ஆறு வயது ஐன்ஸ்டீன்!




அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியச் சிறுவன் ஒருவன் ஐன்ஸ்டீனை விட அறிவுஜீவியாக திகழ்கிறான்.
பிரணவ் வீராவுக்கு வயது ஆறுதான். ஆனால் ஐ,க்யூ.,வோ 176! ஐன்ஸ்டீனுக்கு ஐ.க்யூ., அளவு 160 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
சிக்காகோ நகரில் வசித்துவரும் பிரணவ்வின் வாயில் அமெரிக்க அதிபர்கள அத்தனை பேரும் வந்து போகிறார்கள். ஏ,பி,சி,டி, யை இசட்டில் இருந்து தலைகீழாக தப்பாமல் சொல்கிறான். 2000ஆம் ஆண்டிற்கு முன்பாக ஏதோ ஒரு தேதியைச் சொன்னால், அது எந்தக் கிழமையில் வந்தது என அடுத்த நொடியில் சொல்லிவிடுகிறான். விடியோ கேம்களில் காட்டும் வேகத்தை வெளி விளையாட்டிலும் பிரணவ் காட்டுவதுதான் அதிசம் என்கிறார்கள்.
பிரணவ் நாலரை வயது குழந்தையாக இருக்கும் போது ஏ,பி,சி,டி, எழுத்துக்கள் கொண்ட பிளாக்குகளோடு விளையாடும் போதே அவனுடைய அறிவுத்திறன் பளிச்சிட்டதாக அவனுடைய பெற்றோர்கள் சொல்கிறார்கள். ஆல்பபெட் செட்களில் எந்தெந்த எழுத்துக்கள் ஒரே நிறத்தை கொண்டவை என்று பளிச்சென சொல்வானாம்.
”ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு ஆல்பபெட் செட்களின் மீது தனி ஆர்வம் இருந்துவருகிறது. பல்வேறு நிறங்களில், பல்வேறு அளவுகளில், பல்வேறு உலோகங்களிலான ஆல்பபெட் செட்களை அவன் சேர்த்து வருகிறான் என்ற பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள் பிரணவ்வின் பெற்றோர்களான பிரசாத் வீராவும், சுசீத்ரா வீராவும்.
பிரணவ் அவன் வயது ஒத்த குழந்தைகளைவிட படு ஷார்ப்பாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் அவனுடைய ஐ.க்யூ., அளவை அளக்க முடிவு செய்தனர். அதன்படி ஹைட் பார்க் என்ற இடத்தில் உள்ள பவர் எஜூகேஷனல் சர்வீசஸ் என்ற அமைப்புக்குச் சென்று பிரணவ்வின் ஐ.க்யூ., வை பரிசோதித்தனர்.
அந்தச் சோதனையில் தான் பிரணவ், 176 என்கிற அளவுக்கு ஐ.க்யூ., சக்தி படைத்தவன் என்பது தெரியவந்தது.
பிரணவ்விற்கு கல்விப் புகட்டும் மெக்கார்மிக் எலிமெண்ட்ரி பள்ளியின் ஆசிரியர் மார்சி டெய்லர் பிரணவ்வை அதிசயக் குழந்தை என்கிறார்.
”மற்ற குழந்தைகள் அறியாதவற்றையெல்லாம் அறிந்துகொள்வதும், அதை பகிர்ந்துகொள்வதும் பிரணவ்க்கே மிக்க சந்தோஷத்தைத் தருகிறது” என்கிறார் தாயார் சுசீத்ரா. அது சரி பிரணவ், உனக்க என்னவாக ஆசை என்று கேட்டால், ”விண்வெளி ஆராய்ச்சியாளனாகப் போகிறேன்” டாண் என்று சொல்கிறான் பிரணவ்.