பூணூல் பிராமணர்களின் உரிமையா?

இந்த கேள்வியை அவ்வப்போது இணையத்தில் பார்க்கிறேன். பூணூல் ஜாதி அடக்குமுறையின் சின்னம், அதை அணிவது தான் உயர்ந்த ஜாதி, சூத்திரர்களின் பிறப்பு கேள்விக்குரியது என்பதைத்தான் சுட்டுகிறது, அப்படி பிராமணர்கள் நினைக்கவில்லை என்றால் அதை என் இன்னும் போட்டுக்கொண்டு அலைகிறார்கள், தூக்கி கடாச வேண்டியதுதானே என்று குமுறுவதை வினவு தளம் மாதிரி இடங்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கலாம்.

பூணூல் போடுவது தவறில்லை என்று வாதிடுபவர்கள் அடிக்கடி சொல்வது செட்டியார்கள், ஆசாரிகள் மற்றும் சில ஜாதியினரும் பூணூல் போட உரிமை உள்ளவர்கள் என்பதுதான். ஆனால் பெரும்பாலோர் மனதில் பூணூல் என்றால் பிராமணர்கள்தான்; வேறு யாரும் இல்லை. ஆசாரிகள் பூணூல் போடுவது அவர்களின் ஜாதி மேட்டிமைத்தனம் என்று யாரும் நினைப்பதில்லை. பாரதியார் தலித் கனகலிங்கத்துக்கு பூணூல் போட்டாராம். சரி பூனூல்தான் போட்டாயிற்றே, கனகலிங்கம் இனி மேல் பிராமணன் என்று பாரதியும் வ.வே.சு. ஐயரும், வ.ரா.வும், மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் கனகலிங்கத்துடன் சம்பந்தம் பேசவில்லை. பிராமண ஜாதியில் பிறந்தவர்களுக்கே பூணூல்; அவர்கள் உடலில் பூணூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பிராமணர்களே; மற்றவர்கள் ரங்கநாதன் தெருவில் வாங்கிப் போட்டுக்கொண்டாலும் சரி, பாரதி போட்டுவிட்டாலும் சரி, இல்லை பரம்பரை பரம்பரையாக ஆசாரிகள் மாதிரி போட்டாலும் சரி, அவர்கள் பிராமணர்கள் மாதிரி “உயர்” ஜாதியினர் இல்லை – அதனால்தான் ஜாதி மேட்டிமைத்தனத்தின் குறியீடு என்றுதான் பூணூலை பலரும் கருதுகிறார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் கேள்வியே தவறானது. பூணூல் பிராமணர்களின் உரிமையா இல்லையா என்பது பிரச்சினையே இல்லை. ஒருவர் உடலில் என்ன அணியலாம் என்பதை தீர்மானிக்க அடுத்தவருக்கு உரிமை உண்டா இல்லையா என்பதுதான் கேள்வி.

பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது, அப்படி அணியும் பூணூல் அறுக்கப்பட வேண்டும், ஏனென்றால் பூணூல் ஜாதியின் சின்னம், நாங்கள் ஜாதி அழிக்கப்பட வேண்டியது என்று உறுதியாக நம்புகிறோம் என்று சொன்னால்; ஒருவர் உடலில் என்ன இருக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லை, அவர் வாழும் சமூகத்துக்குத்தான் இருக்கிறது என்ற இந்த கோட்பாட்டை அனுமதித்தால்; அப்புறம் எப்படி தோள் சீலை அணியக் கூடாது என்ற அன்றைய சமூக அடக்குமுறையை மறுப்பது? சானியா மிர்சா குட்டைப் பாவாடை அணியக் கூடாது என்று சொல்லும் முல்லாவை எந்த முகத்தை வைத்துக் கொண்டு எதிர்ப்பது? தொப்புளில் வளையம் ஆபாசம் என்று உறுதியாக எண்ணும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வளையத்தை பிடுங்கிப் போடும் உரிமை உண்டா?

ரொம்ப சிம்பிளான விஷயம். என் உடலில் என்ன இருக்கவேண்டும், என்ன இருக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இந்த விதி செல்லாமல் போகும் இடம் ஒன்றுதான் – என் உடலில் இருக்கும் பொருள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைக்கக்கூடும் என்றால்; (இடுப்பில் தற்கொலை பெல்ட்டுடன் விமானத்தில் ஏறக்கூடாது; வாயில் புகையும் சிகரெட்டுடன் ரோடில் போகாதே etc.) இந்த தீங்கு tangible ஆக இருக்க வேண்டும். என் மனம் புண்படுகிறது மாதிரி intangible effects என்றால் நானே புண்பட்டுக் கொள்ள வேண்டியதுதான், நானே மருந்து போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஹுசேனின் ஓவியங்கள் பதிவில் மனம் புண்படுவதைப் பற்றி எழுதியவை இங்கும் பொருந்தும்.

பூணூல் பிராமணர்களின் உரிமையா இல்லையா என்பது எனக்கு அனாவசியம். யார் உடலில் என்ன இருக்க வேண்டும் (அது அடுத்தவரை நேரடியாக பாதிக்காத வரையில்) என்று தீர்மானிக்க நீங்கள் யார் என்பதுதான் கேள்வி. என் உடலில் பூணூல் இருக்கிறது, எனக்கு மட்டும்தான் பூணூல் போட உரிமை இருக்கிறது, ஏனென்றால்/அதனால் நான் உயர்ந்தவன், மற்றவர் எல்லாம் தாழ்ந்தவர் என்று சொன்னாலொழிய பூணூலைப் பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. என் உடலில் நான் பூணூல் அணிவதும், தாயத்து கட்டுவதும், குல்லா போடுவதும். முண்டாசு கட்டுவதும், தாலி அணிவதும், பான்ட் மேலே ஜட்டி போடுவதும், ஜட்டி மேலே பான்ட் போடுவதும் என் தனி மனித உரிமை. அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கலாம், அவ்வளவுதான். வேண்டுகோளை நிறைவேற்றுவதும், போடா போ என்பதும் என் இஷ்டம், என் உரிமை.

பதிவின் கருத்தை விட்டுவிட்டு பார்ப்பன சதி, மனு ஸ்ம்ரிதி, சூத்திரனை இழிபிறப்பு என்று சொல்கிறான் என்று எங்கேயோ போகும் மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.

Source ;
koottanchoru

கிறித்துவ பயங்கரவாதம்...

இந்துத்வா மற்றும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தால் பீடித்துள்ள இந்தியாவை கிறித்துவ பயங்கரவாதம் துவம்சம் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது ஆயுதம் ஏந்தா பயங்கரவாதம். பயங்கரவாதம் போல் தெரியாத பயங்கரவாதம். ஆயுததாரிகள் செய்யும் அதே காரியம். ஆயுததாரிகளை விட ஆபத்தான கபடதாரிகள் செய்யும் ஊழியம்.

அந்த நற்செய்தி கூட்டத்தில் இந்த கெட்ட செய்தி தான் காதில் விழுந்தது. "இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவோம். இந்தியாவை இயேசுமயமாக்குவோம்" என்கிற ரீதியில் அந்த கெட்ட செய்தி காதில் விழுகிறது. பல மதத்தவர் வாழும் ஒரு தேசத்தில் "இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவோம்" என்றால் என்ன அர்த்தம்.

ஏனைய மதத்தவரை சீண்டி, போலியான மத மோதலை தூண்டி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதை தவிர
வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும். "உங்கள் கடவுள் உங்களுக்கு உயர்வென்றால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்"

கணிசமான பகுத்தறிவாளர்கள் வாழும் போதே, மதச்சார்ப்பின்மைக்கு எதிரான கருத்தை, மதச்சார்ப்பின்மைக்கு வேட்டு வைக்க கூடிய கருத்தை விதைக்கும் தைரியம் எப்படி வந்தது. சிறுபான்மை என்கிற அஸ்திரத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அசட்டு துணிச்சல் போலும். அந்தந்த மதத்தவர்கள், தங்கள் கடவுளுக்கே இந்த தேசத்தை காணிக்கையாக்குவோம் என்றால் அமைதி செத்து போகும்.

பகுத்தறிவாளர்களுக்கு தான் - இனி நிறைய வேலை உள்ளது இந்த கிறித்துவர்களிடம். சாதீய பேய், இந்து மதத்தில் இருந்து கூடு விட்டு கூடு பாய்வது போல் கிறித்துவத்திற்கு போய் உள்ளது. கிறித்துவதளமொன்றின் பெயரை பார்த்தாலே, சாதீயம் கிறித்துவத்தை பிடித்து எப்படி ஆட்டுகிறது என்பதை பார்க்கலாம். "கிறிஸ்தவ பிராமணாள்" என்பது அந்த வலைப்பூவின் பெயர்.

இதில் எத்தனை எத்தனை உள்நோக்கம் உள்ளதை யார் அறிவார். இது கிறிஸ்துவ பார்ப்பணியம். தாழ்த்தப்பட்டவர் நிலை மதம் மாறியும் தாழ்ந்துள்ள போது, பகுத்தறிவாளன் கேள்வி கேட்க நியாயம் உள்ளது. "எண்ணிக்கையை மட்டுமே உயர்த்த விரும்புகிறாய்.தாழ்ந்தவனை தாழ்ந்து வைத்து இருக்கவே விரும்புகிறாய்" சரி தானா. பிராமணியம் போகும் திசையை பார்த்து, போராடும் பொறுப்பு பகுத்தறிவுக்கு உள்ளது. சாதிகென்று தனித்தனியாக கிறித்துவ நிகழ்ச்சி நடத்தும் கொடுமையை அறிவிர்களா.

"இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவார்களாம்"... தான் பிறந்த நாட்டிலும் (இஸ்ரேல்) தான் வளர்ந்த நாட்டிலும் (பல அரபு நாட்டிலும்) காணாமல் போன கிறித்துவம், மேற்குலக நாடுகளில் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து,செத்து கொண்டு வரும் கிறித்துவம், இந்தியாவின் மதச்சார்ப்பின்மையை காவு கொடுக்க, அமைதியை கெடுக்க மேற்குலக நாடுகள் நிதியுதவிகளுடன், எதிர்காலத்தில் இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயலலாம். அது இப்போதே அங்காங்கே தெரிகிறது. பாகிஸ்தானின் ஆயுத உதவி செயலை போன்றதே, மேற்குலகத்தின் இந்த நிதி உதவி.

ஒரு தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான கருத்து, பல மதத்தவரையும் அவமானப்படுத்தும் மற்றும் சீண்டும் கருத்து - கிறிஸ்துவம் வெளிப்படுத்தும் கருத்துக்கள். அரசிற்கு மதச்சார்ப்பின்மையை காக்கின்ற மிக பெரிய பொறுப்பு உள்ளது. அதையும் விட மிக பெரிய பொறுப்பு, பகுத்தறிவுக்கு உள்ளது

Source : http://oosssai.blogspot.com/2010/08/blog-post_18.html