கே பொருத்தமானது. மேற்கு வங்கத்தில் ஒரு மார்க்சிஸ்ட் கட்சி பெண் எம்.எல்.ஏ தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம், பழையபடி ஆசிரியர் வேலைக்கே போகிறேன் என்று போய்விட்டார். காரணம் கட்சி தந்த ஊழியர் சம்பளத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே அரசியலில் சுயநலமில்லாமல், கட்சி நலம், பொது நலத்துக்கு மட்டுமே பாடுபடும் எம்.எல்.ஏ எம்.பியாக நீங்கள் விரும்பினால், முதலில் உங்கள் குடும்பம் உங்கள் வருவாயை நம்பியிராத அளவுக்காவது உங்களுக்கு பணவசதி இருக்க வேண்டும்.
எனக்கு எம்.எல்.ஏ, எம்.பி, கவுன்சிலர் பதவிகளே வேண்டாம். வட்டச் செயலாளர், நகரச் செயலாளர் அளவில் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுகிறீர்களா? அது சாத்தியம்தானா?

Source : gnani.net

இம்மானுவேல் சேகரன் (1924: -1957)

தேவேந்திரர் மக்களை சாதிய அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களையும் மனிதர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார். சாதிய அடிமைத்தனத்தை அழித்தொழிக்கும் துணிவுமிக்கப் போராட்டத்தில் தனக்கு எந்தநேரமும் மரணம் நேரலாம்/ ஆதிக்க சாதிவெறியர்களால்தான் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலும் துணிவுமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்த சாதியொழிப்பு போராளிகளில் முதன்மையானவர் இம்மானுவேல் சேகரன்.

இளமையும் கல்வியும் :
இராமநாதபுரம் மாவட்டம்/ முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தில் (பரமக்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது) 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் நாள் சேது என்ற வேதநாயகம் - ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே ஆங்கிலக் கல்வி கற்றவர். இவரது தந்தை வேதநாயகம் ஆசிரியராகவும்/ வழக்கறிஞராகவும் பணியாற்றினார். களையூர் முதற்கொண்டு பல கிராமங்களில் தனியாகப் பள்ளிகளை நடத்தி வந்தார். ஆங்கிலத்தையும்/ கணிதத்தையும் திறமையாகக் கற்பிப்பதில் புகழ் பெற்றிருந்தார். பரமக்குடியில் புகழ்பெற்ற நாட்டு வக்கீல்களில் (பர்ன்ற்)) ஒருவராக திகழ்ந்தார். இளமையிலேயே தனது தந்தையின் சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டார் இம்மானுவேல். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். ((இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் நஜ்ங்க்ங்ய் ஙண்ள்ள்ண்ர்ய்)பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். அவர் படிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தைப்போலவே/ விளையாட்டிலும் திறமையாக இருந்தார். கால்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்1.
இராணுவத்தில் பணி
சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம்/ உருது/ இந்தி/ ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்2.இராணுவ வாழ்க்கையில் அவர் அனுபவித்த சமத்துவம்/ மரியாதை போன்றவற்றைத் தனது சமுதாய மக்கள் அனுபவிக்க முடியவில்லையே என வேதனைப்பட்டார். என் தாய் நாட்டையும்/ மக்களையும் அன்னியர்களிடமிருந்து/ இன்னுயிரைத் தந்து காக்க நான் தயாராக இருக்கும் போது/ என் சமூக மக்களை இந்த இழிநிலையிலிருந்து மீட்க ஒருவரும் இல்லையே என வேதனையடைந்தார். 'என் நாட்டைக் காக்க ஏராளமான இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள் ஆனால்/ என் சமூகத்தினரைக்காக்க எந்தத் தலைவன் இருக்கிறான்? இந்தக் கேள்வியினால் என் நாட்டைக் காப்பதை விட என் சமூக மக்களைக் காப்பதே என் முதல் கடமை' எனக் கூறி அவில்தார்ப் பணியை உதறித் தள்ளினார்.
திருமணமும் இல்வாழ்வும்:
1946ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைய்த் தனது இலட்சிய வாழ்க்கையின் துணையாக ஏற்றார்.சமூக விடுதலைப் பணிக்குத் திருமண வாழ்க்கைத் தடையில்லைள என்பதையுணர்ந்த தியாக உள்ளத்தோடு குடும்பச் சுமையை/ தனது ஆசிரியப் பணியோடு சேர்த்து சுமந்தார் அமிர்தம் கிரேஸ்.அம்மையார் அவர்கள் வீராம்பல் எனும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு சாமுவேல்/ மரியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். இராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பை 1938 ஏப்ரல் மாதம் முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியையானார்.இந்த இலட்சிய தம்பதிகளுக்கு மேரிவசந்த ராணி/ பாப்பின் விஜய ராணி/ சூரிய சுந்தரி பிரபா ராணி/ மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.தனது இலட்சிய வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார். தியாக உள்ளத்துடன் ஆசிரியப்பணியையும்/ குடும்பப் பொறுப்புகளையும் மனநிறைவுடன் கவனித்துக் கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கொஞ்சமும் தளர்வோ சோர்வோ இன்றி தீரமுடன் இம்மானுவேல் 'மக்கள் விடுதலைப்பணியில்' ஈடுபட்டதற்கு அமிர்தம் அம்மையாரின் தியாகமும்/ அற்ப்பணிப்புமே காரணம் எனலாம்..இளமையிலேயே கணவனை இழந்த போதிலும் அதே தியாக/ அற்பணிப்புடன் அம்மையார் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இறுதிவரை கணவரின் இலட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த அம்மையார் 1985ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் காலமானார்.
காங்கிரஸில் இம்மானுவேல்:
தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அக்காலத்தில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. இப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட பார்ப்பனர் 'அரிசனத் தந்தை' என அழைக்கப்பட்ட திரு. வைத்தியநாத அய்யர். இவர் இந்தப் பணியை மதுரை மாவட்டத்தை மையமாக வைத்துச் செய்தார்.காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த திரு. கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த திரு. வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். வீராம்பல்/ கருமல்/ பேரையூர்/ மருதகம்/ பெரியஇலை/ காக்கூர் சிக்கல் முதலிய கிராமங்களில் இம்மானுவேல் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த ஊர்களுக்கு இவர் சென்று விட்டாலே மக்கள் திரண்டு வருவார்கள். ஊரின் பொது இடத்திலோ/ மரத்தடியிலோ அல்லது வீட்டுத் திண்ணையிலோ கூட்டங்கள் நடத்தினர். அரிக்கேன் விளக்கு/ பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில்தான் கூட்டங்கள் நடந்தன.'இந்தநாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியை காங்கிரஸ் பேரியக்கம் விரட்டிவிட்டது. இனியும் நாம் பிறருக்கு பயந்து கொண்டு அடிமைகள் போல வாழவேண்டியதில்லை. சட்டமும்/ அரசும் நமக்கு ஆதரவாக இருக்கின்றன; இனி நாம் ஆதிக்க சாதியினருக்கு தலை வணங்கும் ஈனப்பிறவிகளாக இருக்க வேண்டியதில்லை/ நம்மை இழிவுபடுத்தும் கொடுமைகள் அனைத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற எழுச்சிமிகு பேச்சுக்கள் இளைஞர்கள் மனதில் ஆவேசமான விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டு போராட்ட நெருப்பைப் பற்றி எரிய வைத்தது.காங்கிரஸ் கட்சியின் மூலம் காமராஜ்/ கக்கன் ஆகியோரோடும் இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.கமுதி : திரு. முத்துமாணிக்கம்கருமல் : திரு. ஜெயராஜ்கன்னிச்சேரி திரு. சந்தானம்கூரியூர் : திரு. எஸ்.கே. வேலுபரமக்குடி : திரு. பாலச்சந்திரன்சித்தூர் : திரு. காளியப்பன்.காங்கிரஸில் உறுப்பினராய்ச் சேர்ந்த நாளில் இருந்து சாகும்வரை தூய வெள்ளை கதராடையே உடுத்தி வாழ்ந்து வந்தார்
வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி:
இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.அதே நேரத்தில் கட்சித்தலைவர்களிடமும் பெரியோரிடமும் மரியாதையுடன் பழகுவார். தனது குடும்பத்தையும் சொந்த நலனையும் விட சமுதாயத்தையே பெரிதாக நேசித்தார். இசையில் ஈடுபாடு உள்ளவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்/ நாமக்கல் கவிஞர் ஆகியோரது பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஏ. எம். ராஜா பாடல்களை விரும்பிப்பாடுவார். சிலம்பாட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறாவிட்டாலும் கூட அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.பிறப்பினால் கிறித்தவராக இருந்தாலும் இம்மானுவேல் தாழ்த்தப்பட்ட இந்துக்களிடையே எள்ளளவும் பாரபட்சமின்றி பழகி வந்தார். இம்மானுவேல் ஒரு கிறித்தவன்/ அவனை எப்படித் தலைவனாக ஏற்றுக் கொண்டீர்கள்? என்ற சாதி -இந்துத் தலைவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எண்ணிய திரு.கக்கன் இம்மானுவேலின் பெயரை 'இம்மானுவேல் சேகரன்' என மாற்றினார்.செல்லூர் - வீட்டை காலிசெய்து வெங்கட்டான் குறிச்சிக்கு தட்டு/ முட்டு/ சாமான்களை வண்டியில் ஏற்றி வந்த அலுப்பில் இம்மானுவேல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால்/ சாதி வெறியர்கள் இமைப்பொழுதும் தூங்காது அவரைக் கொல்லத் தருணம் தேடி அலைந்தனர். அன்றிரவு வீட்டின் கூரைமீதேறி ஓட்டைப் பிரித்து எடுத்தனர். திருடர்கள் போல அனைவரும் தூங்கிவிட்டனரா இல்லையா? என்பதை அறிய/ ஒரு கல்லை வீட்டிற்குள் போட்டனர். அக்கல் மூத்த குழந்தை தலையருகில் விழவே விழித்துக் கொண்டது. குழந்தை இம்மானுவேலை எழுப்ப கட்டிலில் படுத்திருந்தவர் விழித்துப் பார்த்ததும் திடுக்கிட்டார். வரிசையாக கூரையில் ஓடுகளே இல்லை.'யார்ரா அது எவன் ஓட்டைப் பிறிச்சவன்?' என்று சத்தம் போட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தார். கூரையிலிருந்து குதித்து பத்துக்கும் குறையாத கும்பல் தலைதெரிக்க ஓடிக் கொண்டிருந்தது. மனைவி சொல்லியும் கேளாது கூட்டத்தினரைத் தான் ஒருவராகவே துரத்தியடித்தார். இம்மானுவேல் குரலை கேட்டதும்/ குலைநடுங்கி வயற் காட்டிற்குள் கூட்டம் ஓடி ஒளிந்தது.
தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் துண்டு கிளாஸ் போராட்டம்:

அந்நாளில் தமிழகத்தின் பல கிராமங்களில் பின்பற்றப்பட்டு வந்த தீண்டாமைக் கொடுமைகளில் இதுமொன்று. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப்பொதுவிடங்களில் சமமாக நடத்தப்படுவதில்லை. குறிப்பாக உணவகங்கள்/ டீ கடைகளில் இம்மக்களுக்கென்று தனிக்குவளை (சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி) வைக்கப்பட்டிருக்கும். இக்குவளையில்தான் அம்மக்களுக்குக் காப்பி அல்லது டீ தரப்படும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் டீ குடிப்பதற்கு முன்பு அக்குவளையைத் தானே கழுவிக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கென்று கடைக்கு வெளியே தகரக் குவளை அல்லது சிரட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அவைகளைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.இக்கொடுமைக்கெதிராக இம்மானுவேல் மக்களைப் போராடத் தூண்டினார். 'துண்டுகிளாஸ்' வைத்துள்ள கடைகள் மீது போலீசில் புகார் செய்து தண்டணை பெற்றுத்தந்தார். சில கடைகளில் துண்டுகிளாஸ்களைக் கடைக்கு முன்னாலேயே உடைத்தெறிந்தார். சிலர் இப்போராட்டத்தால் டீ கடைகளை மூடிவிட்டனர். இம்மானுவேல் இப்போராட்டத்தை முது குளத்தூர் பரமக்குடியைச் சுற்றியிருந்த பல கிராமங்களில் மிகத் தீவிரமாகக் செயல்படுத்தினர்.
குடிதண்ணீர்ப் போராட்டம்:
தெருநாய்கூட ஊர்க்குளத்தில் தண்ணீர் குடிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களால் தண்ணீர் எடுக்க முடியவில்லை' இவ்வாசகத்தை இம்மானுவேல் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் குறிப்பிட தவறுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப் பொதுக் கிணற்றிலோ அல்லது குளங்களிலோ குடி தண்ணீர் எடுக்க முடியாது. சாதி இந்துப் பெண்கள் தங்கள் பாத்திரங்களில் பிடித்து ஊற்றுவதையே கொண்டுவர வேண்டும். இப்படி ஒரு அவல நிலை இன்றைக்கும் இந்தியாவின் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இம்மானுவேல் இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்
கொண்டுலாவிப் போராட்டம் :
இக்கிராமம் முதுகுளத்தூரிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் அரசு வெட்டித்தந்த கிணறு ஒன்றிருந்தது. இக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்பதற்காகச் சாதி இந்துக்கு மலத்தையும்/ சாணத்தையும் கிணற்றில் அள்ளிப் போட்டனர்.தாழ்த்தப்பட்டவர்கள் அரும்பாடுபட்டுக் கிணற்றைச் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் எடுத்தனர். பின்னரும் சாதி இந்துக்கள் மலத்தையும்/ சாணத்தையும் போட்டதால் மக்கள் இம்மானுவேலிடம் முறையிட்டனர்.இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்
இம்மானுவேல் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும்

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.



இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.
"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.
அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தேவேந்திர பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.
இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."
கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."
"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."
முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:
"On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".
கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.
"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."
திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.
திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.
முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.
முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'தேவர், காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.
சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த தேவர், தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.