Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

ஓட்டு போடாம வூட்லயே இருந்துடலாமா?

ஒவ்வொரு தேர்தலின்போதும் சுமார் நூற்றுக்கு 35, 40 பேர் இப்படித்தான் செய்கிறார்கள். ஓட்டு போடாம வூட்டுலயே இருந்துவிடுகிறார்கள். இதில் நோயாளிகள், பெரும்பணக்காரர்கள் முதலியவர்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட, நிச்சயம் 20,30 பேர் ஓட்டுச் சாவடிக்குப் போய் ஓட்டு போட முடியக் கூடியவர்கள்தான்.

இவர்கள் ஓட்டுப் போட செல்லாததினால், அரசியல் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறது. பல தொகுதிகளில் நூற்றுக்கு 60 பேர் வாக்களிக்கிறார்கள். போட்டியிடும் மூன்று பெரிய வேட்பாளர்கள் இந்த 60 ஓட்டை பிரித்துக் கொள்ளும்போது 25 முதல் 30 ஓட்டு வாங்கியவர்தான் அதிக ஓட்டு பெற்று ஜெயித்தவர் ஆகிறார். அதாவது தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 25 முதல் 30 சதவிகிதம் மட்டும் வாங்கி அவர்கள் எல்லாருக்கும் பிரதிநிதியாகிவிடுகிறார்.

ஓட்டு போடவே போகாதவர்கள் எண்ணிக்கையை விடக் குறைவான ஓட்டு வாங்குகிறவர் ஜெயித்தவராவது என்பது எவ்வளவு அபத்தமானது ! ஆனால்

அதுதான் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது.
ஓட்டு போடச் செல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம், ‘எந்தக் கட்சியும் சரியில்லை; எந்த வேட்பாளரும் சரியில்லை’ என்பதுதான். அதை ஓட்டுச் சாவடியிலேயே சென்று பதிவு செய்ய சட்டமே அனுமதித்திருக்கும் வழிதான் 49 ஓ. இது இருப்பது தெரியாமல் பல பேர் ஓட்டு போடப் போகாமல் இருந்திருக்கலாம். அவர்களில் சிலருடைய ஓட்டையெல்லாம் கள்ள ஓட்டு போடுவதில் தேர்ந்த சில கட்சிகள் தங்களுக்குப் போட்டுக் கொன்டும் இருக்கலாம்.

இந்தச் சூழ்நிலையில்தான் 49 ஓ வை வாக்காளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஓட்டை இன்னொருத்தர் போடாமல் தடுப்பதற்கும் , உங்களுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்பதை , சும்மா டீக்கடையிலும் ஆபீஸ் கேண்ட்டீனிலும் சொல்லி வீணாக்காமல், சம்பதப்பட்ட கட்சிகளுக்கே உறைக்கிற மாதிரி சொல்லவும் சிறந்த வழி 49 ஓ தான்.

இதைப் பற்றி பலரிடமும் சொல்லும்போது உடனே மூன்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றையும் சில பேர் ஏதோ நானும் அ.கி. வேங்கடசுப்பிரமணியனும்தான் தேர்தல் ஆணையர்கள் பதவிகளில் இருப்பது போல நினைத்துக் கொண்டு வேறு கேட்கிறார்கள்.

முதல் கேள்வி: எத்தனை பேர் 49 ஓ போட்டாங்கன்னு அறிவிப்பீங்களா மாட்டீங்களா ?

அடுத்த கேள்வி: ரகசியமா ஓட்டிங் மெஷின்லயே போடற மாதிரி ஒரு பட்டன் வெச்சிட்டா இன்னும் நிறைய்ய பேர் போடுவாங்க இல்ல ? ஏன் அதுக்கு ஏற்பாடு பண்ன மாட்டேங்கறீங்க ?

மூன்றாவது கேள்வி: வாக்காளர்கள்ல நூத்துக்கு 50 பேருக்கு மேல 49 ஓ போட்டுட்டா, தேர்தல் கேன்சல் ஆயிடுமா? யாரும் ஜெயிக்கலன்னு அறிவிச்சுடுவாங்களா?

கடைசி கேள்விக்கு முதலில் பதில் :

இப்போதுள்ள விதிகளின்படி 49 ஓவுக்கு போட்ட ஓட்டுகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க மாட்டார்கள். செல்லாத வாக்குகள் போலவே

அவற்றை விட்டுவிட்டு மீதி ஓட்டுகள் மட்டும்தான் ஜெயித்தவரைக் கண்டுபிடிக்க எண்ணப்படும்.

அப்படியானால் 49 ஓ போட்டு என்ன பயன் ? ஏன் போடச் சொல்கிறோம் ?

பயன் 1: உங்கள் ஓட்டை இன்னொருவர் போட்டு விடாமல் தடுப்பதாகும்.

பயன் 2: எல்லா வேட்பாளர்கள்/கட்சிகள் மீதும் மக்களின் அதிருப்தி கடுமையாக இருந்து, ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெற்றதை விட அதிக ஓட்டை 49 ஓ பெற்றுவிட்டால், அரசியல் நெருக்கடியை நாம் ஏற்படுத்த முடியும். 49 ஓ பெற்ற ஓட்டுகள் முதல் எண்ணிக்கையில் இருக்கும்போது, அடுத்த இடத்தில் இருந்து ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான். எனவே அவரை ஜெயித்ததாக அறிவிக்க முடியாது என்று நாம்நீதி மன்றத்த்தில் தேர்தல் வழக்கு தொடுக்கலாம். இதன் விளைவாக தேதல் நடைமுறைகளில் அடுத்த கட்ட சீர்திருத்தங்கள் செய்வதற்கு வழி பிறக்கும் என்பது பயன்.

பயன் 3: பல தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் 49 ப்ப் பதிவானால், அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம் பயன் வரத் தொடங்கும். நல்ல வேட்பாளர்களைப் போட்டால் ஒழிய இனி தேறமுடியாது என்ற அச்சத்தில் வேட்பாளர்களின் தரம் உயர வழி கிடைக்கும்.

49 ஓ இபோதைய அரசியலிலோ தேர்தல் நடைமுறையிலோ இருக்கும் எல்லா சிர்கேடுகளுக்குமான ஒற்றை லேகியம் அல்ல. ஆனால் சீர்கேடுகளை எதிர்க்கவும் ஒவ்வொன்றாகக் க¬ளையவும் மக்களின் அதிருப்தியை சட்டப்பூர்வமாக பதிவு செய்து போராடுவதற்கான ஓர் ஆயுதம். அதை துருப் பிடிக்க செய்தால் வேறு ஆயுதம் இப்போதைக்கு இல்லை.

இனி கேள்வி 2ஐப் பார்க்கலாம்:

ஓட்டு மெஷினிலேயே ரகசியமாக 49 ஓ போடும் விதத்தில்பட்டன் வைப்பதுதான் முறை. நியாயம்.ஏனென்றால் நம் ஓட்டு ரகசியமானது என்ற உறுதியை அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் வராமல் இருப்பதற்கு அரசுகளே காரணம். மெஷினில் 49 ஓவுக்கு ஒரு பட்டனைச் ஏர்க்க வேன்டுமென்று சென்னையிலும் தில்லியிலும் பொது நல வழக்குகள் போடப்பட்டுள்ளன. உச்ச நீதி மன்றத்தி முன்பு வழக்கு பதிவாகி சுமார் ஆறு வருடமாகிரது. தேர்தல் அனையம் 49 ஒ பட்டனை சேர்ப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை தான் தயார் என்றேஉ நீதிமன்றத்தில் உடனே சொல்லிவிட்டது. ஆனால் அரசின் கருத்தை நீதி மன்றம் கேட்டபோது பி.ஜே.பி அரசும் சரி, காங்கிரஸ் அரசும் சரி பதில் சொல்லாமல் காலம் கடத்தின. ஒருவழியாக இந்த ஜனவரியில் அரசு பதிலை தாக்கல் செய்தது. அது தான் 49 ஓவை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தது. இப்போது முடிவு சொல்ல வேன்டியது உச்ச நீதி மன்றம் தான், இந்தத் தேர்தலுக்குள் சொல்லுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அடுத்த தேர்தலில் 49 ஓ ரகசிய பட்டனக வந்துவிடும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. முதல் கேள்விக்கான பதில் எத்தனை பே 49 ஓவை பதிவு செய்தார்கள் என்ற விவரத்தை அறிவிக்க வேன்டியது தேர்தல் ஆணையம்தான். இது எளிமையானது. மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததுமே, ஒவ்வொரு சாவடியிலும் இருக்கும் அதிகாரியின் வசம் இருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து இதை சொல்லி விட முடியும். தேர்தல் ஆச்ணையம் தன் அதிகாரிகளுக்கு உத்தாவிட்டால் போதும். விவரங்களைத்திரட்டி, அன்றிரவு மொத்தம் வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு என்று தெரிவிப்பது போல இதையும் தெரிவித்துவிடலாம்.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?

ஒவ்வொருவரும் ஆளுக்கு இரண்டு அஞ்சல் அட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ம்ஜொத்த செலவு வெறும் ஒரு ரூபாய்தான். மிக மலிவான விலையில் கிடைக்கும் மக்கள் ஆயுதம் இது.

முதல் அட்டையில் கீழ் வரும் ஆங்கில வாசகத்தை எழுதி கையெழுத்திட்டு உங்கள் பெயர் முகவரியையும் குறிப்பிட்டு அனுப்புங்கள்:we request you to expedite judgement on the case pending for several years now, seeking installation of a button for 49 oin voting machines to ensure secrecy of voting, our fundamental right.
இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Justice of India, Supree court of India, New Delhi 110001.

இரண்டாவது அட்டையில் எழுத வேண்டிய வாசகம்:Please arrange for announcing the total number of voters registered for 49 o in every constituencyat the end of the poll, as it is the right of every citizen to know this information.இதை அனுப்பவேண்டிய முகவரி: The Chief Election commissioner, Election commission of Inbdia, Nirvachan sadan Ashoka road, New Delhi 110 001.

அடுத்த வாரத்துக்குள் உங்கள் அஞ்சலட்டைகள் ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் தலைமை நீதிபதிக்கும் தலைமை தேர்தல் ஆனையருக்கு சென்று குவியட்டும். மக்கள் கருத்து என்ன என்பதைச் சொல்வது ஒரு சில விமர்சகர்கள், அரசியல்வாதிகள் வேலை மட்டும் அல்ல. மக்களே நேரில் சொல்வதற்காக இருக்கும் வழிமுறைகளில் சிலதான் 49 ஓ, அஞ்சலட்டை முதலிய ஆயுதங்கள். எடுத்து வீசுங்கள்.அப்போதுதான் மாற்றம் வரும்.


நன்றி : http://www.gnani.net/

Daily Calendar