தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?தமிழால் என்ன நன்மை?தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்குதமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்
நல்லதோர் வீணை நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
நாகேஷ் ... நாகேஷ் ... நாகேஷ் ...
நாகேஷ் என்ற இன்னொரு நடிக இமயம் மறைந்து விட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் ஆளுமை செய்த ஒரு சிறந்த நடிகரைத் தமிழ்ப் படவுலகம் இழந்துவிட்டது.
ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவும் சிரிப்பை ஏற்படுத்துமெனில் அது நாகேஷை மட்டுமே சொல்லமுடியும்.. நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் , பிணம் எனக் கொடுக்கப் பட்ட பாத்திரமாகவே மாறிய தன்மை நாகேஷுக்கு உரியது.
நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்
வாழ்க்கையில் எதையாவது சாதிக்காமல் திரும்பி வரமாட்டேன் என்ற வெறியில் வீட்டைவிட்டு வெளியேறிவர் நாகேஷ். சென்னையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். [[தாமரைக்குளம் (திரைப்படம்)தாமரைக்குளம்] என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாநாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
திரையுலக மைல் கற்கள்!
நடிப்புலக ஜாம்பவான்கள் கூட சற்று அசந்தால் நாகேஷ் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் . ஒரு காலத்தில் நாகேஷ் திரையில் தோன்றினாலே அரங்கம் சிரிப்பில் வெடிக்கும். நகைச்சுவை பாத்திரங்களிலும் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவர் நடிப்புக்கு இணை அவர்தான். யதார்த்தமான நடிப்பு தமிழில் அவர்தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.
நீங்கள் திருவிளையாடல் பார்த்திருப்பீர்கள்.. பெரும்பாலும் நாகேஷ் படம் முழுக்க வருவார். ஆனால் இப்படத்தில் இவருக்கென்று தனிப்பகுதி உண்டு.. தருமி எனும் வேடம். சிவனாக நடித்த சிவாஜியின் நடிப்பையே ஓரம் கட்டிவிடும் அளவுக்கு அப்படியொரு நடிப்பு.. எந்த நடிகர்திலகங்களும் எப்படிவேண்டுமானாலும் நடிக்கலாம் ஆனால் மக்களிடம் சிரிப்பை வரவழைக்கும் உத்தி யாரிடம் உண்டோ, அவரே சிறந்த நடிகர் என்று சொல்லலாம்.. தருமி கேள்வி கேட்கும் காட்சி, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதும் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அதில் அவர் கேட்டுக்கொண்டே முதுகை வளைத்து செல்வார் பாருங்கள்..... இனியொரு நாகேஷ் பிறந்துதான் வரவேண்டும்..
காதலிக்க நேரமில்லை, யில் பாலய்யாவோடு இணைந்து நடிக்கும் அந்த திகில் காட்சிகள்... ஒருமுறை இக்காட்சியைக் கண்டு கொண்டே தண்ணீர் குடித்த எனக்கு, குபீர் நகைச்சுவையால் பொறை ஏறி மூக்கை அடைத்துக் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.. அப்படத்தில் அவர் ஒரு புகைப்படம் கூட எடுக்கமாட்டார்.....
ஒரு ஸ்வீட்டஸ்ட் வில்லன்.... தில்லானா மோகனாம்பாளைச் சொல்லலாம்.. அந்த பாகவதர் கெட்டப், ரசிக்க வைக்கும் வில்லத்தனம்.... வைத்தி என்று பெயரை வைத்துக் கொண்டு மாமா வேலை பார்க்கும் குறுவில்லன்.. ஏன், அபூர்வ சகோதரர்களில் அவர் தன் வில்லத்தனமான நடிப்பை அப்பட்டமாகக் காண்பிக்கவில்லையா....
வயது எழுபதைத் தாண்டியாயிற்று, இனி என்ன நகைச்சுவை உணர்வைக் கிளப்ப இந்த கிழவனால் முடியும் என்று நினைக்கலாம். ஆனால், கமலும் நாகேஷும் இணைந்த கலவை இருக்கிறதே, அது இனிவரும் நகைச்சுவைக் கலைஞர்களால் முடியுமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.. பஞ்சதந்திரத்தில் அவர் நடித்த காட்சிகள் அத்தனையும், டாப்..... அந்த கிழட்டு முகத்தில் தோன்றும் சிரிப்பே, அமைதி குடிகொண்டிருக்கும் கோவிலைப் போன்று இருக்கிறதா இல்லையா...
செய்கை காமெடி என்று சொல்வார்கள், அதாவது ஸ்லாப்ஸ்டிக் (Slapstick) அந்தவகை காமெடியில் இவரை அடித்துக் கொள்ள இந்தியாவிலேயே ஆளில்லை. மகளிர் மட்டும் எனும் படத்தில் பிணமாகவே நடித்திருப்பார்... என்னைக் கேட்டால், அப்படியொரு காட்சி தமிழ் திரைப்பட உலகில் வேறு எவரும் நடித்திராத நடிக்க முடியாத காட்சி..
சரி, நாகேஷ் என்ன, நகைச்சுவையாளர் மட்டும்தானா?
ரிதம், மின்னலே, அபூர்வராகங்கள், தீபம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம் போன்ற படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பையும் காணலாம்.. என் நாகேஷ் நடித்த பழைய படங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் சொல்லுவார், "இவருக்கு மட்டும் கொஞ்சம் நல்ல முகவெட்டு இருந்திருந்தா, சிவாஜியே காணாம போயிருப்பாரு" என்று.. உண்மைதான்.. சிவாஜி போன்ற ஒரு நடிப்புத் திறமைமிக்க கலைஞனோடு நாகேஷை ஒப்பிடுவதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் அருமையாக நடனமும் ஆடுவார்.
சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், நவக்கிரகம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, சோப்பு சீப்பு கண்ணாடி, போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தன் திறமையை நிரூபித்தவர்... இதில் சுவாரசியம் என்னவென்றால், அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்... அதிலும், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் போன்றவற்றில் தோல்வியைத் தாங்காமல் துடிக்கும் நடிப்பை முகத்திலேயே நிறுத்தியிருப்பார்.எதிர்நீச்சலில், தன்மானத்தைக் காப்பாற்றவும், அதேசமயம் வயிற்றை நிரப்பவும் அல்லல்படும் ஒருவனி நிலையை மிகத் துல்லியமாக முகபாவனைகளில் வெளிப்படுத்தியிருப்பார்..
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் அவரது படங்களில் நகைச்சுவை ஏற்படுத்தாத ஒரு படத்தை குறிப்பிட்டு சொல்லுங்கள்..... முடியாது.... அதேபோன்று, நாகேஷைப் போன்ற ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களே இன்று மிகக் குறைவு..
சொந்த சோகங்கள்…
திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், நாகேஷின் சொந்த வாழ்க்கை தனிமையில் சேகமாகவே கழிந்தது.
வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
புதிதாக வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு தன் தாயை சந்திக்க அவர் ஆசையுடன் சென்றார். ஆனால் அவரால் தாயை சந்திக்க முடியவில்லை. அவர் சென்ற போது அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்த நாகேஷ், மகனை பெரிய நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக மகன் ஆனந்தபாபுவை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால் தான் சேர்த்த பணத்தையெல்லாம் இழக்கும் படமாக அது அமைந்துவிட்டது.
பின்னர் சில படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அந்த வெற்றிகளை ஆனந்தபாபு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், போதைக்கு அடிமையாகி பாதை மாறிப்போனது நாகேஷுன் இதய நோயை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது.
நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்
எப்படி, ஜனவரி 30 தியாகிகளின் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறதோ, அதே போல, ஜனவரி 31 நகைச்சுவையாளர் திருநாளாகக் கொண்டாடப்படவேண்டும்..

Subscribe to:
Posts (Atom)