நல்மேய்ப்பனாக இருக்க வேண்டியவர் ! கொலை மிரட்டல் வழக்கில் கோவை பேராயர் திடீர் கைது

கோவை: சி.எஸ். ஐ., பிஷப் ஒருவர் கிரிமினல் குற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பபட்டிருப்பது கிறிஸ்தவ சமுதாய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சி.எஸ்.ஐ., சபையின் பேராயராக இருப்பவர் மாணிக்கம் துரை. இவர் தலைமையின் கீழ் இந்த சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், சிறிய அளவிலான ஆஸ்பத்திரிகள், ஆதரவற்றோருக்கான நிலையங்கள் செயல்படும்.

இந்த திருமண்டலத்தில் பல திருச்சபைகளாக பிரிக்கப்பட்டு.அந்தந்த எல்லைக்குட்பட்டு செயல்பாடுகள் இருக்கும். இந்த திருச்சபையை சேர்ந்தவர்கள் இணைந்து தேர்தல் மூலம் பேராயரை தேர்வு செய்வர்.

கோவை பேராயர் மீது என்ன குற்றம் ? : இந்நிலையில் கோவை பேராயர் மாணிக்கம் துரை, கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் பகுதியை சேர்ந்த திருச்சபையினர் இடையே அறக்கட்டளை பண வசூல் தொடர்பாக கருத்து வேற்றுமை இருந்துள்ளது. தேவர் சோலையில் வைத்து பாதிரியார் கவிராஜ் என்பவருக்கு பேராயர் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. பேராயர் மாணிக்கம்துரை பல முறை ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் கோர்ட் இவரை ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது.

ரூ. 3 கோடி மோசடி வழக்கும் உள்ளது : இந்த உத்தரவையடுத்து சப்.இன்ஸ்பெக்டர் பஸ்வராஜ் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் பேராயர் மாணிக்கம் துரையை கோவையில் கைது செய்தனர். இவர் போலீஸ் வேன் மூலம் கூடலூர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்படுகிறார். இவர் மீது ஏற்கனவே திருச்சபைக்கு சொந்தமான ரூ 3 கோடியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர் பேராயர் மாணிக்கம் துரை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமலர்