நியூயார்க் : சர்வதேச அளவில், மதிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில், முதல் ஐம்பதில், இந்தியாவின் ஐந்து முன் னணி நிறுவனங்கள் இடம் பெற் றுள்ளன. அமெரிக்காவில் உள்ள கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை டாடா பின்தள்ளியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல சர்வே நிறுவனம் ஒன்று, இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளது. சில ஆண்டுக்கு முன் வரை, இந்த ஆய்வுக்கு இந்திய நிறுவனங்கள் பரிசீலிக்கப்பட்டதே இல்லை. ஆனால், சர்வதேச தரத்துக்கு ஈடாக இப்போது பல இந்திய நிறுவனங்கள் முன்னேறி வருகின்றன. சர்வதேச அளவில் மதிக்கத்தக்க 600 நிறுவனங்கள் பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் ஐம்பது நிறுவனங் களில், இந்தியாவின் டாடா நிறுவனம் உட்பட ஐந்து நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதிலும், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களை டாடா நிறுவனம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த பெர்ரிரோ நிறுவனம் முதலிடத்தை பெற் றுள்ளது. அடுத்து சுவீடனின் ஐ.கே.இ.ஏ., மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் இடம் பெற்றுள்ளன. இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் 11ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து தான் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை உள்ளன. மொத்தம் பட்டியலிடப்பட்ட 600 நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்த மற்ற 27 நிறுவனங்களும் இடம் பெற் றுள்ளன. ஸ்டேட் பாங்க் 29 வது இடத்தில் உள்ளது. இன்போசிஸ் 39, லார்சன் டூப்ரோ 47, மாருதி சுசுகி 49வது இடத்தில் உள்ளன.
இந்துஸ்தான் யுனிலீவர் (70 வது ரேங்க்), ஐ.டி.சி.,(96), கனரா வங்கி (103), எச்.பி.சி.எல்.,(112), இந்தியன் ஆயில் (113), விப்ரோ (117), ரிலையன்ஸ் குரூப் (133), மகிந்திரா மகிந் திரா (138), பாரதி ஏர்டெல் (164), பாங்க் ஆப் பரோடா (175), பி.பி.சி. எல்.,(176), பஞ்சாப் நேஷனல் வங்கி (178) ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. முதல் ஐம்பது மதிக்கத்தக்க நிறுவனங்கள் பட்டியலில் அமெரிக் காவை சேர்ந்த 17 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தொழில் வளம் மிகுந்த அமெரிக்கா, ஜப்பான், பிரிட் டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த 289 நிறுவனங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் மதிக்கத்தக்க தன்மை மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம், "பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (ஒவ்வொரு நாட்டின் ஆங்கிலப் பெயரில் முதல் எழுத்தை சேர்த்து பிரிக் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது) பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட இவற்றின் 142 நிறுவனங்களில், 32 சதவீத நிறுவனங்கள் தான் மதிக்கத்தக்கதன்மையில் சராசரியை விட குறைவாக உள்ளன.
நன்றி : தினமலர்