உன்னதமான ஒரு மனிதர்

''ஒருவரது மரணம் அவருக்கான முடிவு மட்டுமல்ல... அது ஒரு வகையில் மற்றவர்களுக்கானப் படிப்பினை. நேற்று வரை எலும்பும் சதையுமாக உயிர் உள்ள உறவாக உலவிய ஒருவர், பிணமாகக் கண்முன் விழுந்துகிடப்பதைக் காணும்போது வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பேராசையும் ஒரு கணத்தில் உடைத்துபோகும்!'' தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பாபு. இவர், காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைத் தொழிலாளி. ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பிரேதங்களைப் பரிசோதனை செய்த பாபுவிடம் அந்தத் தொழிலுக்கே உரிய பிரத்யேக கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதது மருத்துவமனை வட்டாரமே ஆச்சர்யப்படும் சங்கதி.

''தொழிலுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. நோயாளிகள் பிரிவில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ஆள் இல்லைன்னு சொல்லி மார்ச்சுவரியில் போஸ்ட்டிங் போட்டாங்க. அரசாங்க வேலைன்னு நினைச்சு வந்தா, இப்படி பிணத்தை அறுக்கச் சொல்றாங்களேன்னு ஆரம்பத்தில் அரண்டு போனேன். பிறகு அதுவே பழகிருச்சு. சின்ன வயசுல ரோட்ல விபத்து எதுவும் பார்த்தாலே மனசு பதறும். ஆனா, இப்போ தினம் தினம் பிரேதங்களுடன்தான் வாழ்க்கை. மாசத்துக்குக் குறைஞ்சது 15-ல் இருந்து 20 பிணங்களை அறுக்க வேண்டியது இருக்கும்

விபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைஞ்ச நிலையில் பாடிகளைக் கொண்டுவருவாங்க. சமயங்கள்ல நெருங்கிய சொந்தங்களால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல உறுப்புகளை ஒண்ணுசேர்த்து ஓரளவுக்கு முகத்தில் உருவத் தைக் கொண்டுவந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைப் பேன். அப்போ அந்தச் சொந்தக்காரங்க முகத்தில் வருத்தத்துக் கிடையிலேயும் தெரியுற ஆறுதல்தான், இப்போ வரை இந்தத் தொழில் மேல சலிப்பு இல்லாம என்னைவெச்சிருக்கு.


பொதுவாப் பிரேதப் பரிசோதனை செய்றவங்க மது சாப்பிட்டுட்டுதான் பிணத்தைத் தொடுவாங்க. வேலை செய் றப்ப மூச்சு விட முடியாம கெட்ட வாடை அடிக்கும். ஆனா, நான் மதுவை தொடுறது இல்லை. பிணமா இருந்தாலும் நேத்து வரைக்கும் அவங்களும் ஒரு மனுஷனா, கௌரவமா நடமாடிட்டு இருந்தவங்கதானே. தண்ணி அடிச்சிட்டு பிணத்தைத் தொடுறது அவங்களை அவமானப்படுத்துறது மாதிரின்னு நான் நினைக்கிறேன்.

யாரும் கேட்டு வராத அநாதைப் பிணங்களோட இறுதிச் செலவை, சமயங்கள்ல நானே ஏத்துக்குவேன். 'வாங்குற சம்பளத்தில் உனக்கு எதுக்குய்யா இந்த வேலை’ன்னு நண்பர் கள் கேட்பாங்க. 'ஏதோ என்னால் முடிஞ்சதை என் திருப்திக்காக செய்றேன்’னு சொல்வேன்!'' என்கிற பாபு, மார்ச்சுவரியில் வேலை பார்க்கிறார் என்பது அவர் பிள்ளைகளுக்கு இன்னமும் தெரியாதாம்.


''அட, நான் இந்த வேலைதான் செய்றேன்னு என் மனைவிக்கே ரொம்ப வருஷம் கழிச்சுத்தாங்க தெரியும். தெரிஞ்சதும் கோவத்துல மேல, கீழ எகிறிக் குதிச்சா. 'ஒண்ணு வேலையை விடு... இல்லேன்னா என்னை விட்டுடு’ன்னு கட்- அண்ட் ரைட்டா சொல்லிட்டா. இந்த வேலையில் இருக்கிற மனத் திருப்தியை அவளுக்குப் புரியவெச்சேன். இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணியில் என்னைக் குளிப்பாட்டிவிடுறது அவதான். பிள்ளைங்களுக்கும் நான் என்ன வேலை செய்றேன்னு தெரியாது. ஒரு நாளைக்கு அவங்களா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்!'' என்று புன்ன கைக்கிறார் பாபு.

''காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோ மேல ரயில் மோதி, நிறைய பேரு செத்துட்டாங்க. எல்லா பிரேதங்களும் இங்கேதான் வந்திச்சு. கை வேற, கால் வேற, தலை வேற... என் முன்னாடி பிரேதங்கக் குவிஞ்சுகிடந்தப்ப மனசுக்குள்ள சுரீர்னு ஒரு வெறுமை.

இன்னிக்கும் லீவு எடுத்து வீட்டுல இருக்கிறப்ப கூட, மார்ச்சுவரிக்கு உடல் வந்திருக்குன்னு தகவல் வந்தா, உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துருவேன். எனக்காகக் காத்திருக்கிறது இறந்த உடம்பு இல்ல. நேத்து வரைக்கும் ரத்தமும் சதையுமா நடமாடுன நம்மளப்போல ஒரு மனுஷன். இறுதி மரியாதைக் காக அந்த உடம்பு எனக்காகக் காத்திருக்கக் கூடாது. இது எனக்குத் தொழில் மட்டுமல்ல; என் மனைவி, பிள்ளைகளுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற விஷயம்!'' - தன்மையான குரலில் முடிக்கும் பாபு, தனக்காக அடுத்த உடலை காத்திருக்கவைக்க விரும் பாமல் விரைகிறார்!

முதல்வர் ஜெயலலிதா


* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளான அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க, அரசுப் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை வழங்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.


தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற புதிய துறை...
அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துறைக்கு 'சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்

Source : Vikatan.com

இவள் ஒரு தெய்வத்தாய் !



 ''அப்பப்பா... இதுகள வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியலடா சாமீ'' என்று பல சமயங்களில் குழந்தைகளைப் பற்றி அலுத்துக் கொள்வோம். இத்தனைக்கும் எப்போதும் ஓடியாடி, சுறுசுறுவென்று திரியும் குழந்தை களை வைத்துக் கொண்டே!
இங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, கொஞ்சம்கூட நடமாடவே செய்யாத மூன்று குழந்தைகளை, துளிகூட பாசம் குறையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார் கிராமத்து மணம் மாறாத வெள்ளந்தித் தாய்!



திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திராவுக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் செல்வி, செல்வம் மற்றும் சுகன்யா மூன்று பேரும் முழுமையாக மூளை மற்றும் உடல் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக முடங்கியே கிடக்கின்றனர்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது சந்திராவின் சின்னஞ் சிறிய வீடு. உள்ளே நுழைந்தால்... சிறிய அறை ஒன்றில் வரிசை யாகப் படுத்திருக்கின்றன மூன்று குழந்தை களும். கண்களை அகல விரித்து நம்மை பார்த்து, ஏதேதோ சத்தத்தை எழுப்பி வரவேற்கின்றன!


''வீட்டுக்காரர் கொத்து வேலை செய்றார். கல்யாணமான ஒரு வருஷத்துக்குப் பிறகு, முதல்ல செல்வி பொறந்துச்சு. எல்லா குழந்தைங்கள மாதிரிதான் நடமாடிட்டிருந்தா. ஆனா, நாளடைவுல கால், கைகள்ல அசைவு இல்லாம இருந்ததால டாக்டர்கிட்ட காட்டி னோம். அப்போதான்... பிறவியிலயே உடல் வளர்ச்சி முறையா இல்லைங்கறது  தெரிஞ்சுது'' விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்த சந்திரா...
''ஆண்டவன் விட்ட வழினு மனசை தேத்திக் கிட்டு வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா, அடுத்தடுத்து பிறந்த ஆணு, பொண்ணுனு (செல்வம் மற்றும் சுகன்யா) ரெண்டு குழந்தைக்கும் அதே கதிதான். மனசொடிஞ்சு போன வீட்டுக்காரர் குடிக்க ஆரம்பிச்சார். அதனால, தினமும் வீட்டுல சண்டைதான். 'தற்கொலை செஞ்சுக்குவோம்'ங்கற நினைப்பு கூட வந்திருக்கு. ஆனா, 'இந்தக் குழந்தைங்கள யார் காப்பாத்துவா?'னு நினைக்கும்போதே... அந்த நினைப்பெல்லாம் ஓடிடும்.
எட்டு வருஷத்துக்குப் பிறகு, நாலாவதா பெண் குழந்தை (அந்தோணியம்மாள்) பிறந்தா. நல்லவேளையா எந்தக் குறையும் இல்ல. வள்ளியூர்ல இருக்கற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஏழாவது படிக்கறா. எங்க சோகத் தைப் பார்த்துட்டு, ஃபீஸ் செலவையெல்லாம் ஸ்கூல் நிர்வாக பாத்துக்குது. அவள நல்லா படிக்க வெச்சு, நடமாட முடியாம கிடக்கற மத்த குழந்தைங்கள கவனிக்கற அளவுக்கு உருவாக்கணும்கறதுதான் என்னோட ஆசை'' என்று சொல்லும் சந்திராவுக்கு, அடுத்ததும் ஒரு சோகம்!
''இனி, நல்லபடியாதான் குழந்தை பொறக் கும்னு அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு குழந்தை (அந்தோணிராஜ்) பெத்துக்கிட்டோம். ஆனா, பழையபடியே பிரச்னை. நடமாட முடியாம, பேச்சும் சரியா வராம அவதிதான். உள்ளூர் ஸ்கூலுக்கு நான் தூக்கிட்டுப் போய் உட்கார வெப்பேன். சுவத்துல சாய்ஞ்சுகிட்டு உட்கார்ந்திருப்பான். ம்... நல்லா படிக்கறதா டீச்சர் சொல்றாங்க'' என்று பெருமூச்சு விடுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குழந்தைகளுக்குமே அந்தச் சின்னஞ்சிறு அறைதான் உலகம். பசித்தால் அழ வேண்டும் என்பதுகூட சொல்லத் தெரியாமல் வளர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு... நேரம் தவறாமல் படுக்கையிலேயே ஊட்டிவிடுகிறார் சந்திரா. 'ஜீன்களின் கோளாறு... சொந்தத்தில் திருமணம் முடித்தது' என்றெல்லாம் டாக்டர்கள் காரணம் சொல்கிறார்களாம். ஆனால், இதுதான் என்று உறுதிப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு நேரமோ, வசதியோ, வாய்ப்போ இல்லாமலிருக்கிறார் சந்திரா.
''ஊரைவிட்டு வெளியில போய் 20 வருஷமாச்சு. உள்ளூர் விசேஷத்துக்கு மட்டும் போயிக்கிட்டிருந் தேன். ஒரு தடவை, 'இப்படிப்பட்ட பிள்ளைகளை வீட்டுல வெச்சுக் காப்பாத்தி என்ன பிரயோஜனம்? பேசாம கொன்னு போட்டுடு’னு நெஞ்சுல இரக்கமே இல்லாம சிலர் சொல்லவும்... அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன். அதிலிருந்தே எதுக்கும் போறதில்ல'' என்று குமுறுகிறார் சந்திரா.
''இந்தக் குழந்தைகளை நாங்கள் பராமரிக்கிறோம்... நிறைய பண உதவி செய்கிறோம்... ஏ.சி. அறையிலயே குழந்தைகள தங்க வைக்கலாம்... வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வரும்'' என்றபடி பலரும் அணுகியபடியே இருக்கின்றனர்.
அவர்களுக்கெல்லாம் இந்தத் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே பதில் -
''நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்.

- If God Is Great Mother is Greatest.

அதேநேரத்தில். இப்படிப்பட்ட நிலமைக்கான காரணத்தைய்ம் ஆராய வேண்டியிருக்கிறது.
1) படிப்பறிவு இல்லாமை
2) அடிப்படை மருத்துவ வசதி இல்லாத்து
3) மிதமிஞ்சிய நம்பிக்கை- பிரச்சினையுடன் பிறந்த மூன்று குழந்தைகளுக்குப் பிறகும் நான்காவது குழந்தை பெற்றுக்கொண்டது; கடவுளின் அருளால் குறை ஏதும் இல்லாமல் இருப்பதை நினைத்து திருப்தி அடையாமல் மறுபடியும் ஒன்று தேவையா?

"நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்."- இதெல்லாம் காட்க நல்லாத்தான் இருக்கு! ஆனால் உங்களுக்குப் பிறகு இவர்களை யார் கவனிப்பார்கள்? அதற்காக எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்துவிட்டு போகப்போகிறார்கள்? என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு பொறுப்பில்லாத தாயாகவேத் தோன்றுகிறார்.

மனித கொல்லிகள்! -எண்டோசல்ஃபான்


 1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது!
சிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டி காவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.
கடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன.

மாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எண்டோ சல்ஃபானைப் பயன்படுத்தும் அனுமதியைப் பெற்று இருக்கிறது இந்தியா. இதற்கு நம்முடைய அரசு சொல்லும் சப்பைக்கட்டு, மாற்றுப் பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் இல்லை என்பது!
இயற்கை வேளாண்மையில், காலங்காலமாக மூலிகைப் பூச்சி விரட்டியை நாம் பயன்படுத்து கிறோம். நவீன வேளாண்மையிலும்கூட, வேப்ப எண்ணெய் கலந்து அடி உரம் இட்டால், பூச்சி கள் அண்டாது. இப்போதுகூட, ஆந்திரத்தில் அரசே நூற்றுக்கணக்கான கிராமங்களை இயற்கை வேளாண்மைக்குத் திருப்பி வெற்றி பெற்று இருக் கிறது. ஆக, உண்மையான காரணம் மாற்று இல்லை என்பது அல்ல. இந்தியாவில் ஆண்டுக்கு, 8,500 டன் எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படு கிறது.  4,000 கோடி இந்தத் தொழிலில் புரளு கிறது. காசு அரசின் கண்களை மறைக்கிறது!
இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, கேரளத்தில் காசர்கோடு பகுதியில் பலர், புற்றுநோய், மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடல் ஊனம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்கள். மண்ணே நஞ்சானது. கடும் எதிர்ப்பால் கேரளம், எண்டோசல்ஃபானுக்குத் தடை விதித்தது. தொடர்ந்து, கர்நாடகமும் தடை விதித்தது. இந்தத் தடை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், விஷத்துக்கு ஆதரவாகவே முடிவு எடுத்திருக்கிறது அரசு.
இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

Thanks : Vikatan


பாரக் ஒசாமா (அ) ஒபாமா பின்லேடன் என்கிற அமெரிக்க அதிபருக்கு ஒரு மடல் ...


அன்புள்ள அமெரிக்க  பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். 

தாங்கள் எப்போதும் நலம் என அறிவேன்.   கடந்த சில தினங்களாக தாங்கள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் சூப்பர் மேன் அளவுக்கு புகழப்படுவது அளவுக்கு அதிகமாகவே நடக்கிறது. ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் பத்திரத்தில் தாங்கள் கையெழுத்திட்டதன் விளைவு இது. ஏதோ ஒசாமாவை கொலை செய்ததுடன் உலகில் இனி தீவிரவாதமே நடக்காது என்பதாக பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. 

பின்லேடன் கொலையை தாங்கள்  தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் நேரடி ஒளிபரப்பில்  பார்த்ததை எங்கள் ஊர் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்தன. உங்களுக்கே அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்கிறேன். பின்லேடனின் கடைசி நிமிடம் என எங்கள் பத்திரிகைகள் பிரசுரம் செய்ததை படித்திருந்தால் உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும். அந்த அளவு புலனாய்வு புலிகள் எங்கள் ஊரில் இருக்கின்றனர். இது இருக்கட்டும்.      

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாட்டில் அடுக்கடுக்காக மூடப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள், இதையொட்டி எழுந்த வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளில் சரிந்திருந்த உங்கள் செல்வாக்கு இந்த கொலையின் மூலமாக உயர்ந்திருப்பதாக உங்கள் ஊர் ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதை அப்படியே எங்கள் ஊர் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. இதுவெல்லாம் உண்மைதானா ஒபாமா? உங்கள் நாட்டில் அதற்குள்  அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே? ஒசாமாவை வைத்துதான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், அவர் இருந்தாலும், இறந்தாலும்.      

இரட்டை கோபுர கொடூரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷ கூச்சலிடுகின்றனர். கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர்.  இல்லை அதிபரே! திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக்கிறீர்கள் என்பது என்னை போல உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்? 

உங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே? முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா? ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி  நுழைந்தது சரியா? எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? நாளை நீங்கள் வேறு ஒருவனை பிடிக்க இந்தியாவுக்குள்ளும் நுழை வீர்கள்தானே?

இரட்டைகோபுர தாக்குதல் நடந்தவுடன் உங்கள் நாட்டின் அன்றைய அதிபர் ஜூனியர் புஷ், பின்லேடனை பிடிக்க உத்திரவிட்டார். ஒன்று அமெரிக்கா பக்கம் நில்லுங்கள் அல்லது நீங்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என கொக்கரித்தார்! பின்லேடனை பிடிக்க புறப்பட்ட உங்கள் நாட்டின் படைகள் அவரது சிகையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் தாலிபான்களை வீழ்த்துவதும், அங்குள்ள பெண்களை பர்தாவுக்குளிருந்து பாதுகாப்பதுமே எங்கள் கடமை என்றார். அன்று ஆப்கானுக்குள் நுழைந்தீர்கள்.. இன்று பாகிஸ்தான்.

அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தால், ஒரு சர்வதேச குற்றவாளியை கொன்றதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறீர்கள். கேள்வி, ஒசாமாவை கொன்றதல்ல, அத்துமீறி ஒரு நாட்டில் நுழைவதுதான். சரி உங்கள் நாடு செய்திருக்கிற படுகொலைகளை பட்டியல் போட்டு உங்கள் நாட்டுக்குள் கைது செய்ய புகுந்தால் அதிகாரத்தில் இருப்போரில் எத்தனை பேர் மிஞ்சுவீர்?

1991 ஆம் ஆண்டு சீனியர் புஷ் இராக்கில் நடத்திய தாக்குதலில் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அமெரிக்க சி.ஐ.ஏ விடம் பயிற்சி பெற்றவர்களால் கொல் லப்பட்ட 1,50,000 ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசிய அணு குண்டுகளால் கொடூரமாக அழித் தொழிக்கப்பட்ட மூன்று லட்சம் ஜப்பானிய மக்களுக்கும், வியட் நாமில் நேபாம் குண்டுகளுக்கு இரை யான அப்பாவி மக்களுக்கும், 1989ல் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்படு அகதிகளாக்கப்பட்ட பனாமா மக்களுக்கும், உங்களை ஆதரிக்கவில்லை என்ற ஒரே கார ணத்திற்காக இராக், கியூபா போன்ற நாடுகளுக்கு உணவும், மருந்தும் கிடைப்பதை தடைசெய்து அதனால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் என்று எல்லோரும் புறப் பட்டால் உங்கள் கதி என்னாகும் அதிபரே!

இவற்றையெல்லாம் விடுங்கள், இப்போது உங்கள் நாட்டின் முக்கிய அலுவலகங்கள் இருக்கிற சான் டாஃபே நகரத்தின் கதை தெரியுமா? அங்கு இருந்த பல லட்சக்கணக் கான அமெரிக்க பூர்வகுடி மக்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களது சடலத்தில் எழுந்த நகரம் இது என நீங்கள் அறிவீர்களா? இப்போது தெரிகிறதா உலகில் மிகப்பெரிய பயங் கரவாதிகளின் தலைவன் நீங்கள் என உங்களுக்கு இன்னும் உங்கள் பூர்வீகம் தெரிய வேண்டுமெனில் தென் அமெரிக்காவின் சிலி மட்டு மல்ல, குவாதிமாலா, ஈக்வடார், பிரே சில், பெரு, டொமினிக் குடியரசு, பொலிவியா, நிக்கரகுவா, ஹோண்டு ராஸ், பனாமா, எல்சால்வடார், மெக் ஸிகோ, கொலம்பியா போன்ற நாட் டின் மக்களைக் கேளுங்கள்.

இவை போதாது எனில் நைஜீரிய ஆற்றுப் படுகைகளில் வழிந்தோடும் நைஜீரிய மக்களின் உதிரம் உங்களுக்கு பதில் சொல்லும். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் டாலர்கள் உங்களை வளப்படுத்த அந்த இரத்தம் பயன்படுவதை அறிவீர்கள்தானே. உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும் அமேசான் காடுகளும் உங்கள் லாப வேட்டையின் பொருள் கூறும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகள் உங்கள் இராணுவ டாங்கிகளின் குழாய் வழியேதான் அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது என தெரியாமலா நீங்கள் அமெரிக்காவின் அதிபர் ஆனீர்கள்?  ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடி மைப்படுத்தி அந்த நாட்டின் வளங் களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடு ருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கிறீர்களே! இது தொடர் கதையாவது உங்கள் வியா பார உத்திதானே? தீவிரவாதம், பயங்கரவாதம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் காட்டியே லத்தீன் அமெரிக்கா துவங்கி பல உலக நாடுகளில் கொடூரமான அத்துமீறல்களை செய்தீர்கள்.

உங்களால் ஒசாமாவை உயிரோடு பிடித்திருக்க முடியும்தானே. இருந்தாலும் நீங்கள் உயிரோடு அவரை பிடிக்காமல் இருந்த காரணம் தெரியும். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள் ஊரில் சந்தன வீரப்பன் என்ற ஒருவர் இருந்தார். சாதாரண திருடனை சந்தனக் கட்டை திருட வைத்து அவர் மூலம் சம்பாதித்த வட்டங்கள், மாவட்டங்கள் துவங்கி பல அரசியல்வாதிகளும், அதிகாரபலத்தை கையில் வைத்திருந்த பலர் அவனை வளர்த்தனர் வீரப்பனால் அவர்களும் வளர்ந்தனர். இனி அவர் பேசினால் பிரச்சனை என்றதும் அவரை என் கவுண்டரில் முடித்தார்கள். அதுபோல ஒசாமா வாயை திறந்தால் உங்களது உண் மைகள் வெளியே வரும் என்பதால் உயி ருடன் பிடிக்க வாய்ப்பி ருந்தும் கொலை செய்தீர் கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதானா? எதுவா கினும் எங்கள் ஊர் இலக்கிய பாடலை உங்களுக்கு சொல்லி முடிக்க விரும்புகிறேன்.
காரியசான் எழுதிய சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது.

சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; 
நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; 
மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்; 
ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை. 

இந்த பாடலின் அர்த்தம் இது தான். சிலந்திக்கு அதன் முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும். அது போல உங்கள் நாட்டிற்கு உங்கள் கொள்கைகளே ஆபத்தை உருவாக்கும் என்பதை அறியாமல், உங்கள் வேட்டை நாய்களில் ஒன்றை கொன்றழித்துவிட்டு தீவிரவாதத்தை அழித்ததாக காட்சிப்படுத்துவது உலகை மட்டுமல்ல, உங்களையும் ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.

அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கருப்பர் என்ற பெருமை மட்டும் உங்களுக்கு போதுமெனில் இந்த கொள்கையை தொடருங்கள். அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்க னுக்கு பிறகு ஒரு மனிதன் அதிபரானது இதுதான் முதல் முறை என பெயரெடுக்க வேண்டுமெனில்.. கொஞ்சம் யோசியுங்கள். நன்றி அதிபரே.
 

திருப்பூரில் இரண்டு ஆண்டுகளில் 980 பேர் தற்கொலை

ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை திருப்பூர் நகரில் 980 பேர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மேற்கு மண்டல ஐ ஜி சிவனாண்டி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களில் இருந்து வேலை தேடி வந்த 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள்.

குறிப்பாக ஜாதி, மத பிளவுகளை மீறி கலப்பு மணம் புரிந்த ஆண்கள் சமூக அழுத்தங்களை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சமயமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் ஊதியப் பற்றாக் குறையாலும், கடன் தொல்லையாலும் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தொழற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இக்கூற்றை ஏற்றுமதியாளர்கள் மறுக்கின்றனர்.

பத்து பிரச்னைகளை பத்துப் பேர் அலசுகிறார்கள்!

விவசாயி கையில் விவசாயம் இல்லை!" -நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி

''தமிழக விவசாயிகளைப் பொறுத்த அளவில், தொடர்ந்து அமையும் எல்லா அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த ஆட்சியிலும் அது தொடர் கதை தான்!
ஜீவாதார நதி நீர்ப் பிரச்னைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இருக்கும் நீர்நிலைகளும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என்ற பெயரில் மேற்கொண்டு வரும் ராட்சசத் திட்டங்களுக்காக ஏரி, குளங்களைக் காவு வாங்கிவிட்டார்கள். சாலை ஓரம் இருந்த விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆசாமிகளால் சூறையாடப்பட்டு, வடிநிலங்களான தரிசுகளும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,737 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. ஆனால், அரசாங்கம் இந்த எண்ணிக்கையை வெறும் '3’ என்று சொல்கிறது. எண்ணிக்கையை மறைக்கலாம்... பிரச்னையை?
எந்த விஷயத்தையும் இந்த அரசாங்கம் விவசாயிகள் நலக் கண்ணோட்டத்தோடு பார்க்காது என்பதற்கு பனையேறிகள் பிரச்னையே உதாரணம். கோடிக்கணக்கான தென்னை, பனை மரங்கள் இருக்கின்றன தமிழகத்தில். தென்னம்பால், பனம்பால் (கள்) எடுக்க அனுமதித்தால், லட்சக்கணக்கான விவசாயிகள், பனையேறிகள் பயனடைவார்கள். ஆனால், விவசாயிகளின் நலனைவிட, சாராய அதிபர்களின் நலன்தான் முக்கியமாகப் படுகிறது ஆட்சியாளர்களுக்கு!
இயற்கைச் சீற்றங்களில் பறிகொடுத்து, உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பறிகொடுத் தது போக, இப்போது நிலத்தையும் பறி கொடுத்துக்கொண்டு இருக்கிறான் விவசாயி. போராடிப் போராடி அவன் ஓய்ந்துவிட்டான். இப்போது அவன் மௌனமாக இருக்கிறான். அது புரட்சியாக வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை!''


"இலவசங்கள் இழுக்கு!"
எம்.ஆர்.வெங்கடேஷ்,  தணிக்கையாளர் மற்றும்  பொருளாதாரக் கொள்கை ஆய்வாளர்.

''அத்தியாவசியப் பொருட்களை வாங்க வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியோ அல்லது கலர் டி.வி-யோ, பெரிய உதவியாகத் தான் இருக்கும். நல்லாட்சிக்கு இடையே இலவசங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 'இலவசம்’ என்ற போர்வை யில் ஜனநாயகத்தையே பாழாக்கிவிட்டது அரசு. 4,000 கோடிகளை கலர் டி.வி-க்கென ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தப் பணத்தை நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வேனும் எட்டப்பட்டு இருக்கும்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறது அரசு. சுதந்திரத்துக்குப் பிறகு, 65 ஆண்டுகளாக இன்னும் தங்களை ஏழைகளாகவே வைத்திருப்பதால் மக்களின் கோபம் அரசின் மேல் திரும்பி விடாமல் இருக்க, வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துகிறது அரசு. இதனால் நிகழ்ந்த தீமையின் விளைவு... வாக்களிப்பதற் குக்கூடப் பொதுமக்கள் அன்பளிப்பை எதிர்பார்க்கிறார்கள். தேசத்தை சுபிட்சம் ஆக்குவதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. சட்டம் - ஒழுங்கு, விவசாயம், தொழில், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு இடம் இல்லாத தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் மட்டுமே பிரதான இடம் பிடித்து இருப்பதைச் சாபக்கேடு என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வது?
2007 தேர்தலின்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை வைத்தே தனது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்து இருந்தது. ஆனால், அங்கே மக்கள் தெளிவாக காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் மண்ணைக் கவ்வவைத்தார்கள். அந்தத் தெளிவு இங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறதா? தொலை நோக்குடன் மக்களின் துயர் துடைப்பதற்கென அறிவிக் கப்படும் திட்டமாக இருந்தால், பொருளாதாரச் சுமையையும் கருதாமல், அதை வரவேற்கலாம். ஆனால், வாக்குகளை மட்டுமே குறி வைத்து அளிக்கப்படும் இலவசங் களால் ஜனநாயகத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுவதோடு, அந்தப் பொருளாதாரச் சுமை பிற்காலத்தில் பொதுமக்களின் மீதேதான் சுமத்தப் படுகிறது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். அரசிடம் இலவசம் பெற்ற 'நன்றி உணர்ச்சி’யினால், மக்களும் ஊழல்வாதிகள் ஆவது, தேசத்துக்கே பெரும் அவமானம்!''

 

இலவச தொலைக்காட்சிப் பெட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் .

கடந்த 23- ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி . மு . க .  செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது . அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும் , கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார் .

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர் , டி . வி . யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு , கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார் . ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார் .

அதில் ‘ மனிதனுக்கு டி . வி . என்பது பொழுதுபோக்கு சாதனம்தான் . ஆனால் அதைவிட முக்கியமானது உணவு , உடை , உறைவிடம் . தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா ? குறிப்பாக , விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா ?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி . வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது ? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்

தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள் . டி . வி . வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம் .

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
 அடையச் செய்திருக்கலாம் . இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம் . தரமான மருத்துவம் , கல்வி , மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும் .அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி . வி . முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம் . எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம் .

விலைவாசி உயர்வு , எரிபொருள் விலை உயர்வு , குடிநீர் பற்றாக்குறை , லஞ்சம் ,  ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி . வி . பார்க்க முடியும் ? எனவே எனக்கு இந்த டி . வி . வேண்டாம் .  முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும் , மரியாதையும் , அன்பும் உள்ளது .

எனவே , இந்த டி . வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன் . அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும் . அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும் . இந்தியா வல்லரசாகிவிடும் ’ என்று நீண்டது அந்த மனு . இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை . அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் . என்றாலும் அந்த மனுவையும் டி . வி . யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு .இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம் .

“ நான் ஒரு சாதாரண விவசாயி . விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் , ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான் .

இந்த நிலை , நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது .  எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது . ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .

சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு . ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி . வி . ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க . தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு .2 கோடி குடும்ப அட்டைக்கும் டி . வி . கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே .

கனத்த இதயத்தோடும் , வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி . வி .?  அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி . வி . பாத்து வேற சிரிக்கணுமாக்கும் . அதுனாலதான் நான் டி . வி . யை திருப்பிக் கொடுத்தேன் ’’  என்றார் .

டி . வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார் .

அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி . க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் . எனக்கான ஒரு டி . வி . யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’ என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை ...!

நாலு பேருக்கு நல்லதுன்னா... நான் வாயாடிதான்!

'தங்கச்சிப் பாப்பாவைத் தூக்கிச் சுமக்கிறது அக்கா பாப்பா!’
 என்று கல்யாண்ஜியின் கவிதை ஒன்றில் வரும். அந்த அக்கா பாப்பாபோல இருக்கிறார் நந்தினி. ஆனால், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த 'குழந்தைகள் கல்வி தொடர்பான பொது விசாரணை’யில் நாடு முழுவதும் இருந்து நீதிபதிகளாகப் பங்கெடுத்த பல அதிகாரிகள் மத்தியில், இந்த 14 வயதுச் சிறுமி யும் ஒரு நீதிபதியாகச் செயலாற்றினார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நந்தினி, கடந்த சில வருடங்களாக குழந்தைகள் நலனுக்காக 'தனி மனுஷி’யாகப் போராடி வருகிறார்.

''ஈரோடு மாவட்டம் ஏ.ஜி.புதூர்தான் என் ஊர். அப்பா, ஒரு விவசாயக் கூலி. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலைமையில், தொடர்ந்து என்னைப் படிக்கவைக்க முடியலை. ஏழாம் கிளாஸ் முடிச்சதுமே 'போதும்’னு சொல்லிட்டாங்க. படிக்க முடியாத வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், காட்டு வேலைக்குப் போகப் பழகிட்டேன். அப்போதான் 'ஸிணிகிஞி’ என்ற அமைப்பு, கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு இலவசமா டியூஷன் எடுக்கிறதாக் கேள்விப்பட்டேன். மரத்தடியில் சின்னதா லைட் போட்டு பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. வேலை எல்லாம் முடிச் சுட்டு ஆசையாப் போய்ப் படிப்பேன்.

என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, அந்த அமைப்பு நடத்தும் 'குழந்தைகள் பாராளுமன்றத்தில்’ என்னைப் பிரதம மந்திரியா தேர்ந்தெடுத்தாங்க. 'செய்யுறது காட்டு வேலை. நாம பிரதம மந்திரியா?’ன்னு எனக்கு ஒரே சிரிப்பா இருக்கும். ஆனா, அவங்க செய்யச் சொன்ன வேலைகள் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கு என்னவெல்லாம் கிடைக்கலையோ, அதை எல்லாம் மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கிற மாதிரி பண்ணணும். இவ்வளவுதான் வேலை. ரொம்ப ஆர்வமா செஞ்சேன். குழந்தைகளுக்கான சட்டங்கள், அரசாங்கம் என்னவெல்லாம் திட்டம் போடுது, அதை எப்படி நாம வாங்கிபயன் அடையுறது... இப்படிப் பல விஷயங் களைத் தெரிஞ்சுக்கிட்டேன். 'ஊருக்கு நல்லது செய்யப்போறவ, நாலெழுத்து படிச்சாத்தான் நல்லது’ன்னு அவங்களே என்னை கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு சேர்த்துவிட்டாங்க. படிச்சுக் கிட்டே ஊர்ல இருக்கும் குழந்தைகள்உரிமைக் காக வேலை பார்த்தேன். வேலைன்னா, சம்பளம் எல்லாம் கிடையாது. நானா ஆசைப் பட்டுத்தான் செஞ்சேன். ஆனா, ஊரில் உள்ள வங்க எல்லாம் நக்கலா, கிண்டலா சிரிச்சாங்க. ஆனா, அதைக் கண்டுக்காம, வேலை பார்க்கக் கிளம்பிருவேன்.

எங்க ஊரில் உள்ளவங்க யாரும் அதிகம் படிச்சவங்க இல்லை. அதுலயும் பொம்பளைப் புள்ளைங்களை ஏழு, எட்டு படிக்கவெச்சுட்டு, அதோடு நிறுத்திடுவாங்க. அவங்களை சாயங்கால நேரத்துலயாவது படிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு உருப்படியா ஒரு இடம் இல்லை. 'ஒரு சமுதாயக் கூடம் கட்டிக்கொடுத்தா, படிக்க வசதியா இருக்கும்’னு ஊராட்சி மன்றத் தலைவர்கிட்ட மனு கொடுத்தேன். மனுவை வாங்கிக்கிட்டு என்னை ஏற இறங்கப் பார்த்தவர், 'உன் வயசுக்கு நீயெல்லாம் மனு கொடுக்க வந்துட்டே. முதலில் மனுன்னா என்னன்னு தெரியுமா?’ன்னு கேட்டு சிரிச்சார். நான் பொறுமையா, மனுன்னா என்ன... ஊராட்சி மன்றத் தலைவர் மனுவுக்கு நடவடிக்கை எடுக்கலைன்னா, அடுத்ததா யார்கிட்ட மனு கொடுக்கணும்னு எல்லாத்தையும் சொன்னேன். அப்படியே மலைச்சு நின்னுட்டாரு.

சமுதாயக் கூடம் கட்டுறதுக்கு கலெக்டர்கிட்ட இருந்து ஆர்டர் வர்ற வரைக்கும் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கு நடையா நடந்தேன். இப்போ, சமுதாயக் கூடம் கட்டி முடிச்சு, புள்ளைங்க எல்லாம் அதுல உட்கார்ந்து தான் படிக்கிறாங்க.

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறதுனால, காலை யில் பள்ளிக்கூடம், சாயங்காலம் ஊர்ப் பிரச்னைன்னு நேரம் சரியா இருக்கு. இப்ப எங்க ஊரில் பள்ளிக்கூடம் போகாத பிள்ளை களே கிடையாது.

நான் ரொம்பப் படிச்சவ கிடையாது. எல்லா விஷயமும் தெரிஞ்சவளும் கிடையாது. என் வயசுக்கு எனக்கு என்ன தெரியுமோ, அதைத் துணிச்சலாப் பேசுவேன். இதனால் என்னை 'வாயாடி’ன்னு சொல்வாங்க. அந்தப் பேச்சுதான் இன்னிக்கு சமுதாயக் கூடத்தைக் கட்டுறதுக்குக் காரணம். இப்போ பொது விசாரணையில் கலந்துக்கிட்டப்போ, 'தமிழ்நாட்டுல உள்ள பல பள்ளிக்கூடங்கள் கூரைக் கொட்டகை, மரத்தடி களில்தான் செயல்படுது. இன்னும் பல ஊர்களில் ஆசிரியர்களே மாணவர்களைக் கழிவறை களைச் சுத்தம் பண்ணச் சொல்லிக் கட்டாயப் படுத்துறாங்க. இதை எல்லாம் ஏன் இன்னும் சரிபண்ணலை’ன்னு கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டேன். பஸ் விபத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் அநியாயமாசெத்துப் போறதுக்கு ஏன் கடுமையா நடவடிக்கை எடுக்கலைன்னு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டேன். எல்லாரும் 'நல்லா தைரியமா பேசினே’ன்னு பாராட்டினாங்க. ஆனால், நான் பாராட்டு வாங்குறதுக்காகப் பேசலை. எனக்குப் பிரச்னை தீரணும். அதுதான் முக்கியம்!'' - தீர்க்கமாக முடிக்கிறார் நந்தினி.


Thanks : Vikatan

அவதார் vs எந்திரன்

அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வீட்டில் அமெரிக்க ரசிகர்கள் ரகளை. கல்லடி. காரணம் எந்திரன் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் அவதார் , டைட்டானிக் போன்ற சாதாரண படங்களை பிரம்மாண்டம் என்று சொல்லி கேமரூன் தங்களை ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் அவரின் வீட்டை நாலா பக்கமும் தாக்குகிறார்கள்.

எந்திரனை பார்த்த கேமரூன் வெட்கி தலை குனிந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.  இனிமேல் தான் படம் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் ஷங்கரின் அடிப்பொடியாய் இருந்து பிறவி மோட்சம் அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் , புரூஸ் வில்ஸ் மற்றும் சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன்  போன்ற படங்களின் இயக்குனர்களும் எந்திரனை புகழ்ந்து தள்ளியதோடு ஷங்கரிடம் உதவியாளராக சேரவும் பலத்த போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். உலகில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை எனவும் இனியும் வரப்போவதில்லை எனவும் பாராட்டியுள்ளனர்.

மெக்சிகோ , கிரீன்லாந்து , ஐஸ்லாந்து , லிபியா , ருமேனியா , உகண்டா , மடகார்ஸ்கர்  தீவுகள் , ஆப்ரிக்க காடுகள் மற்றும் இன்னும் பெயரிடப்படாத நாடுகளிலும் எந்திரனை பார்க்க ரசிகர்கள் ஒரு வாரமாக காத்திருந்து படம் பார்த்து மகிழ்வதை கண்டு ஹாலிவுட்டே வாய் பிளந்துள்ளது.

இணையதளத்தில் ஒரு பரபரப்பான செய்தி பேசப்படுகிறது. மறைந்த பழம்பெரும் நடிகர் மர்லன்  பிராண்டோ ஆவி தன்னிடம் பேசியதாகவும் எந்திரனில் ரஜினியின் நடிப்பு பிரமாதம் எனவும் தான் அவரின் நடிப்பை பார்த்து பயந்து போய் இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆவியுடன் பேசும் சிலர் இணையத்தில் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொண்டனர்.

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களும் சன் பிக்சர்சின் பிரம்மாண்ட  தயாரிப்பை பார்த்து கவலை அடைந்துள்ளதால் கொஞ்ச நாட்களுக்கு தயாரிப்பை நிறுத்தி விட்டு சன்னிடம் படத்தயாரிப்பிற்கான பயிற்சி பெற்று பின் தயாரிப்பது என முடிவு செய்திருப்பதாக ஆங்கில செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த வருட ஆஸ்கர் விருதுகள் அனைத்தும் எந்திரனை தவிர வேறு படத்திற்கு கிடையாது என  ஆஸ்கர் கமிட்டியும் முன் கூட்டியே தெரிவித்து விட்டது.

இதனிடையே நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையாதிலிருந்து ஒரு அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க மட்டுமல்லாது சூரியன் , சந்திரன் , யுரேனஸ் , நெப்டியூன் புளூட்டோ போன்ற அனைத்து கிரகங்களிலும் பிய்த்துக்கொண்டு ஓடுவதாகவும் அங்கிருந்து எந்திரன் படப்பாடல்கள் ஒலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்கள் எவ்வளவோ மெனக்கெட்டு கண்டு பிடிக்க முடியாத வேற்று கிரக வாசிகளை எந்திரன் கண்டு பிடித்து கொடுத்துள்ளதாகவும் அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா , கிரீன்லாந்து போன்ற மனிதர் இல்லாத தீவுகளிலும் எந்திரன் சக்கை போடு போடுகிறது. அங்கே வசிக்கும் பனிக்கரடிகளும் , பெங்குயின்களும் வரிசை கட்டி படம்பார்த்து மகிழ்ந்து தங்கள் பிறவி மோட்சத்தை அடைந்துவிட்டதாக துள்ளி திரிகின்றன.

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு குறிப்பிட்ட செய்தியை வியந்து சொல்லியுள்ளார். அதாவது வாயால் உணர்ச்சி பற்றி சொல்லி கொடுத்ததுமே ரோபோ சட்டென்று புரிந்துகொள்வதும் , உணர்ச்சி வந்த உடனே அது காதல் கொண்டு விடுவதும் அதுவும் ஐஸ்வர்யாராயின் மேல் காதல் கொள்வதும் யாராலும் யோசிக்க முடியாத அற்புதமான இந்த
கதையை ஷங்கர் மூளைக்கு எப்படி தோன்றியது என்றுதான் வியந்து வியந்து பாராட்டி தள்ளுகிறார்.

இவ்வாறாக எந்திரன் வரலாறு படைத்தது வருகிறது.

இப்படிக்கு
சன்னின் விளம்பரத்தொல்லையால்
டிவியை கண்டாலே அரண்டு ஓடுவோர் சங்கம்

APPEAL TO MUSIC DIRECTORS –

Are Tamizh music directors too attached to their tunes and ignore proper deliverance of lyrics (Final output)?


Few examples (and actual list can be exhaustive) and listen to stated songs quietly and most importantly without bias:

1. ARR – Sivaji – “Sahana Sahana” – Male voice struggles so much and so many mistakes in Tamizh ucharippu. Where it is supposed to be “Semitha kadhal idhu...”, singer delivers as “Semithu kadhal idhu”....there is no meaning for this at all. Imagine Harish Raghavendra in the male portion. Song would have been a great treat. Still it is a hit, no doubt, however has justice been done?

2. ARR – Sivaji – “Vaaji Vaaji” – Female voice sings “azhagai as azhugai”...complete meaning changes. Imagine Mahathi & song would have gone to next level.

3. ARR – “Kilimanjaro song” – Chinmayi is the saving grace to be honest. Javed Ali has made so many mistakes and in fact, he says “sevaloda thangachiye...” where I believe it should have been “Evaloda thangachiye...”. Again "Zhu", "Zha" ucharippu taken its toll. Imagine Karthik or so many other Tamizh singers would have taken popularity to next level.

4. Ilaiyaraja – Thalapathi – “Yamunai aatrile” – Listen very carefully and mistakes in ucharippu can be spotted (ex: Instead of “Padhai parthida....singer sings as “pathai parthida..”). Imagine Chitra and it would have been top notch.

5. G V Prakash - Madrasapattinam – “Pookal pookum”. Such a great composition and male singer struggles so much to sing in Tamizh. “Zha”, “Zhu” ucharippu has been taken for granted. Can understand why a North Indian singer is roped in here, considering type of composition; however is it good to compromise on Tamizh ucharippu? Imagine Hariharan (who has both Hindi & Tamizh reach) for this song and it would have been a “National award” material for this year. An opportunity lost.

There are so many examples like this and such examples can be found for almost every Music Director. Film Director’s & Lyricists to raise their voice politely and not compromise on the final output. Also, they should not get intimidated by Music Director’s popularity, rather should strive for good team work. So much money is being spent on big movies; why compromise?

On the contrary, listen to unflawed outputs from Sankarabaranam, Sindhu Bhairavi, Salangai Oli etc...(just few samples and musical hits). Such quality of tunes & also right choice of singers. Eternal songs.

There are some director’s like Bharathiraja, Bala et al who are absolutely clear on their task and get best output without compromising on nativity or Tamizh ucharippu. Also Late director Jeeva has got good output from music directors.

As long as there is a thing called mind emanating "thoughts", there is going to be “ego”. As long as there is “ego”, there are going to be mistakes. So above mistakes are going to happen. Film director’s to make an effort to minimize demanding best final output from music director and have a say in choosing right singers. No offense meant in this article to music director’s as our Tamizh industry is doing great justice with some stunning numbers, however voice also needs to be raised to set right direction.

With humility,
DLN [D.Lakshminarasimhan]
United Kingdom
narasimhan_d@yahoo.com
Twitter: DLN_MK

Thanks : Behindwood

வந்தன சிவா

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

−க்கட்டுரையாசிரியரின் கருத்துக்களில் நவீன தொழில் நுட்பங்களை முற்றாக நிராகரிக்கும் போக்கு அவ்வப்போது வெளிப்பாட்டாலும், சுற்றாடலையும், மனிதகுலத்தையும் பற்றிய கரிசனை எதுவுமில்லாமல், அதிக லாப வேட்கை காரணமாக பல தேசிய நிறுவனங்கள் விஞ்ஞான தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதுபற்றி சிறப்பான முறையில் விமர்சிக்கப்படுவதுடன் −ப்போக்கிற்கு எதிராக சர்வதேசரீதியில் உருவாகி பலமடைந்து வரும் மக்கள் −யக்கங்கள் அடைந்துவரும் வெற்றிகள் பற்றிய சித்திரத்தையும் தருகிறது. உலகமயமாக்கலின் மற்றொரு கோரமுகத்தைத் தரிசிக்க முடிகிறது.

தண்ணீரைப் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அரிதான வளங்களை நிலையிருத்தலான முறையில் பயன்படுத்துவது தொடர்பான தங்கள் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் விரிவுரையிலிருந்து, நான் புரிந்து கொள்கிறேன்...

முதலில் நான் சந்தைகளை நேசிக்கிறேன் எனக்கூறி எனது பதிலை தொடங்குகிறேன். உள்ளூர் 'சப்ஜீகளை விற்பனை செய்யக்கூடிய, ஒருவர் பெண்களோடு அளவளாக்கூடிய, உள்ளூர் சந்தைகளை நான் நேசிக்கிறேன். உண்மையிலேயே வேதனையான விடயம் என்னவென்றால், சந்தை என்பது வாழ்க்கைக்கான கோட்பாட்டினை நெறிப்படுத்தும் ஒரே விடயமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான். அத்துடன் 'வோல் ஸ்ட்ரீட்' விழுமியத்தின் ஒரே மூலமாக மாறியுள்ளது. ஏனைய சந்தைகளும் விழுமியங்களும் காணாமற் போகின்றன. −வற்றையே நான் நிராகரிக்கிறேன். தண்ணீரின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால்கூட நீர்வளப்பேணலுக்கும், அரிதான அதனை முகாமைப்படுத்துவதற்குமான தீர்வு அதன் கடைசித் துளியைக்கூட விலை கொடுத்து வாங்கக்கூடியவர்களின் கரங்களிலே அதனை விடுவதல்ல. புதுப்பித்தல் என்ற எல்லைக்குட்பட்டவாறு நிலையிருத்தலாக அதனைப் பயன்படுத்துவதற்காக அதனை சமூகத்தின் கைகளிலேவிட வேண்டும். அது சந்தைத் தளத்திற்கு அப்பால் கொண்டு வரப்பட்டு சமூகத்திடம் மீண்டும் கையளிக்கப்பட்டு பொதுமையான முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும்.

நிலையிருப்பு சனத்தொகை −ல்லாத −டத்தில் நிலையிருப்பு அபிவிருத்தி நிலவ முடியுமா?

நிலையிருப்பற்ற சனத்தொகை அதிகரிப்பு (non sustainable population growth) என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் அறிகுறியாகும் என்றே நான் நினைக்கிறேன். சனத்தொகை அதிகரிப்பு என்பது சுயமாக தனி −லட்சணமாக ஏற்படுவதில்லை. −த் தரவுகளைப் பாருங்கள் 1800 வரை −ந்தியாவின் சனத்தொகை நிலையானதாக −ருந்து வந்தது. குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமையும் நிலங்கள் −ழக்கப்பட்டமையுமே சனத்தொகை அதிகரிப்பு தொடங்குவதற்கு ஏதுவாகின. −ங்கிலாந்தில் விவசாயிகளை பொதுநிலத்தை விட்டு வெளியேற்றிய பின்னரே மிகக்கூடிய சனத்தொகை அதிகரிப்பு வீதம் காணப்பட்டது. மக்களின் வளங்கள் −ழக்கப்படுவதுதான் ஜீவாதார தேடலை உருவாக்குகிறது. நிச்சயமற்ற சந்தையில் அன்றாட வேதனத்திற்காக விற்கவேண்டிய உழைப்பால் வளங்கள் பதிலீடு செய்யப்படுவதுதான் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. சனத்தொகை அதிகரிப்பு என்பது நிலையிருப்பற்ற அபிவிருத்தியின் விளைவாகும்.

விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவன் நான். உலகமயமாக்கல் −ல்லாத வேளையிலும் விவசாயிகள் சுரண்டலுக்கு உள்ளாகினர். உலகமயமாக்கல் நவகாலனியத்திற்கு −ட்டுச் செல்லப் போகின்றது என்ற தங்களது கருத்தை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், எம்மால் உலகமயாக்கலுக்கு வெளியே நிற்க −யலாது. உலக வர்த்தக அமையம் (WTO) ஒரு யதார்த்தமாகிவிட்டது - தாங்கள் கூறியதைப் போல எந்த ஒரு நாடும் அதிலிருந்து தப்பிவிடமுடியாது...

WTO விதிகள் கடதாசித்தாள்மீது எழுதப்பட்டவையே தவிர, நான் எனது விரிவுரையிலே குறிப்பிட்டதைப் போல, கடவுளால் வழங்கப்பட்டவை அல்ல. எனவே, அவை −ந்த மண்ணையும் கங்கைகளையும் போல மாற்றமுடியாத யதார்த்தங்கள் அல்ல. அவ்விதிகள் மாற்றப்படவேண்டியவை. 'சீட்டில்' மாநாடு கூறும் செய்தி −துதான். அதனை மாற்றுவதற்கான வழி யாதெனில் மக்களின் ஜீவாதாரங்களை கருத்திற் கொள்ளச் செய்வதும் வர்த்தகத்தின் ஒவ்வொரு படிநிலையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களிலும் வளங்களின் நிலையிருத்தலை கருத்திற் கொள்ளச் செய்வதுமாகும். அவ்விதிகள் நிலையிருத்தலையும் மக்கள் பாதுகாப்புடன் −ருக்கும் உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

−ந்தியாவில் விவசாயிகள் எதிரிடையான மானியத்தையே பெறுகிறார்கள்.. (உரிய) மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. அப்படியானால் அசமத்துவமான போட்டியாளர்கள் உலகமயமாக்கலை நோக்கிச் செல்வது எவ்வாறு?

உண்மையான பிரச்சினையே அதுதான். சமதையை ஏற்படுத்தும் தளம் ஒன்று எமக்கு வாய்க்கும் என்று எம்மிடம் கூறப்பட்டது. WTO வீதிகள் வரையப்பட்டபோது −ந்திய விவாசாயிகளுக்கு நீதியான சந்தை ஒன்று எமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. உருகுவே பேச்சுவார்த்தையுன் பின்னர் GATT ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை அந்த ஒரே ஒரு பிரதான காரணத்தை முன்வைத்தே −ந்தியா நியாயப்படுத்தியது. (ஆனால்) அது தலைகீழாக மாறிவிட்டது. எம்மிடம் −ப்போதிருப்பது மிகவும் அசமதையை ஏற்படுத்தும் தளமாகும். வடநாடுகள் அல்லது OECD நாடுகள் 343 பில்லியன் டொலர்களை மானியமாகக் கொடுக்கின்றன. உருகுவே பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற பின்னர் −ம்மானியம் உண்மையில் −ரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் −ந்தியா எதிரிடையான மானியமாக 25 பில்லியனை (மாத்திரமே) வழங்குகின்றது. −ங்கு ஒருவர் வடக்கு எவ்வாறு கூடுதலான மானியத்தை வழங்குகிறது என வாதமிடலாம். −வ்வாதம் வேறு திசைநோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும் என நான் கருதுகிறேன். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறு விவசாயிகளையும், மண்ணையும், நீரையும், உயிர்ப்பன்மயத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்பது... முழு தவறிழைக்கத்தக்க வர்த்தக அமைச்சர்களாலும் வர்த்தக செயலாளர்களாலும் வரையப்பட்ட வர்த்தகவிதிகளை... −வ் அசமத்துவமான நிலைத்தனமானது −ப் புவியையும் உற்பத்தியாளர்களையும் அழித்துவிடாமல் −ருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் மீள்வரைவது எவ்வாறு என்பது பற்றியே வாதிட வேண்டும்.

கலாநிதி சிவா அவர்களே, உற்பத்தித் திறன் குறைந்த பயிர் உற்பத்தி செய்வதும், உயிர்பன்மயத்தையும் உயிர்க்கரு திரள்வுகளையும் பேணுவதும் உண்மையிலே விவசாயினது பணியா? −ப்பணியை நிபுணர்களிடம் விடக்கூடாதா?

நல்லது. பெண்விவசாயிகள் என்ற நிபுணரிடம் அப்பணியை விட்டுவிடுவது பற்றி நான் பேசினேன். −துவரை எமக்கு உயிர்ப்பன்மயம் கிடைக்கப்பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் உயிர்ப்பன்மய நிபுணராக பெண்கள் - பால் பிரிவுப்படி - −ருக்க நேர்ந்ததுதான். சிறிய விவசாயிகளாக அவர்கள் உலகின் மிக வறிய பகுதியில் வாழ நேர்ந்ததுதான். ஏனெனில் அவர்களது நோக்கு நிலையில் அது அவர்களுக்கு உற்பத்தித்திறன் மிகுந்ததாக உள்ளது. ஒரு தனிஏகபோக வர்த்தக நிறுவனத்திற்கு அது உற்பத்தித் திறனற்றதாக −ருக்கலாம். ஏனெனில் அவற்றிற்குத தேவையானது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் சோளம் நட வேண்டும் அல்லது ஒவ்வொரு விவசாயியும் ஒரு மாநிலம் முழுவதிலும் கோர்னோலா வளர்க்க வேண்டும் என்பதாகும். ஆனால் அது உற்பத்தி திறன் மிக்கது. மிகச் சிறப்பான முறையில் நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி குடும்பத்திற்கு உணவூட்டவும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக்கூடிய சிறிதளவு உபரியைப் பெறவும், உங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பவும் போதுமானது. உண்மையில் சமூகங்களே −வ்வளங்களை எமக்காக காப்பாற்றி வைக்கின்றன. வேறு எவரது கரங்களிலும் அவை −ருக்கும்போது எம்மால் அதில் நம்பிக்கை வைக்க முடியாது.

நான் முன்னர் மன்சான்டோவுடன் பணியாற்றினேன். ஒரு சாதாரண வினாவை உங்களிடம் நான் வினைவ வேண்டும். உத்தேசமாக சமுதாய ஆளுகைக்குட்பட்ட சுற்றுவட்டாராம் ஒன்றை அதன் நிலையிருப்பை உறுதிசெய்யும் விதத்திலேயே அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்பட்டால், −ந்தியா போன்ற நாடுகளுக்கு தாங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

சமூகங்களை ஸ்தாபனப்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமும், ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள மக்களுக்கும் தகவல் சென்றடைவதை உறுதிப்படுத்துவதன்மூலமும், கூட்டு செயற்பாட்டின் மூலம் மாத்திரமே நிலையிருப்பு செய்யக்கூடிய வளங்களை கூட்டாக முகாமைப்படுத்தக்கூடிய விதத்தில், மக்கள் பங்கேற்கும் ஜனநாயக கட்டுமானத்திற்கூடாக அத்தகைய அளவுகோலை உருவாக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக நாம் ஈடுபட்டு வருகிறோம். என்னிடம் ஆழமான குழாய் கிணறு ஒன்றைத் தோண்டுவதற்கு தேவையான பணமும் அதிகாரமும் −ருந்தால் எனது மிகவும் வறிய பெண்மணி ஒருத்தியாகத்தான் −ருப்பாள். ஆகவே, ஒரு கிராமத்தின் நிலத்துகடியில் உள்ள நீர்வள பேணுகைக்கான ஒரே வழி காரஷ்−ல் தண்ணீர்ப் பஞ்சாயத்து செய்ததைப் போல செய்வதுதான் - நீரை வரையறைக்குட்பட்ட வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதே அதுவாகும். தாக்க விளைவுகளை மக்கள் உணரக்கூடிய விதத்தில் ஆளுகை முறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆகவே பன்பமுகப்படுத்தப்பட்ட, நேரடியான ஜனநாயகத்தை புனர்நிர்மாணம் செய்யவேண்டிய தேவை எமக்குள்ளது. பயிரிடுவோரை தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களாக கருதவில்லை. ஏனெனில் அவர்களது செயல்களின் விளைவுகள் அயலவர்களால் ராஜவண்ணத்துப் பூச்சியை நான் கொன்று விடுகிறேன். கூட்டுத்துவம் என்பது சமூகங்களின் ஒருமைப்பாடாகும். −வையை பிரதானமானவை - தனிமனித பயிரிடுவோன் அல்ல. −வையே தீர்மானம் நிறைவேற்றும் அடிமட்ட அலகுகளாகும். −வற்றிற்கே கூட்டுத்தாபனங்களும் அரசாங்கங்களும் பதிலளிக்க வேண்டும். சீட்டிலுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனை −துவாகும். சரியான −டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சரியான மட்டத்தில் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் கண்காணிப்பை வட்டாரமயப்படுத்தும் −ப்பரிசோதனையானது - எமது உயிருக்கு உலகமயமாக்கல் அச்சுறுத்தல் விடுத்தபோதும் - உலகெங்குமுள்ள சமூகங்கள் ஈடுபட்டு உருவாகிக் கொண்டிருக்கும் புதுவிதமான ஜனநாயக நிறுவனமாகும்


Source : http://www.aaraamthinai.com/interview/apr18vsiva.asp

நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!

மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.



சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.

இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.

கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...

 நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!


நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.




"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.

அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன்.

இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.

"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.
 
இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.


சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!

- குள.சண்முகசுந்தரம்


படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

***
ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.

அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.

கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...

உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.

"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்." - இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய... http://heroes.cnn.com/vote.aspx

நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/

இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

Source : Vikatan

என் கேள்விக்கு என்ன பதில்.

Touching SHORT FILM "AASAI"

Tamil Commercial Short film- thuru

Mittaai Veedu - by M.Balaji and team

Nice Short Film (Tamil)

Ramasway


வெற்றி

கோவையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அயன் படம் பார்ப்பதற்காக கோவை கங்கா தியேட்ட்ரில் டிக்கெட் வாங்க, எழுபது ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டர் பாயிலை கொடுத்திருக்கிறார்கள். அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக ஜெயராமன் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டு தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்கிறது.மிகுதியாக வாங்கிய காசுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன், வழக்கு செலவு ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்கும்.

எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200??

Source : cablesankar.blogspot.com

நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டு பிடித்த, நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.


இப்படி 53 நாட்கள் உறைய வைத்து, பின் அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து, பெண்ணின் கருப்பையில் வைத்தார். இந்தப் பரிசோதனை மூலம் 31 வயது பெண்ணுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வழிசெய்தார். ஆனால் எட்வர்ட்சின் சோதனை வேறு விதமானது. கருமுட்டையை உறைய வைக்கும் முறையை அவர் மேற்கொள்ளவில்லை. சினைப்பையில் இருந்து கருமுட்டைகளை வெளியே எடுக்கும் அவரது முறையும் மிகக் கடினமானதாக இருந்தது.எட்வர்ட்சுக்கு நோபல் கிடைத்தது. ஆனால் சுபாஷூக்கு, அவமானமும், வேதனையும் தான் கிடைத்தது.

இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட முதல் ஐ.வி.எப்., குழந்தை பிறப்பு சாதனையை நிகழ்த்திய டாக்டர். டி.சி.ஆனந்த் குமார், சுபாஷின் ஆய்வகக் கையெழுத்துப் பிரதிகள், ஆய்வுக் குறிப்புகள் மற்றும் மேற்கு வங்க அரசுடன் நடத்திய கடிதப் போக்குவரத்துகள் குறித்து ஆய்வு செய்து, 1997ல், "கரன்ட் சயின்ஸ்' இதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர்,"உலகிலேயே முதன்முறையாக ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெறுவது மட்டுமின்றி, கிரியோ பிரிசர்வேஷன் மூலம் கருவை உறைய வைக்கும் முறையையும் சுபாஷ்தான் வெற்றிகரமாக கண்டுபிடித்தார். ஆனால் அதற்கான உரிமையை நாம் இழந்து விட்டோம். அவருடன் பணியாற்றிய இந்திய மருத்துவர்களின் அறியாமை, அதிகார வர்க்கத்தின் பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் போக்கு ஆகியவை, நம் நாட்டின் ஒப்பற்ற ஒரு டாக்டரை இழப்பதற்குத்தான் வழிவகுத்தன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுபாஷ் முகர்ஜி தன் ஆய்வில் வெற்றி பெற்ற போது, மேற்குவங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நேரம். எல்லாத் துறைகளிலும் அரசியல் தலையிட ஆரம்பித்தது. நவீன அறிவியல் மற்றும் குழந்தைப் பேறு தொழில்நுட்பங்கள் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு கதிரியக்க டாக்டர், ஒரு மகப்பேறு நிபுணர், ஒரு பொதுடாக்டர் என மூன்று பேர் கொண்ட ஒரு கமிட்டியை அவரது பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்க அரசு நியமித்தது. கடந்த 1978, டிசம்பரில் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகம் நடத்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு சுபாஷூக்கு அழைப்பு வந்தும் கூட, மாநில அரசு அனுமதியளிக்கவில்லை. அறிவியல் பத்திரிகைகளில் இதுகுறித்து அவர் எழுதவும் அனுமதியில்லை. 1981, ஜூனில் சம்பந்தமில்லாத கண்மருத்துவத் துறைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவரது நண்பர்களில் ஒருவராகிய சுனித் முகர்ஜி கூறியதாவது: அவரது சோதனை மிகவும் எளிதானது. மிகச் சரியான விளைவுகளைத் தந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐ.வி.எப்., மருத்துவமனைகளும், இந்திய மருத்துவக் கழகத்தின் ஆராய்ச்சி வழிகாட்டல் நெறிமுறைகளும் இன்று, அவரது முறையின் வெற்றியை ஒப்புக் கொண்டுள்ளன. பங்குராவில் இருந்து கோல்கட்டாவுக்குத் தன் ஆராய்ச்சி பற்றிய பேப்பர் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு வார இறுதிநாளிலும் அலையாய் அலைந்தார். அவருடன் நான், மகப்பேறு நிபுணர் சரோஜ் கந்தி பட்டாச்சார்யா இருவரும் செல்வோம். அவருடன் இருந்தவர்கள் அவரை அழித்து விட விரும் பினர். நாங்கள் பலமுறை அவமானப்படுத்தப் பட்டோம். எவ்விதத்திலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இவ்வாறு சுனித் முகர்ஜி தெரிவித்தார்.

தொடர்ந்த அவமானம், புறக்கணிப்பின் காரணமாக மனம் வெறுத்துப் போன சுபாஷ் முகர்ஜி, 1981, ஜூலை 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். எட்வர்சுடன் தற்போது தொடர்பில் உள்ளவரும், முகர்ஜியை அறிந்தவரும், ஐ.வி.எப்., நிபுணருமான சுதர்சன் கோஷ் தஸ்திதார், "அவர் போன்றவர்கள் நிறைய சாதிக்க முடியும். அவர் இருந்திருந்தால் நோபலுக்குத் தகுதியானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்' என்றார்.


Source : Dinamalar